HOMEMADE BANANA BUN: குழந்தைகள் அதிகம் விருப்பப்படுவது ஸ்னாக்ஸ் வகைகள் என்பதால் தான் நாம் பல வகையான ஸ்னாக்ஸ் ரெசிபிகளை பதிவிட்டு வருகின்றோம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
காலை, மதியம் மற்றும் இரவு போன்ற உணவு வகைகளை கூட நாம் வீடுகளிலேயே செய்து குழந்தைகளுக்கு கொடுத்து விடலாம். ஆனால் என்று வரும்பொழுது குழந்தைகள் பெரும்பாலும் கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களை தான் விரும்புகின்றனர்.
அவற்றில் இயற்கையில் செய்யப்படும் உணவுப் பொருட்கள் என்று குறிப்பிட்டு இருந்தால் கூட அதில் சேர்க்கப்பட்டிருக்கும் முற்பொருள்களை வாசிக்கும் பொழுது ஒரு பொருட்கள் கூட இயற்கையான உணவு பொருட்கள் இருக்காது.
முக்கியமாக பேக்கரி வகைகளை எடுத்துக் கொண்டால் அவற்றை நாம் வீட்டில் செய்ய முடியாது என்பதால் பெரும்பாலும் குழந்தைகளுக்கு கடையில் தான் வாங்கி கொடுப்பேன். ஆனால் அதில் உணவு கெட்டுப் போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பல வகையான பிரசர்வேட்டிவ்ஸ் சேர்க்கப்படுகின்றன.
எனவே பேக்கரிகளில் விற்கப்படும் பனானா பன் ரெசிபியை வீட்டிலேயே எப்படி எளிமையாக செய்யலாம் என்று பார்க்கலாம். இதற்கு ஓவன் இருந்தால் போதும் நாம் எளிதாக மென்மையான பன்னை வீட்டிலேயே செய்யலாம்.
கடைகளில் செய்யப்படும் பன் ரெசிபியில் சீனி சேர்க்கப்படும். ஆனால் இதில் வாழைப்பழத்தின் இயற்கை இனிப்பு சுவை மட்டுமே இருப்பதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது.
HOMEMADE BANANA BUN
இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் வாழைப்பழத்தில் அடங்கியவர் நன்மைகளை பார்க்கலாம்:

- வாழைப்பழத்தில் இயற்கையாகவே இனிப்பு சுவை உள்ளதால் இது குழந்தைகளுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கவல்லது.
- வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேடுகள் இயற்கையாகவே உள்ளது என்பதால் குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான எனர்ஜியை சிறு சிறிதாக தருகின்றன.
- பொதுவாக உணவு செரிமானமாகவில்லை என்று நாம் வாழைப்பழத்தை தான் கொடுப்போம். இதில இயற்கையாகவே நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உணவினை எளிதில் செரிமானமாக செய்து மலச்சிக்கல் வராமல் தடுக்கின்றது.
- வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் பி6 மற்றும் நார் சத்துக்கள் இருப்பதால் இதை குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், தசைகளின் வளர்ச்சிக்கும் உதவுகின்றது.
- உடல் எடை ஆரோக்கியமாக அதிகரிப்பதற்கு வாழைப்பழம் ஒரு நல்ல தீர்வாகும். ரத்தத்தின் சர்க்கரை அளவு உணவில் அதிகம் ஏறாமல் ஒரு நல்ல எனர்ஜியை தருவதற்கு வாழைப்பழம் நல்ல உணவாகும்.
- இயற்கையாகவே இதன் தன்மை மென்மையாக வளவளப்புடன் இருப்பதால் குழந்தைகள் எளிதில் விழுங்குவதற்கு எதுவாக உள்ளது.
HOMEMADE BANANA BUN
- பழுத்த வாழைப்பழம்-1
- கோதுமை மாவு- அரை கப்
- முட்டை-1
- நெய் அல்லது வெண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
- பால்-2-3 டேபிள் ஸ்பூன்
- நாட்டு சக்கரை அல்லது டேட்ஸ் பவுடர்-1-2 டேபிள் ஸ்பூன்
HOMEMADE BANANA BUN
செய்முறை
- ஓவனை 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு பிரீ ஹீட் செய்து கொள்ளவும்.
- பன் மோல்டில் நெய் அல்லது வெண்ணையை தடவிக் கொள்ளவும்.
- பவுலில் வாழைப்பழத்தை தோல் உரித்து நன்றாக மசித்து கொள்ளவும்.
- அதனுடன் முட்டை, நெய் அல்லது பட்டர் சேர்த்து நன்றாக கட்டியில்லாமல் கலங்கி கொள்ளவும்.
- இவற்றுடன் கோதுமை மாவு, பட்டைத்தூள், நாட்டு சக்கரை அல்லது டேஷ் பவுடர் சேர்த்துக் கொள்ளவும்.
- சிறு சிறிதாக பால் சேர்த்து நன்றாக கலக்கிக் கொண்டே இருக்கவும்.
- பன் மோல்டில் முக்கால் பங்கு மூழ்கியிருக்கும் அளவிற்கு தயாரித்து வைத்த மாவை ஊற்றவும்.
- 15 முதல் 18 நிமிடங்களுக்கு பொன்னிறமாக மாறும் வரை பேக் செய்யவும்.
ஆற வைத்து மோல்டில் இருந்து நீக்கவும்.
பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு சாப்பிடவருகேற்ற எளிதான ஸ்நாக்ஸாக இது இருக்கும். வீட்டில் உள்ள பெரியோர்களும் டீ நேரத்தில் தொட்டு சாப்பிடுவதற்கும் இது ஏற்ற ரெசிபி.
நன்கு மெதுவாக கடைகளில் விற்கப்படும் கேக் போன்றே இருப்பதால் பேக்கரி உணவின் மீது குழந்தைகளுக்கு விருப்பம் செல்லாது.
அதுமட்டுமல்லாமல் இனிப்புக்கு சீனி சேர்க்காமல் நாட்டு சர்க்கரை சேர்த்து இருப்பதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதும் கூட. மேலும் அதிகமான இனிப்பு வேண்டாம் என்றும் நினைத்தால் வாழைப்பழத்தின் இனிப்பு சுவையே போதுமானது.
HOMEMADE BANANA BUN

உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பனானா கேக்கினை எந்த வயதிலிருந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்?
ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு இந்த பனானா கேக்கினை கொடுக்கலாம்.
பால் சேர்க்காமல் செய்யலாமா?
பால் வேண்டாம் என்று நினைத்தால் நீங்கள் தண்ணீர் சேர்த்து செய்யலாம்.
எத்தனை முறை கொடுக்கலாம்?
வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை கொடுக்கலாம்.
எத்தனை நாட்கள் வரை வைத்திருக்கலாம்?
ஒரு நாள் வரை வைத்திருக்கலாம்.











Leave a Reply