ஹோம்மேட் உலர் பேரீச்சை பவுடர் ரெசிபி
Home Made Dates Powder for Kids in Tamil
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அனைவருக்கும் தெரியும் சர்க்கரையை சாப்பிட கூடாது. குழந்தைகளுக்கும் நமக்கும் சர்க்கரை கெடுதி என்று நன்றாகவே தெரியும். இதற்கு மாற்றாக நாம் வெல்லம், தேங்காய் சர்க்கரை (கோக்கனட் சுகர்) போன்றதை நம் உணவில் சேர்த்து வருகிறோம். இந்தப் பட்டியலில் இன்னும் ஒரு பொருளை சேர்த்துக்கொள்ளுங்கள். அதுதான் ‘உலர் பேரீச்சை பவுடர்’!
பேரீச்சை பழங்கள் (டேட்ஸ்) ஊட்டச்சத்துகள் மிக்கவை. குறிப்பாக, வளரும் குழந்தைகளுக்கு மிக மிக நல்லது. சிறு குழந்தைகளுக்கு ஃப்ரெஷ்ஷான டேட்ஸை அப்படியே மசித்துக் கொடுக்கலாம். ஆனால், உலர் டேட்ஸை எப்படி கொடுப்பது எனக் குழம்பி தவித்திருப்பீர்கள்?
இதோ இந்தப் பதிவு உங்கள் குழப்பத்துக்குத் தீர்வாகும். உலர் டேட்ஸ் பவுடராக, குழந்தைகளின் உணவுகளில் சேர்த்துக்கொடுக்கலாம்.
விட்டமின், தாதுக்கள் போன்ற பல்வேறு சத்துகள் கொண்ட டேட்ஸ் பவுடர் செய்வது கொஞ்சம் கடினம்தான். சில மெனக்கெடல்களை நீங்கள் செய்ய வேண்டியிருக்கலாம். எனினும் இறுதியில் தரமான, ஆரோக்கியமான பொருளை உங்கள் குழந்தைகாக நீங்கள் தயாரித்து வைப்பதை நினைக்குபோது மகிழ்ச்சியாக இருக்கும்தானே.
சத்துகள் மிக்க டேட்ஸை பவுடராக குழந்தைகளுக்கு எப்படி செய்து தருவது எனப் பார்ப்போமா…
வீட்டிலே உலர் டேட்ஸ் பவுடர் செய்வது எப்படி?
உலர் டேட்ஸ் / காரிக் (Kharik) – 2 கப்
செய்முறை
- சுத்தமான கிச்சன் துணியால் உலர் டேட்ஸ்களை நன்றாக துடைத்துக்கொள்ளுங்கள்.
- மிகவும் கடினமாக இருக்கும் இந்த உலர் டேட்ஸ்களை கூர்மையான கத்தியால் வெட்டி கொட்டைகளை நீக்கவும். கத்தியால் நறுக்க முடியவில்லை என்றால் உலர் டேட்ஸை உடைத்துக்கொள்ளலாம்.3. கொட்டை நீக்கிய உலர் டேட்ஸை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளுங்கள். 7-10 நாட்கள் வரை வெயிலில் காய வைக்க வேண்டும். 4. வெயிலில் காயவைத்த டேட்ஸ்களை மிக்ஸி ஜாரில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு அரைத்துக்கொள்ளுங்கள்.5. டேட்ஸ் பவுடரை சலித்தால் பெரிய துகள்கள் கிடைக்கும்.6. சலித்து எடுத்த பெரிய துகள்களை மீண்டும் மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள்.
7. காற்றுபுகாத டப்பாவில் போட்டு சேமித்து வைக்கலாம். இயற்கையான இனிப்பு சுவையை கொடுக்கும். பால், கஞ்சி, கீர், ஸ்மூத்தி, பேக் உணவு வகைகளில் சேர்க்கலாம்.
குழந்தைக்கு டேட்ஸ் தரலாமா?
குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான தேவை ஊட்டச்சத்து மிக்க உணவுகள். அவை சமச்சீர் சத்துகள் கொண்ட உணவுகள்தான். இந்த சத்துகளை எங்கிருந்து பெறுவது எனக் கேட்டால், டேட்ஸிலிருந்து பெற முடியும். ஆம், 8 மாத குழந்தைக்கு சரிவிகித சத்துகள் தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கையில், டேட்ஸ் பவுடர் அந்த தேவையைப் பூர்த்தி செய்யும். தாய்ப்பாலுக்கு நிகரான உணவுகளில் டேட்ஸ் ஒரு வகை உணவு. எனவே உங்கள் குழந்தைக்கு டேட்ஸ் பவுடரை நீங்கள் தாராளமாக தரலாம்.
டேட்ஸ் கொடுத்தால் குழந்தைக்கு கிடைக்க கூடிய பலன்கள்
- மலம் இறுகாது. மலச்சிக்கல் பிரச்னை தீர்ந்துவிடும்.
- இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் ரத்தசோகை நோயை விரட்டலாம்.
- கால்சியம், பொட்டாசியம், மெக்னிசியம், விட்டமின் ஏ நிறைந்துள்ளன.
- நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.
வீட்டில் இதைத் தயாரிக்க உங்களுக்கு நேரம் இல்லையா? கவலை வேண்டாம், நாங்கள் இதைத் தயாரித்து உங்கள் வீட்டுக்கே அனுப்புகிறோம். நீங்கள் ஆர்டர் செய்த பின், ஃப்ரெஷ்ஷாக டேட்ஸ் பவுடர் தயாரித்து வீட்டுக்கே டெலிவரி செய்துவிடுகிறோம்.
Dates Powder
லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் 3 வகையில், டேட்ஸை உங்கள் குழந்தைகளிடம் சேர்க்க இருக்கிறது.அவை என்னவென்று தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யுங்கள்
உடல்நலத்தால் இணைவோம்… லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ்…
Dates Powder
மற்ற லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply