Nilakadalai aval instant mix for babies: இரும்புச்சத்து,புரோட்டீன்,கார்போஹைட்ரெட் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த இன்ஸ்டன்ட் நிலக்கடலை அவல் மிக்ஸ்!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுடன் நெடுந்தூரம் பயணம் செய்யும் பொழுது நமக்கு ஏற்படும் கவலை உணவினை பற்றித்தான்.நாம் குழந்தைகளுக்கு வீட்டிலேயே செய்த உணவு வகைகளையே கொடுத்து பழகியிருப்போம்.வெளியில் ஹோட்டல்களில் வாங்கும் உணவுவகைகள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதல்ல.பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ப்ரெசெர்வேடிவ்ஸ் உணவு வகைகளையும் கொடுப்பது நல்லதல்ல.இதற்கு என்னதான் தீர்வு என்று யோசிக்கின்றீர்களா?
கவலை வேண்டாம்! வீட்டிலேயே செய்யப்பட்ட ஹெல்தியான இன்ஸ்டன்ட் மிக்ஸ்களை நாம் உடன் எடுத்து செல்லலாம்.பிளாஸ்கில் சுடுதண்ணீர் கொண்டு சென்றால் போதுமானது.எளிதாக குழந்தைக்கு தேவையான உணவினை தயாரித்து விடலாம்.மேலும் இன்ஸ்டன்ட் நிலக்கடலை அவல் கஞ்சியில் நிலக்கடலை,பொரிகடலை மற்றும் அவல் கலந்திருப்பதால் ஊட்டச்சத்து நிறைந்தது.குழந்தைக்ளுக்கு ஆறு மாதத்திலிருந்து இந்த கஞ்சியினை கொடுக்கலாம்.
Nilakadalai aval instant mix for babies
- அவல் – 1 கப்
- நிலக்கடலை – 3 டே .ஸ்பூன்
- பொரிகடலை – 4 டே .ஸ்பூன்
செய்முறை
1.பானை சூடாக்கி அவலை வறுக்கவும்.
2.நிலக்கடலையை வறுக்கவும்.
3.பொரிகடலையினை அரைக்கவும்.
4.நன்றாக ஆறியதும் கடலை பருப்பின் தோலை நீக்கி மிக்சி ஜாரில் அரைக்கவும்.
5.அவல் மற்றும் பொரிகடலையை உடன் சேர்த்து நைசாக அரைக்கவும்.
6.தேவையான பவுடர் ரெடி.
7.காற்று புகாத டப்பாவில் அடைத்து 2-3 மாதங்களுக்கு உபயோகிக்கலாம்.
நிலக்கடலை அவல் கஞ்சி செய்வது எப்படி?
1.ஒரு பவுலில் ஒரு டே.ஸ்பூன் பவுடரை எடுத்து கொள்ளவும்.
2.சூடான தண்ணீர் சேர்க்கவும்.
3.கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.
4.பயணம் செய்யும் பொழுது குழந்தைக்ளுக்கு கொடுப்பதற்கு ஏதுவான இன்ஸ்டன்ட் பவுடர் ரெடி.
கஞ்சியுடன் பழக்கூழ்களையும் சேர்த்து கொள்ளலாம்.நம் விருப்பத்திற்கேற்ற அளவு தண்ணீரின் அளவினை மாற்றி கொள்ளலாம்.பயணம் செய்வதற்கு முன்னால் குழந்தைகளுக்கு இதனை வீட்டிலேயே கொடுத்து பழக்கப்படுத்தி கொள்ளலாம்.இனி என்ன கவலை? கையில் இந்த இன்ஸ்டன்ட் மிக்ஸ் இருந்தால் போதும்.ஆறு மாத குழந்தையுடன் கூட எளிதில் பயணம் செய்யலாம்!
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply