Carrot Finger Food for Babies: 8 மாத குழந்தைகள் விரலில் பிடித்து தானாகவே உண்பதற்கு ஏற்ற ஆரோக்கியமான கேரட் ஃபிங்கர்ஸ் ரெசிபி.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆறு மாத காலம் முதலாகவே குழந்தைகள் உண்பதற்கு ஏற்ற அற்புதமான காய்கறி என்றால் அது கேரட் தான்.உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி குழந்தைகளுக்கு திட உணவானது ஆறு மாத காலத்திற்கு பிறகு கொடுக்கப்படவேண்டும்.
முதன்முதலில் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கப்படும் போது கேரட்டினை மசித்து கொடுத்தால் அது குழந்தைகளுக்கு மிகச் சிறந்த முதல் உணவாக அமையும். மேலும் கேரட்டானது பல்வேறு ஊட்டச்சத்துக்களையும்,வைட்டமின்களையும், மருத்துவ குணங்களையும் தன்னகத்தே உள்ளடக்கியது.
குழந்தைகளுக்கு பொதுவாக நாம் உணவு ஊட்டுவதுதான் வழக்கம்.ஆனால் 8 மாத காலத்துக்கு பிறகு குழந்தைகளை தானாகவே உணவினை உண்ண பழக்கப்படுத்த வேண்டும்.இது உணவின் மீதான ஆர்வத்தை அதிகரிப்பதற்கு வழிவகை செய்யும்.
அப்படி குழந்தைகள் அவரது கைகளால் எடுத்து உண்ணும் உணவிற்கு பெயர்தான் ஃபிங்கர் பு ட்ஸ் என அழைப்பார்கள.இந்த கேரட் ஃபிங்கர் புட்ஸ் குழந்தைகளை தானாகவே உண்பதற்கு பழக்கப்படுத்தும் ஒரு ரெசிபி ஆகும்.
8 மாத குழந்தைகளுக்கு உப்பு சேர்க்கக் கூடாது என்பதால் இதில் உப்பு சேர்க்கவில்லை.இதை ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும் போது நீங்கள் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
கேரட் இயற்கையாகவே பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.அது குழந்தைகளுக்கு கீழ்க்கண்ட நன்மைகளைஅளிக்க வல்லது:
- பொட்டாசியம்,வைட்டமின் ஏ,வைட்டமின் பி, வைட்டமின் கே மற்றும் பல வைட்டமின்கள் கேரட்டில் அடங்கியுள்ளன.
- கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ குழந்தைகளுக்கு கண் பார்வை அதிகரிக்கும் இதனால் குழந்தைகள் பின்னால் கண்ணாடி அணிய தேவையில்ல.
- கேரட்டில் புரோட்டீன் அதிகம் உள்ளது.குழந்தைகளின் எலும்பை உறுதியாக்குகின்றது.
- புற்றுநோய் உருவாகாமல் தடுக்க வல்லது.
- உடல்நலத்திற்கு மட்டுமல்லாமல் சருமத்தையும் பளபளப்பாக்கும் தன்மை கேரட்டிற்கு உண்டு.
- கேரட் -2
- பட்டர் –1 டேபிள்ஸ்பூன்
- மிளகுத்தூள்–இம்மியளவு
- 2 கேரட்
- 1 டே.ஸ்பூன் பட்டர்
- இம்மியளவு மிளகுத்தூள்
- கேரட்டின் தோலை சீவி நுனி பகுதிகளை நறுக்கிக் கொள்ளவும்.
- கேரட் துண்டுகளை நீளவாக்கில் நறுக்கவும்.
- கடாயில் பட்டரை சூடாக்கவும்.
- நறுக்கிய வைத்த கேரட் துண்டுகளை சேர்க்கவும்.
- வதக்கவும்.
- மிளகு தூள் சேர்க்கவும்.
- குழந்தைகளுக்கான கேரட் பிங்கர்ஸ் ரெசிபி ரெடி.
Carrot Finger Food for Babies:
தேவையானவை
Carrot Finger Food for Babies:
செய்முறை
1.கேரட்டின் தோலை சீவி நுனி பகுதிகளை நறுக்கிக் கொள்ளவும்.
2.கேரட் துண்டுகளை நீளவாக்கில் நறுக்கவும்.
3.கடாயில் பட்டரை சூடாக்கவும்.
4.நறுக்கிய வைத்த கேரட் துண்டுகளை சேர்க்கவும்.
5.வதக்கவும்.
6.மிளகு தூள் சேர்க்கவும்.
7.குழந்தைகளுக்கான கேரட் பிங்கர்ஸ் ரெசிபி ரெடி.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Carrot Finger Food for Babies
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பிங்கர் ஃபுட்டினை எப்பொழுது குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்?
குழந்தைகள் உணவை தானாகவே கையில் எடுத்து உண்பதற்கு ஆரம்பிக்கும் பொழுது பிங்கர் புட்ஸ் கொடுக்கலாம். பொதுவாக 8 மாத காலத்தில் குழந்தைகள் கையில் உணவை எடுத்து சாப்பிட ஆரம்பிக்கும். எனவே அது சரியான காலகட்டம்.
கேரட்டை தவிர வேறு காய்கறிகள் கொடுக்கலாமா?
நீளமாக வெட்டி குழந்தைகள் சாப்பிடும் வகையில் காய்கறிகள் இருந்தால் அதனை பக்குவமாக செய்து கொடுக்கலாம்.
பழங்கள் கொடுக்கலாமா?
தாராளமாக கொடுக்கலாம். குழந்தைகளுக்கு எளிதில் மென்று சுவைப்பதற்கு ஏதுவாக உள்ள பழங்களான தர்பூசணி, வாழைப்பழம் போன்றவற்றை நீளமாக வெட்டி சாப்பிட கொடுக்கலாம்.
Leave a Reply