Kambu Kanji: சிறுதானியங்களை பற்றிய விழிப்புணர்வு தற்பொழுது மக்களிடையே அதிகம் பெருகி வருவதால் ஒரு காலத்தில் கிராம புற மக்களிடையே மட்டுமே பரிச்சயமாக இருந்த சிறுதானியங்கள் தற்பொழுது நகர்ப்புறங்களிலும் பிரபலமாகி வருகின்றன.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
தற்பொழுது பெருகிவரும் சர்க்கரை நோய் மற்றும் ரத்த கொதிப்பு போன்றவற்றின் காரணமாக சிறுதானியங்கள் தான் உட்கொள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பதால் மூன்று வேளையில் ஒரு வேளையாவது சிறுதானியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
சிறு தானியங்கள் பற்றிய உண்மைகளை ஆயுர்வேத மருத்துவர்கள், சித்தா மருத்துவர்கள் மட்டுமல்லாமல் அலோபதி மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். எனவே தான் சிறு தானியங்களை குழந்தைகளுக்கு எப்படி அவர்களுக்கு ஏற்றார் போல் கொடுப்பது என்பது பற்றிய ரெசிபிகளை நான் அடிக்கடி உங்களுக்கு கூறி வருகின்றேன்.
இவையெல்லாம் வீட்டிலே இருக்கும் அம்மாக்களுக்கு பொருத்தமாக இருக்கும். நாங்கள் வேலைக்கு செல்கிறோம் எங்களுக்கு ஏதாவது வழி கூறுங்கள் என்று என்னிடம் ஏராளமான மக்கள் கேட்பதுண்டு.
அவர்களுக்காகவே நாங்கள் தயாரித்து வெளியிட்டது தான் இன்ஸ்டன்ட் கம்பு ராப் மிக்ஸ் பவுடர் மற்றும் கம்பு பாசிப்பருப்பு கம்பு என்பதை பவுடர். இதில் கம்பு மட்டுமல்லாமல் மிளகு, ஓமம் மற்றும் சுக்கு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளதால் இந்த பவுடரை வைத்து அப்படியே நீங்கள் கஞ்சி தயாரித்துக் கொள்ளலாம்.
Kambu Kanji:
இதை வைத்து வேறு வித்தியாசமாக என்ன ரெசிபிகள் செய்யலாம் என்று கேட்கும் அம்மாக்களுக்கு தான் இன்று நான் இந்த இன்ஸ்டன்ட் கம்பு ராப் மிக்சினை வைத்து கஞ்சி செய்து காட்டப் போகின்றேன். இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் கம்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி பார்க்கலாம்:
- கம்பு தானியத்தில் இயற்கையாகவே கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளதால் உடலுக்கு தேவையான ஆற்றலை இது வழங்குகின்றது.
- இதில் இஞ்சி, ஏலக்காய் மற்றும் ஓமம் ஆகியவை சேர்த்துள்ளதால் இயற்கையாகவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்பு இந்த பொருள்களுக்கு உண்டு. எனவே பல வகையான நோய்கள் அண்டாமல் தடுக்கின்றது.
- கம்பில் நார்ச்சத்துக்கள் அதிகம் என்பதால் உணவினை நன்கு செரிமானமாக செய்கின்றது.
- மேலும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற மினரல்ஸ் கல் அதிகம் என்பதால் எலும்புகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இவை துணை புரிகின்றது.
- ஒரு மனிதன் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு எலும்புகள் நன்றாக இருக்க வேண்டியது அவசியம் என்பதால் வாரம் ஒரு முறை கம்பை சேர்த்துக் கொண்டால் எலும்புகளுக்கு வலிமை தரும்.
- உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிப்பதற்கும் கம்பு அவசியமாகின்றது.
- கம்பு உடலுக்கு இதமளிக்கும் ஒரு தானியம் ஆகும். எனவே வெயில் காலத்தில் மட்டும்தான் கம்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை குளிர்காலத்திலும் கம்பு சாப்பிட்டால் உடலுக்கு கதகதப்பினை அளிக்கும்.
- கம்பில் நிறைந்துள்ள இரும்பு சத்துக்கள் உடலில் உள்ள ஆக்ஸிஜனின் அளவை அதிகரித்து மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தின் அளவை அதிகரிப்பதால் ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு இது உதவுகின்றது.
Kambu Kanji
- இன்ஸ்டன்ட் கம்பு மிக்ஸ் பவுடர்- 3 டேபிள்ஸ்பூன்
- தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர்- 1 கப்
- உப்பு -தேவையான அளவு
- வறுத்த சீரகத்தூள்- அரை டீஸ்பூன்
- உப்பு -1 சிட்டிகை
- நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
Kambu Kanji
செய்முறை
1.மூன்று டேபிள் ஸ்பூன் கம்பு மிக்ஸ் பவுடரை எடுத்துக் கொள்ளவும்.
2.ஒரு பவுலில் தயிரை ஊற்றி நன்றாக கலக்கி அதில் தேவையான அளவு தண்ணீர், கம்பு மிக்ஸ் பவுடர், உப்பு மற்றும் சீரகத்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
3.கடாயில் இந்த கலவையை ஊற்றி ஐந்து நிமிடங்களுக்கு கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.
4.கொத்தமல்லி தழைகள் மற்றும் சீரகத்தூள் தூவி பரிமாறவும்.
5.சிறுதானியங்களை வெயில் காலத்தில் மட்டும் உண்ண வேண்டும் என்று தான் நம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் குளிர்காலத்தில் நன்கு வெதுவெதுப்பாக சாப்பிடவும் கம்பு ஏற்ற உணவுதான்.
6.குளிர்காலத்தில் காய்ச்சி குளிர்ச்சியாக கம்பு கூலாகவும், மழைக்காலத்தில் வெதுவெதுப்பாகவும் உட்கொள்ள ஏற்ற சிறுதானியம் கம்பு. மேலே கூறியது போல் வாரம் ஒரு முறை செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Kambu Kanji
Kambu Kanji
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. வாரத்திற்கு எத்தனை தடவை கம்பை எடுத்துக் கொள்ளலாம்?
வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று தடவை இந்த கம்பு கஞ்சியை காலை உணவாகவோ அல்லது சிற்றுண்டியாகவோ எடுத்துக் கொள்ளலாம்.
2. சுவையை கூட்ட வேறு ஏதேனும் சேர்க்கலாமா?
கம்பு கஞ்சியின் சுவையை அதிகரிக்க நாட்டு சக்கரை, பேரிச்சை, ஏலக்காய் மற்றும் டிரை ப்ரூட்ஸ் பவுடர் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம், காரமாக சாப்பிட விரும்பினால் மிளகுத்தூள், சீரகத்தூள் போன்றவை சேர்த்துக் கொள்ளலாம்.
3. குளிர்காலத்தில் கம்பு தானியத்தை எடுத்துக் கொள்ளலாமா?
உடலுக்கு கத கதப்பை தருவதால் தாராளமாக குளிர்காலத்தில் கம்பினை எடுத்துக் கொள்ளலாம்.
4. குளூட்டின் ஒவ்வாமை உள்ளவர்கள் கம்பினை சாப்பிடலாமா?
கம்பில் குளூட்டின் இல்லை என்பதால் தாராளமாக குளூட்டின் ஒவ்வாமை உள்ளவர்கள் கம்பினை எடுத்துக் கொள்ளலாம்.
Leave a Reply