Brocoli Soup for babies in tamil: சூப் ரெசிபியினை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது என்பது அவர்களது உடல் நலத்திற்கு ஆரோக்கியமான ஒன்றாகும். பலவிதமான சூப் வகைகளை இதற்கு முன் நாம் பார்த்தாலும் இன்று நாம் பார்க்கவிருக்கும் இந்த ப்ரக்கோலி சூப் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தகூடிய ஒரு அற்புதமான ரெசிபி ஆகும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ப்ரோக்கோலியில் வைட்டமின் சி,பீட்டா கரோட்டின், ஃபோலிக் ஆசிட் இரும்புச் சத்து,பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை இயற்கையிலேயே நிறைந்துள்ளன. எனவே இது உடல்நலத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய ஒரு காயாகும்.
மேலும் இதில் மிளகுத்தூள் மற்றும் பூண்டு போன்றவை சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் ஏற்படும் காலங்களில் இந்த சூப் நல்ல நிவாரணமளிக்கும்.மேலும் மிளகானது தொண்டை நிவாரணத்திற்கு ஏற்றதாகும்.
Brocoli Soup for babies in tamil:
தேவையானவை
- ப்ரோக்கோலி -10 இதழ்கள்
- வெங்காயம்- ½ நறுக்கியது
- பூண்டு- 2 பல் நறுக்கியது
- ஆலிவ் ஆயில் -1 டேபிள்ஸ்பூன்
- மிளகுத்தூள் -இம்மியளவு
செய்முறை
1.கடாயில் எண்ணெயை சூடாக்கவும்.
2.வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
3.ப்ரோக்கோலி சேர்த்து சில வினாடிகளுக்கு வதக்கவும்.
4.தண்ணீர் சேர்த்து 5 முதல் 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
5.கலவையை மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
6.மிளகுத்தூள் தூவவும்.
7.குழந்தைகளுக்கு இதமாக பரிமாறவும்.
ப்ரோகோலியானது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்துவதோடல்லாமல் கண்பார்வையினையும் மேம்படுத்துகிறது.மேலும் மலச்சிக்கல் மற்றும் இரத்தசோகை போன்றவை ஏற்படாமல் தடுக்கின்றது.
இத்தகைய சத்துக்கள் நிறைந்த இந்த ப்ரோகோலியினை குழந்தைகளுக்கு எட்டு மாதத்தில் நாம் அறிமுகப்படுத்துவதற்கு ஏற்ற அற்புதமான ரெசிபிதான் இந்த ப்ரோகோலி சூப்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
குழந்தைகளுக்கான ப்ரோக்கோலி சூப்
Ingredients
- 10 இதழ்கள் ப்ரக்கோலி
- 1/2 வெங்காயம்
- 2 பல் பூண்டு
- 1 ஆலிவ் ஆயில்
Leave a Reply