Homemade Mixed Nuts Powder for Babies and Kids:
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஹோம்மேட் மிக்ஸட் நட்ஸ் பவுடர் ரெசிபி:
Nuts Powder:
குழந்தைகளுக்கான உணவுகளிலே மிகவும் சிறப்பானது நட்ஸ். ஆனால், பல் முளைத்த, நன்கு மென்று சாப்பிடும் குழந்தைகளுக்கு நாம் நட்ஸ் தர முடியும். பற்கள் இல்லாத சின்ன குழந்தைகளுக்கு நாம் நட்ஸை சாப்பிட கொடுத்தால், அவர்களுக்கு அவற்றை சாப்பிட தெரியாமல் விழுங்கி, தொண்டையில் அடைத்துக்கொண்டு ஆபத்தாக மாறிவிடலாம். அப்போ எப்படிதான் நட்ஸ் தருவது? இந்தப் பதிவில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
ஊட்டச்சத்துகளின் பொக்கிஷம் என்றால் நட்ஸ்கள் என்றே சொல்லலாம். தமிழில் கொட்டை வகை உணவுகள். என்னென்ன? பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட் போன்றவையெல்லாம் கொட்டை வகை உணவுகளை சேர்ந்தவை.
சிறு குழந்தைகளுக்கு இந்த ஊட்டச்சத்துகள் மிக்க நட்ஸ்களை எப்படி கொடுப்பது? எளிது… நட்ஸ் பவுடராக கொடுக்கலாம்.
விட்டமின், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், நார்ச்சத்து, நல்ல கொழுப்பு, புரதம் ஆகிய அனைத்து கலந்த கூட்டணி இது. குழந்தைகளுக்கு கொடுத்திட அவர்கள் ஆரோக்கியமாவார்கள். எடை கூடுவார்கள். பலசாலியாவார்கள். ஒரு சில குழந்தைகளுக்கு நட்ஸ் அலர்ஜி ஏற்படுத்தலாம். அந்த குழந்தைகளின் பெற்றோர் தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை செக் செய்த பிறகு நட்ஸ் உணவுகளைக் கொடுக்கலாம்.
ஹோம்மேட் மிக்ஸட் நட்ஸ் பவுடர் செய்வது எப்படி?
- முந்திரி – ¼ கப்
- பிஸ்தா – ¼ கப்
- பாதாம் – ¼ கப்
- வால்நட் – ¼ கப்
- ஏலக்காய் – 2-3
- மஞ்சள் தூள் – 1 சிட்டிகை (விருப்பப்பட்டால்)
- குங்குமப்பூ – சிறிதளவு
செய்முறை
- முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட் ஆகியவற்றைத் தனித்தனியாக வாணலியில் போட்டு மிதமான தீயில் வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
2. அதேபோல, ஏலக்காயும் குங்கமப்புவும் வறுத்துக்கொள்ள வேண்டும்.
3. வறுத்த அனைத்தையும் ஆறவிடுங்கள்.
4. நட்ஸ், ஏலக்காய் ஆகியவற்றை மிக்ஸியில் போடவும்.
5. மிக்ஸியை சிறிது சிறிதாக ஓடவிடுவது மிக முக்கியம். ஒரே அடியில் மிக்ஸியை ஓடவிட்டால் ஜார் சூடேறி நட்ஸ் பவுடர் கட்டி கட்டியாக மாறிவிடலாம்.
6. இறுதியாக மஞ்சள் தூள், குங்கமப்பூ சேர்த்து, ஒரே ஒரு முறை மிக்ஸியை சுற்றவிட்டு நிறுத்திக்கொள்ளுங்கள்.
7. காற்றுபுகாத டப்பாவில் இதை சேமித்து பாதுகாக்கலாம். தேவையானபோது குழந்தைக்கு எடுத்துப் பயன்படுத்தலாம்.
குறிப்பு
- இந்த நட்ஸ் பவுடரை செய்து, ஃப்ரிட்ஜில் வைத்தால் 2 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
- 8 + மாத குழந்தைகளுக்கு இந்த நட்ஸ் பவுடரை தரலாம்.
- இந்த மிக்ஸட் நட்ஸ் பவுடர் உங்கள் குழந்தைக்கு தருவதற்கு முன், நீங்கள் தனி தனியாக இந்த நட்ஸ் பவுடர்களை உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து, அந்த உணவு அவர்களுக்கு ஏற்றுக்கொண்டதா என உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில் சில குழந்தைகளுக்கு சில நட்ஸ் ஒத்துக்கொள்ளாது. அலர்ஜியை ஏற்படுத்தும்.
நட்ஸ் பவுடரின் பயன்பாட்டு முறைகள்
- கீர், கஞ்சி, ப்யூரி போன்ற உணவு வகைகளில் நட்ஸ் பவுடரை ½ – 1 டீஸ்பூன் அளவுக்கு கலந்து கொடுக்கலாம்.
- 1 + வயதுள்ள குழந்தைகளுக்கு பால், ஸ்மூத்தி, ஹோம்மேட் கேக், ஸ்வீட் ரெசிபி போன்றவற்றில் நட்ஸ் பவுடர் கலந்து கொடுக்கலாம்.
வீட்டில் இதைத் தயாரிக்க உங்களுக்கு நேரம் இல்லையா? கவலை வேண்டாம், நாங்கள் இதைத் தயாரித்து உங்கள் வீட்டுக்கே அனுப்புகிறோம். நீங்கள் ஆர்டர் செய்த பின், ஃப்ரெஷ்ஷாக இதைத் தயாரித்து வீட்டுக்கே டெலிவரி செய்துவிடுகிறோம்.
மற்ற லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply