Eggless Carrot cake:
Table of Contents
hide
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
Eggless Carrot cake :
பொதுவாக கேக்குக்கு மைதாவும் முட்டையும் சேர்க்கப்படுவது வழக்கம். அது சுவையைத் தருவதோடு மென்மையையும் தரும். ஆனால், குழந்தைக்கு கொடுக்கப்படும் கேக் என்றால் மைதா சேர்க்க கூடாது என்பதால் கோதுமை மாவு சேர்த்திருக்கிறோம். இந்த ஜூஸி யம்மி கேரட் கோதுமை கேக் செய்வது எப்படி எனப் பார்க்கலாமா…
கேரட் கோதுமை கேக் ரெசிபி
- முழுதானிய கோதுமை மாவு – 1 கப் + 1டேபிள்ஸ்பூன்
- துருவிய கேரட் – 1 கப்
- கேஸ்டர் சர்க்கரை – ½ கப்
- பிரவுன் சுகர் – 3 டேபிள்ஸ்பூன்
- பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்
- பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன்
- பட்டைத் தூள் – 1 டீஸ்பூன்
- எண்ணெய் – ¼ கப்
- வென்னிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்
- பால் – 1 கப்
செய்முறை
- துருவிய கேரட்டில் கோதுமை மாவு ஒரு டேபிள்ஸ்பூன் அளவுக்குக் கொட்டி அதை பிரட்டிக் கொள்ளவும். இப்படி செய்தால் கேரட் ஒட்டிக் கொள்ளாமல் மாவோடு நன்கு கலந்துகொள்ளும்.
- கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, பட்டைத் தூள் கலந்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பவுலில் எண்ணெய், சர்க்கரை (இரண்டும்), வெனிலா எசன்ஸ் கலந்து வைக்கவும்.
- சர்க்கரை நன்கு கரையும் வரை நன்றாகக் கலக்க வேண்டும்.
- இப்போது கலந்து வைத்துள்ள மாவுடன் பாலும் சிறகச் சிறுக கலக்கவும்.
- இந்த மாவில் இப்போது கேரட்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- மாவு கரண்டியில் எடுத்தால் கீழே விழும் பதத்துக்கு இருக்க வேண்டும். இந்தப் பதத்துக்கு வர பாலைச் சேர்த்துக்கொள்ளலாம்.
- ஒவனில் வைக்கும் பாத்திரத்தில் நெய்யைத் தடவிய பிறகு இந்த மாவை ஊற்றி, 40 நிமிடங்களுக்கு வைக்கவும்.
- ஒவனில் வைத்த பிறகு அடிக்கடி கேக்கைப் பார்த்துக்கொள்ளவும். ஏனெனில் ஒவ்வொரு ஒவனுக்கும் ஹீட் வேறுப்படும் என்பதால் அதற்கு தகுந்ததுபோல வைக்கவும்.
பலன்கள்
- கேரட்டில் உள்ள சத்துகள் பார்வைத் திறனை மேம்படுத்தும்.
- ஆரோக்கியமான கேக் என்பதால் 8 மாத குழந்தைகள் முதல் இதைச் சாப்பிடலாம்.
- கோதுமை மாவு சேர்த்திருப்பதால் உடலுக்கு நல்லது.
- உடல் எடை சீராக பராமரிக்க உதவும்.
- சுவையும் சத்துகளும் இதில் அதிகம்.
மற்ற கேக் வகைகளுக்கு இங்கு க்ளிக் செய்யுங்கள்
ரெசிபிகளை காண வேண்டுமா? இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply