(குழந்தையின் 7வது மாதத்தில் இருந்து தரலாம்)
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
திராட்சை ஜூஸ்
Grape juice
- திராட்சை – 4 முதல் 5
செய்முறை :
- ஒரு பாத்திரத்தில் 50மில்லி தண்ணீரை எடுத்துக் கொண்டு அதனை கொதிக்க வையுங்கள்.
2. பின் அடுப்பை அணைத்து விட்டு இதில் நன்றாக கழுவிய திராட்சைகளை போட்டு பாத்திரத்தை மூடிவைத்து விடுங்கள்.
3. சிறிது நேரம் ஆன பிறகு திராட்சையின் தோலை உரித்து விட்டு தண்ணீருடன் சேர்த்து திராட்சையை நன்றாக மசித்துக் கொள்ளுங்கள்.
4. பிறகு திராட்சை ஜூஸை குழந்தைக்கு பரிமாறலாம்.
தெரிந்து கொள்ள வேண்டியது :
விதையில்லாத திராட்சைகளை வாங்குங்கள். திராட்சையின் மேல் பகுதியில் கருப்பு நிற திட்டுகள் எதுவும் இல்லாமல் பார்த்து வாங்குங்கள்.
வாரத்தில் ஒருமுறை திராட்சை ஜூஸை நீங்கள் தரலாம்.
திராட்சையில் இரும்புச்சத்து, காப்பர் மற்றும் மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துகள் நிரம்பியிருக்கிறது. இவை அனைத்தும் உடலுக்கு தேவையான சத்துகளை வழங்குகிறது.
மேலும் இதில் வைட்டமின் சி சத்தும் உள்ளது. .
“குழந்தைக்கு முதலில் திராட்சை ஜூஸ் கொடுக்கும் போது 2 டேபிள்ஸ்பூன் அளவு கொடுக்கவும். 8 மாதங்களுக்கு பிறகு அதனை 90 மில்லியாக மாற்றிக் கொள்ளலாம்”
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply