Kambu kanji for babies:குழந்தைகளுக்கு முதல் உணவாக கொடுப்பதற்கு ஏற்ற அரிசி கஞ்சி, இன்ஸ்டன்ட் கஞ்சி பொடி ஆகியவற்றை இதற்கு முன் நாம் பார்த்திருப்போம். அரிசியினை கொடுப்பதை போன்றே சிறு தானியங்களையும் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே நாம் கட்டாயமாக சேர்க்க வேண்டும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
சிறுதானியங்கள் என்ற வார்த்தையினை கேட்டதும் சட்டென்று நம் நினைவிற்கு வருவது கம்பு மற்றும் கேழ்வரகு.எனவே கம்பு மற்றும் தக்காளியை வைத்து செய்யக்கூடிய எளிமையான கஞ்சி ரெசிபியை நாம் இப்பொழுது பார்க்கலாம்.
Kambu kanji for babies
கம்பின் நன்மைகள்:
- கம்பில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஆகியவை நிறைந்துள்ளன.
- கம்பி நிறைந்துள்ள வைட்டமின்கள் மற்றும் வேதிப் பொருள் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லவை.
- இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் உணவினை எளிதில் செரிமான மடையச்செய்கின்றது.
- தோலில் சுருக்கம் ஏற்படுவதைத் தவிர்த்து பளபளப்பைனை அளிக்க வல்லது.
- கம்பில் கரோட்டின் எனப்படும் சத்து அதிகமாக இருப்பதால் இது இயற்கையாகவே முடி வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- உடல் சூட்டை தணிக்க வல்லது.
Kambu kanji for babies
- தக்காளி 1-2
- கம்பு -2 டே .ஸ்பூன்
- மிளகுத்தூள்- 1/4 டீ .ஸ்பூன்
செய்முறை
1.பானில் 2 கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.
2.தக்காளியை சேர்க்கவும். 2-3 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.
3.தக்காளியின் தோலை நீக்கி மசிக்கவும். மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
4.வடிகட்டியால் விதைகளை வடிகட்டவும்.
5.பானில் 2 டே.ஸ்பூன் கம்பு பொடியை சேர்த்து தக்காளி கூழை சேர்க்கவும். நன்றாக கலக்கவும்.
6.தேவைப்பட்டால் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலக்கவும்.
7.பானை மிதமான தீயில் அடுப்பில் வைக்கவும். கஞ்சி பதத்திற்கு வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
8.மிளகுத்தூள் தூவி பரிமாறவும். குழந்தைகளுக்கு தேவைப்பட்டால் நெய் சேர்த்து பரிமாறலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply