Chocolate Milk shake : சாக்லேட் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான விஷயம்தான் சாக்லேட் மில்க் என்றால் சொல்லவா வேண்டும். அதன் பெயரை கேட்டாலே ஆயிரம் வாட்ஸ் விளக்கு எறிவது போல குழந்தைகளின் முகம் முழுவதும் புன்னகை தவளும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆனால் கடைகளில் வாங்கும் சாக்லேட்டில் குழந்தைகளின் உடலுக்கு ஒவ்வாத சர்க்கரை சேர்ப்பதால் அவர்களின் உடலுக்கு நல்லதல்ல. அது மட்டுமில்லாமல் சாக்லேட் உட்கொள்ளும் பொழுது குழந்தைகளின் ஈறுகளுக்கும் பிரச்சனை ஏற்படும்.
இந்த பிரச்சனைக்கெல்லாம் தீர்வாக ஒரு ரெசிபி அமைந்தால் அம்மாக்களுக்கும் சந்தோசமாக இருக்கும் தானே. அதுவும் கடைகளில் இருப்பது போல சுவையான சாக்லேட் மில்கினை ஆரோக்கியமாக வீட்டிலே செய்தால் எப்படி இருக்கும்.
ஆம்.நீங்கள் நினைப்பது சரிதான். உங்கள் குழந்தைகள் அனைவரும் விரும்பும் சுவையான சாக்லேட் மில்கினை ஆரோக்கியமாக எப்படி செய்வது என்பதை தான் பார்க்கப் போகின்றோம்.கடைகளில் வாங்கும் ட்ரிங்குகளில் பிரசர்வேட்டிவ்ஸ் சுவையூட்டிகள் போன்றவை சேர்க்கப்படுவதுண்டு. ஆனால் வீட்டிலேயே செய்யும் சாக்லேட் மில்க்கில் கோக்கோ பவுடர் கொண்டு இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவதால் குழந்தைகளின் உடலுக்கும் தீங்கு விளைவிக்காது.
chocolate milk shake
chocolate milk shake
இதை பார்ப்பதற்கு முன்னால் இந்த ஹெல்த்தியான சாக்லேட் மில்கினை குடிப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகளைப் பற்றி பார்க்கலாம்:
Chocolate Milkshake
- கோக்கோ பவுடர் மற்றும் டார்க் சாக்லேட் போன்றவற்றில் இயற்கையாகவே ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் இருப்பதால் தீங்கு விளைவிக்கும் கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்ற வல்லது.
- இனிப்பு சுவைக்காக இதில் சேர்க்கப்பட்டிருக்கும் பேரிச்சம் பழத்தில் இயற்கையாகவே, வைட்டமின்கள், மினரல்ஸ்கள், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை அதிகம். எனவே இயற்கையாகவே உடலுக்கு நன்மை பயக்கக் கூடியது.
- இவை தவிர இதில் சேர்க்கப்பட்டிருக்கும் முளை கட்டிய ராகி மாவு உடலுக்கு நன்மை அளிக்கும் சிறுதானியம் ஆகும். இதில் இயற்கையாகவே நார் சத்துக்கள் நிறைந்துள்ளது.
- ராகியில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்களுக்கு நன்மை அளிக்கக்கூடியது.
- கோக்கோ பவுடர் மூளைகள் மற்றும் நரம்புகளின் வளர்ச்சிக்கு இயற்கையாக உதவுகின்றது. குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க வல்லது.
- சாக்லேட்டில் இயற்கையாக இருக்கும் வேதிப்பொருள் ஆனது மனதை இயற்கையாகவே மகிழ்ச்சியாக வைத்திருக்க வல்லது.
Chocolate Milkshake
- பேரிச்சை-7-8
- பால்- இரண்டரை கப்
- முளைகட்டிய ராகி மாவு பவுடர் -ஒரு டீஸ்பூன்
- கோக்கோ பவுடர் -இரண்டு டீஸ்பூன்
- நறுக்கிய டார்க் சாக்லேட்( கோக்கோ 80 சதவீதத்துக்கு மேல்)- இரண்டு டேபிள் ஸ்பூன்.
Chocolate Milkshake
செய்முறை
- பேரிச்சம் பழத்தை அரை கப் பாலில் பத்து நிமிடம் ஊறவைத்து பேஸ்ட் போன்று நைசாக அரைக்கவும்.
- பானில் ஒரு டீஸ்பூன் முளைகட்டி ராகி பவுடர், இரண்டு கப் பால் மற்றும் டீஸ்பூன் கோகோ பவுடர் ஆகியவற்றை சேர்த்து கலக்கி அடுப்பை ஆன் செய்யவும்
- அடிப்படை சிம்மில் வைத்து ஐந்து முதல் ஆறு நிமிடங்களுக்கு கலவையை இடைவிடாமல் கிளறவும். ராகி மாவு அடி பிடித்துக் கொள்ளும் என்பதால் இடைவிடாமல் கிளற வேண்டும்.
- இதனுடன் அரைத்து வைத்த பேரிச்சம்பழம், இரண்டு டேபிள் ஸ்பூன் நறுக்கி வைத்த டார்க் சாக்லேட் சேர்த்து சாக்லேட் உருகும் அளவிற்கு ஒன்று முதல் இரண்டு நிமிடங்களுக்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.
- குழந்தைகளுக்கான சுவையான ஹாட் சாக்லேட் மில்க் ரெடி.
கடைகளில் வாங்கி குடிப்பதால் முக்கிய உட்பொருளான சாக்லேட் மட்டுமே அதிகமாக கலந்து இருக்கும். ஆனால் வீட்டிலேயே செல்லும்போது செய்யும் பொழுது ஆரோக்கியமான பேரிச்சம்பழம்,ராகி மாவு ஆகியவற்றை சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு எத்தனை முறை கொடுத்தாலும் ஆரோக்கியமான ட்ரிங்க் கொடுத்த திருப்தி நமக்கு இருக்கும்.
chocolate milk shake
chocolate milk shake
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Chocolate Milkshake
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இந்த சாக்லேட் மில்கினை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
இந்த சாக்லேட் மில்க் வீட்டிலேயே இயற்கையான பொருட்களை வைத்து தயாரிக்கப்படுவதால் உடலுக்கு மிகவும் நல்லது.
கோக்கோ பவுடர் குழந்தைகளுக்கு நல்லதா?
கோக்கோ பவுடரில் இயற்கையாகவே ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளதால் உடலுக்கு நன்மை அளிக்கக் கூடியது.
இந்த சாக்லேட் மில்கினை பால் ஒவ்வாமை இருக்கும் குழந்தைகளும் அருந்தலாமா?
ஆம். இதில் அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை என்பதால் தாராளமாக ஒவ்வாமை இருக்கும் குழந்தைகளும் உட்கொள்ளலாம்.
ஆரோக்கியமான ஹாட் சாக்லேட் மில்க்
Ingredients
- பேரிச்சை-7-8
- பால்- இரண்டரை கப்
- முளைகட்டிய ராகி மாவு பவுடர் -ஒரு டீஸ்பூன்
- கோக்கோ பவுடர் -இரண்டு டீஸ்பூன்
- நறுக்கிய டார்க் சாக்லேட் கோக்கோ 80 சதவீதத்துக்கு மேல்- இரண்டு டேபிள் ஸ்பூன்
Notes
- பேரிச்சம் பழத்தை அரை கப் பாலில் பத்து நிமிடம் ஊறவைத்து பேஸ்ட் போன்று நைசாக அரைக்கவும்.
- பானில் ஒரு டீஸ்பூன் முளைகட்டி ராகி பவுடர், இரண்டு கப் பால் மற்றும் டீஸ்பூன் கோகோ பவுடர் ஆகியவற்றை சேர்த்து கலக்கி அடுப்பை ஆன் செய்யவும்
- அடிப்படை சிம்மில் வைத்து ஐந்து முதல் ஆறு நிமிடங்களுக்கு கலவையை இடைவிடாமல் கிளறவும். ராகி மாவு அடி பிடித்துக் கொள்ளும் என்பதால் இடைவிடாமல் கிளற வேண்டும்.
- இதனுடன் அரைத்து வைத்த பேரிச்சம்பழம், இரண்டு டேபிள் ஸ்பூன் நறுக்கி வைத்த டார்க் சாக்லேட் சேர்த்து சாக்லேட் உருகும் அளவிற்கு ஒன்று முதல் இரண்டு நிமிடங்களுக்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.
- குழந்தைகளுக்கான சுவையான ஹாட் சாக்லேட் மில்க் ரெடி.
Leave a Reply