Date Almond Milkshake for Toddlers
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பெரும்பாலான குழந்தைகள் பால் குடிப்பதை விரும்ப மாட்டார்கள். அதற்கு இந்த டேட்ஸ் அல்மோன்ட் மில்க் ஷேக் சிறந்த தீர்வாக அமையும் .சத்துக்கள் நிறைந்த அதே சமயம் குழந்தைகள் விரும்பி குடிக்கும் பானம் ஆகும். குழந்தைகளுக்கு காலை உணவோடு சேர்த்து கொடுக்கலாம்.
டேட்ஸ் –ல் உள்ள நன்மைகள்
- இரும்புசத்து நிறைந்தது
- உடனடி எனர்ஜியை அளிக்க கூடியது
- கல்லீரல் மற்றும் வயிற்றுக்கு நன்மை அளிக்க கூடியது
- மலச்சிக்கலை தடுக்க கூடியது
- கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்பு வளர்ச்சிக்கு ஏற்றது
- பல் வளர்ச்சிக்கு ஏற்றது
குழந்தைகளுக்கான டேட்ஸ் வாங்கும் போது ஆர்கானிக் டேட்ஸ் வாங்குவது சிறந்தது. கொட்டை இல்லாத மற்றும் மென்மையான டேட்ஸ் வாங்குவது நல்லது.டேட்ஸ்-ஐ ஊற வைத்து அரைப்பதற்கு பதிலாக ட்ரை டேட்ஸ் பவுடரை சேர்க்கலாம்.
Date Almond Milkshake
டேட்ஸ் அல்மோன்ட் மில்க் ஷேக் செய்ய தேவையானவை
- 10-12 – மென்மையான,கொட்டை நீக்கிய மற்றும் நறுக்கிய டேட்ஸ் அல்லது ட்ரை டேட்ஸ் பவுடர்
- பாதாம் – தோலுரித்தது (தோலை எளிதாக உரிப்பதற்கு வெது வெதுப்பான நீரில் ஊற வைக்கவும்) அல்லது ½ டே.ஸ்பூன் ட்ரை புரூட்ஸ் பவுடர்
- சூடான பால்- ¼ கப்
- குளிர்ந்த பால் – 1 ¾ கப்
- தேன்.
Date Almond Milkshake
செய்முறை
1.தோலுரித்த அல்மோன்ட் மற்றும் டேட்ஸ்-ஐ 30 நிமிடங்களுக்கு சூடான பாலில் ஊற வைக்கவும்.
2.அல்மோன்ட்ஸ் மற்றும் டேட்ஸ் -ஐ பாலுடன் சேர்த்து நைசாக அரைக்கவும்.
3.ப்ளெண்டரில் குளிரான பாலுடன் அரைத்த டேட்ஸ் மற்றும் கலவையை சேர்த்து நன்றாக கலக்கவும்.
4.தேன் சுவைக்கு ஏற்ப சேர்க்கலாம்.
ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தேன் உபயோகிப்பதை தவிர்க்கவும். இது குழந்தைகளுக்கு எளிதில் செய்யக்கூடிய சத்தான பானம் ஆகும். அல்மோண்டை ஊறவைத்து அரைப்பதற்கு பதிலாக ரெடியாக தயாரித்த ட்ரை புரூட்ஸ் பவுடரை சேர்க்கலாம்.கோடை காலத்தில் இதனோடு வெண்ணிலா ஐஸ் கிரீம் சேர்த்து கொடுக்கலாம்.கலவையை மேலும் கெட்டியாக மாற்ற வாழை பழத்தை சேர்க்கலாம்.
Leave a Reply