பட்டர் ஃப்ரூட் கூழ்
(குழந்தையின் 5-வது மாதத்தில்இருந்து தரலாம்)
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
இயற்கைப் படைத்த அற்புத உணவு, பட்டர் ஃப்ரூட். அதுவும் இது குழந்தைகளுக்கான சிறந்த உணவு என்று சொல்லலாம். கிரீம் போல, லேசான இனிப்பு சுவையுடன் வெண்ணெய் போன்ற பதத்தில் இருக்கும் இந்தப் பழம் பல் முளைக்காத குழந்தைகளுக்கான பெஸ்ட் உணவு. முதல் முறையாகத் திடஉணவுகளைக் கொடுக்கத் தொடங்கும்போது, பட்டர் ஃப்ரூட்டையும் தரலாம்.
பட்டர் ஃப்ரூட் கூழ் செய்வது எப்படி?
- பட்டர்ப்ரூட்(அல்லது) வெண்ணெய்ப் பழம் – பாதி
செய்முறை:
பழத்தைப் பாதியாக அறிந்து, அதை உள்பக்கமாக ஸ்பூனால் எடுங்கள். ஸ்கூப்போலப் பழத்தின் சதைப் பகுதி வரும். அதாவது, வெண்ணெய்ப் போலத் திரண்டு வருவதால் இதை வெண்ணெய் பழம் என்கிறார்கள். இந்தச் சதைப் பகுதியை ஒரு பாத்திரத்தில் போட்டு முள் கரண்டியால் நன்கு மசிக்கவும் அல்லது மிக்ஸியில் அரைக்கவும். அவ்வளவுதான். பட்டர் ஃப்ரூட் கூழ் தயார்.
பட்டர் ஃப்ரூட் தருவதன் பலன்கள் என்னென்ன?
- இதில் நல்ல கொழுப்பு இருப்பதால், குழந்தையின் சருமத்துக்கு நல்லது. ஆரோக்கியமான முறையில் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க உதவும்.
- பழத்தில் உள்ள சத்துகள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் நரம்பு மண்டலத்துக்கும் நன்மை பயக்கும்.
- மூளைச் செல்களின் வளர்ச்சி சீராக இருக்கும்.
- ஆன்டிஆக்ஸிடன்ட், ஆன்டி-மைக்ரோபியல், ஆன்டி-இன்ஃப்ளேமேஷன் இருப்பதால் வயிற்றிலிருக்கும் தொற்றுகள்கூட நீங்கும். நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும்.
- வைட்டமின் ஏ, பி6, கே, சி, இ, தாதுக்கள், கால்சியம், இரும்பு சத்து, பீட்டாகரோட்டீன், ஃபோலேட், பொட்டாசியம், கேரட்டினாய்ட் மற்றும் லூட்டின் போன்ற சத்துகள் அடங்கிய பெஸ்ட் பழம் இந்த வெண்ணெய்ப் பழம்.
- குழந்தைகளின் பார்வைத் திறனை மேம்படுத்தும்.
- ஃபோலேட் சத்து நிறைந்துள்ளதால் கர்ப்பிணிகளும் சாப்பிட்டு வர கருகலைவதுகூட தடுக்கப்படும்.
- குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால்கூட சரியாகி விடும்.
பட்டர் ஃப்ரூட்டை வாங்குவது எப்படி?
- கடைகளில் பட்டர் ஃப்ரூட் வாங்கும்போது அடர் பச்சை நிறத்தில் இருக்கும் பழங்களை வாங்குங்கள்.
- கைகளால் தொடும்போது அது கெட்டியாக இருக்க வேண்டும்.
- மிகவும் காயாகவும் அல்லது அதிகமாகப் பழுத்திருக்காமல் இருக்கும் பழங்களை வாங்குங்கள்.
************************
எந்த ஒரு புது உணவை கொடுப்பதாக இருந்தாலும் 3 நாள் விதிமுறையை பின்பற்றுங்கள்…
உங்கள் குழந்தைக்கு 6 மற்றும் 7 மாதங்களுக்கான உணவு அட்டவணை தேவையெனில் இங்கே கிளிக் செய்யுங்கள்.
மாத வாரியாக உங்களுக்கு டயட் சார்ட் தேவையெனில் எங்களை கூகுள் பிளஸ், ட்விட்டர், பின்ட்ரஸ்ட்டில் பின் தொடருங்கள். மை லிட்டில் மொப்பெட் பக்கத்தை, முகப்புத்தகத்தில் லைக் செய்யுங்கள்.
Leave a Reply