Fruit Smoothies: குழந்தைகளுக்கு காய்கறி மற்றும் பழங்களில் தான் வைட்டமின்களும் ஊட்டச்சத்துகளும் அதிகம் என்பது நாம் அறிந்த விஷயம்தான். ஆனால் அதை குழந்தைகளுக்கு கொடுப்பதே அம்மாகளுக்கான பெரும் சவாலாக இருக்கின்றது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
எனவே அதனை அப்படியே குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களுடன் போராடுவதை காட்டிலும் சாலச் சிறந்தது அதனை அவர்களுக்கு விரும்பும் வகையில் எவ்வாறு கொடுக்கலாம் என்பதே.
குழந்தைகளுக்கு பிடிக்காததை கொடுத்து வெறுப்பை உண்டாக்குவதை காட்டிலும் அதனை அவர்களுக்கு பிடித்த வண்ணம் எப்படி சரியாக செய்து கொடுப்பது என்ற தந்திரத்தை நாம் சரியாக கடைபிடித்தால் குழந்தைகளுக்கு உணவின் மீதான நாட்டமும் அதிகரிக்கும்.
அப்படி காய்கறி மற்றும் பழங்களை குழந்தைகளுக்கு விருப்பப்பட்டவாறு கொடுப்பதற்கு ஏற்ற ரெசிபி தான் இந்த ஸ்மூத்திகள். குழந்தைகளுக்கு பொதுவாக ஜூஸ் மற்றும் ஐஸ்கிரீம் என்றால் அலாதி பிரியம் தான் அதுவும் இந்த கோடை காலத்தில் சொல்லவா வேண்டும்.
கடைகளில் விற்கப்படும் பிரசர்வேட்டிவ்ஸ் கலந்த ஜூஸ் வகைகளை கொடுப்பதைக் காட்டிலும் இவ்வாறு பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு நாம் ஸ்மூத்திகளை டேஸ்டியாக செய்து கொடுத்தால் அவர்களே கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
எனவே குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற வண்ணம் நான்கு வகையான ஸ்மூத்திகளை இப்பொழுது நாம் காணலாம்.
Good Fruit Smoothies:
கிவி ப்ரோக்கோலி பனானா ஸ்மூத்தி
இனிப்பு சுவையுடன் சற்று புளிப்பு சுவையும் சேர்ந்து குழந்தைகளுக்கு பிடித்த வண்ணம் இளம் பச்சை வண்ணத்தில் இருக்கும் இந்த கிவி ப்ரோக்கோலி பனானா ஸ்மூத்தி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். மேலும் இதில் பாதாம் சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு பிடித்தமான நட்ஸ் பிளேவர் இதில் கிடைக்கும்.
Healthy fruit smoothies:
தேவையானவை
- வாழைப்பழம்- 1
- வேகவைத்த ப்ரோக்கோலி -2-3 இதழ்கள்
- பாதாம் -4-5
- கிவி -1 (தோல் நீக்கி நறுக்கியது)
- ஓட்ஸ்- கால் கப்
- தண்ணீர் -தேவையான அளவு
செய்முறை
- மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றை மிக்சியில் ஒன்றாக போட்டு ஸ்மூத்தி பதத்திற்கு வருமளவிற்கு அரைக்கவும்.
- உடனே பரிமாறவும்.
பப்பாளி கேரட் பனானா ஸ்மூத்தி
குழந்தைகளுக்கு பிடித்தமான இனிப்பு சுவையுடன் இருப்பதோடல்லாமல் ஆரஞ்சு கலரில் அவர்களை கவரும் வண்ணம் இருக்கும் ரெசிபிதான் இந்த பப்பாளி கேரட் பனானா ஸ்மூத்தி.மேலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்,வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தினை அளிக்க வல்லது.
Mixed fruit smoothie:
- வாழைப்பழம் -1
- பப்பாளி (தோல் நீக்கி நறுக்கியது)- அரை கப்
- வேகவைத்த காரட் -1
- நறுக்கி வேக வைத்த பூசணிக்காய் -கால் கப்
- அப்ரிகாட்- 1
- தண்ணீர் -தேவையான அளவு
செய்முறை
- மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றை மிக்சியில் ஒன்றாக போட்டு ஸ்மூத்தி பதத்திற்கு வருமளவிற்கு அரைக்கவும்.
- உடனே பரிமாறவும்.
பீட்ரூட் மாதுளை பனானா ஸ்மூத்தி
இதில் பீட்ரூட் மற்றும் மாதுளை சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு பிடித்த வண்ணம் பிங்க் கலரில் இருக்கும்.மேலும் பீட்ரூட்,மாதுளை மற்றும் அத்திப்பழம் போன்றவை இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரிக்க வல்லது. எனவே ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. எனவே நார்ச்சத்துள்ள ஒரு ஆரோக்கியமான ரெசிபி தான் இந்த ஸ்மூத்தி.
Smoothie Recipes:
தேவையானவை
- வாழைப்பழம் -1
- நறுக்கி வேக வைத்த பீட்ரூட் -கால் கப்
- உலர் அத்திப்பழம்- 2
- மாதுளம் பழம் விதைகள் -அரை கப்
- தண்ணீர்- தேவையான அளவு
செய்முறை
- மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றை மிக்சியில் ஒன்றாக போட்டு ஸ்மூத்தி பதத்திற்கு வருமளவிற்கு அரைக்கவும்.
- உடனே பரிமாறவும்.
காலிஃபிளவர் முந்திரி பனானா ஸ்மூத்தி
Fruit smoothies recipes:
காலிபிளவர் சாப்பிட மறுக்கும் குழந்தைகளை சாப்பிட வைக்கும் டேஸ்டியான ஸ்மூத்தி ரெசிபி இது.அதுமட்டுமல்லாமல் இதில் உருளைக்கிழங்கு, வாழைப்பழம் மற்றும் முந்திரி ஆகியவை சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு காய்கறியின் வாசனை தெரியாமல் டேஸ்டியாக இருக்கும்.
தேவையானவை
- வாழைப்பழம் -1
- முந்திரிப்பருப்பு- 4-5
- காலிபிளவர் இதழ்கள் -2-3
- வேகவைத்த காலிபிளவர் இதழ்கள்- 2-3
- உருளைக்கிழங்கு வேகவைத்தது- 1
செய்முறை
- மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றை மிக்சியில் ஒன்றாக போட்டு ஸ்மூத்தி பதத்திற்கு வருமளவிற்கு அரைக்கவும்.
- உடனே பரிமாறவும்.
இந்த ஸ்மூத்தியில் உபயோகிக்கும் அனைத்து காய்கறிகளையும் வேகவைத்து அதன் பின் மிக்சியில் சேர்த்து அரைக்க வேண்டும். அப்பொழுதுதான் குழந்தைகளுக்கு செரிமானமாவதற்கு எளிதாக இருக்கும்.
மேலும் இதில் உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்காமல் இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்த்துள்ளதால் இதனை ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
சற்று பெரிய குழந்தைகளுக்கு செய்து கொடுக்கும் போது குழந்தைகளுக்கு பிடித்த வண்ணம் ஐஸ்கிரீம் மற்றும் பால் சேர்த்து குழந்தைகளுக்கு விருப்பப்பட்ட வண்ணம் செய்து கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1.எத்தனை வயது குழந்தைகளுக்கு இந்த ஃபுரூட் ஸ்மூத்தியினை கொடுக்கலாம்?
ஒரு வயது முதல் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
2.பால் சேர்க்கலாமா ?
விருப்பப்பட்டால் சுவைக்கேற்ப பால் சேர்த்து கொள்ளலாம்.
3.வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்க்கலாமா?
உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான வேறு காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்த்து கொள்ளலாம் ஆனால் காய்கறிகளை வேகா வைத்து சேர்க்க வேண்டும்.
4.குழந்தைகளுக்கு தினமும் கொடுக்கலாமா?
காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆரோக்கியமானவை என்பதால் தினமும் கொடுக்கலாம்.
கோடைக்கேற்ற 4 வகையான வெஜிடபிள் மற்றும் ஃபுரூட் ஸ்மூத்திகள்
Notes
- வாழைப்பழம்- 1
- வேகவைத்த ப்ரோக்கோலி -2-3 இதழ்கள்
- பாதாம் -4-5
- கிவி -1 (தோல் நீக்கி நறுக்கியது)
- ஓட்ஸ்- கால் கப்
- தண்ணீர் -தேவையான அளவு
- மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றை மிக்சியில் ஒன்றாக போட்டு ஸ்மூத்தி பதத்திற்கு வருமளவிற்கு அரைக்கவும்.
- உடனே பரிமாறவும்.
- வாழைப்பழம் -1
- பப்பாளி (தோல் நீக்கி நறுக்கியது)- அரை கப்
- வேகவைத்த காரட் -1
- நறுக்கி வேக வைத்த பூசணிக்காய் -கால் கப்
- அப்ரிகாட்- 1
- தண்ணீர் -தேவையான அளவு
- மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றை மிக்சியில் ஒன்றாக போட்டு ஸ்மூத்தி பதத்திற்கு வருமளவிற்கு அரைக்கவும்.
- உடனே பரிமாறவும்.
- வாழைப்பழம் -1
- நறுக்கி வேக வைத்த பீட்ரூட் -கால் கப்
- உலர் அத்திப்பழம்- 2
- மாதுளம் பழம் விதைகள் -அரை கப்
- தண்ணீர்- தேவையான அளவு
- மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றை மிக்சியில் ஒன்றாக போட்டு ஸ்மூத்தி பதத்திற்கு வருமளவிற்கு அரைக்கவும்.
- உடனே பரிமாறவும்.
- வாழைப்பழம் -1
- முந்திரிப்பருப்பு- 4-5
- காலிபிளவர் இதழ்கள் -2-3
- வேகவைத்த காலிபிளவர் இதழ்கள்- 2-3
- உருளைக்கிழங்கு வேகவைத்தது- 1
- ஓட்ஸ்- கால் கப்
- தண்ணீர்- தேவையான அளவு
- மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றை மிக்சியில் ஒன்றாக போட்டு ஸ்மூத்தி பதத்திற்கு வருமளவிற்கு அரைக்கவும்.
- உடனே பரிமாறவும்
Leave a Reply