Karpooravalli Rasam: எந்த அளவிற்கு விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வேகமாக வளர்ந்து வருகின்றதோ அந்த அளவிற்கு நோய்களும் அதிவேகமாக பெரிய வருகின்றது. உலகத்தை ஆட்டி வைத்த கொரோனா எனப்படும் நோய்த் தொற்று தான் இதற்கு சிறந்த உதாரணம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
கொரோனா நோய் தொற்று எந்த அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி பற்றிய விழிப்புணர்வையும், நாட்டு மருந்து பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
அதுவரை ஆங்கில மருந்துகளை மட்டுமே நம்பி இருந்து நம்மில் பெரும்பாலானோர், நம்ம வீட்டு வைத்திய முறையிலும் நோயை கட்டுப்படுத்த முடியும் என்ற முடிவிற்கு வந்தனர்.
நோய் தொற்றுகள் பெரிதாக முற்றுவதற்கு முன்னால், ஆரம்ப கட்டத்திலேயே சிறு சிறு வீட்டு வைத்தியங்கள் செய்து கொண்டால் எளிதாக சரி செய்யலாம். குழந்தைகளை அடிக்கடி சளி தொந்தரவுக்கான சிறப்பான வீட்டு வைத்தியம் தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.
ஆம்! இன்று நாம் பார்க்க போகின்ற ரெசிபி சளி தொந்தரவை போக்கும் கற்பூரவள்ளி ரசம். கற்பூரவள்ளி இலை அல்லது ஓமவல்லி இலை என்பது எளிதாக நம்ம ஊர்களில் கிடைக்கும் செடி என்பதால் இதை செய்வதில் பெரும் சிரமம் ஒன்றும் இருக்காது. குழந்தைகள் வைத்திருக்கும் நாம் எளிதாக இந்த செடியை வீட்டில் சிறு தொட்டியிலேயே வளர்க்க முடியும்.
Karpooravalli Rasam:
Karpooravalli Rasam:
இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் கற்பூரவள்ளி இலையின் நன்மைகளை பார்க்கலாம்:
- மூக்கடைப்பு தொந்தரவு இருக்கும்பொழுது, மூக்கில் உள்ள சளியை இலக்கி சுவாசத்தை சீராக்கும் தன்மை கற்பூரவள்ளி இலைக்கு உண்டு.
- தொண்டையில் அலர்ஜி இருந்தாலோ கரகரப்பு இருந்தாலோ, தொண்டை கட்டி இருந்தாலோ அதனை குணமாக்கும் பண்பு கற்பூரவள்ளி இலைக்கு உண்டு.
- இதில் ஆண்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகின்றது.
- மேலும், கற்பூரவள்ளி இலையின் பண்புகள் உணவினை எளிதில் செரிமானமாக செய்து வாய்வுத் தொல்லை போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ளும்.
Karpooravalli Rasam
- கற்பூரவள்ளி இலைகள்- 6-8
- பொடியாக நறுக்கிய தக்காளி-1
- புளி- சுவைக்கு ஏற்ப
- கடலை எண்ணெய்- 1 டீஸ்பூன்
- கடுகு- அரை டீஸ்பூன்
- சீரகம்- அரை டீஸ்பூன்
- பெருங்காயத்தூள்- இம்மியளவு
- பூண்டு- 2 பல்
- மஞ்சள் தூள்- அரை டீஸ்பூன்
- ரசப்பொடி- ஒரு டீஸ்பூன்
- உப்பு சுவைக்கேற்ப
- தண்ணீர் இரண்டு கப்
- கருவேப்பிலை- சிறிதளவு
- கொத்தமல்லி- சிறிதளவு
Karpooravalli Rasam:
செய்முறை
- கற்பூரவள்ளி இலைகளை நன்கு கழுவி, ஒன்று இரண்டாக சார் வெளியேறுமாறு கசக்கி கொள்ளவும்.
- இரண்டு கப் தண்ணீரை சட்டியில் ஊற்றி கொதிக்க விடவும். அதனுடன் தக்காளி மற்றும் புளி சேர்த்து சாறு இறங்கும் அளவிற்கு சூடாக்கவும்.
- மஞ்சள் தூள், ரசப்பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்கு கலக்கவும்.
- மற்றொரு கடாயில் சமையல் எண்ணெய் சேர்த்து சூடான உடன் மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
- பின்பு பூண்டை இடித்து சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- மேலும் இதனுடன் பெருங்காயத்தூள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து இறக்கி ரசத்துடன் சேர்க்கவும்.
- ஏற்கனவே கசக்கி வைத்த கற்பூரவள்ளி இலைகளை ரசத்துடன் சேர்த்து 5-7 நிமிடங்கள் மிதமான தீயில் சூடாக்கவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பினை அணைத்து கொத்தமல்லி இலைகளை மேலே தூங்கவும்.
- குழந்தைகளுக்கான ஆரோக்கியமான கற்பூரவள்ளி ரசம் ரெடி.
- வீட்டில் கற்பூரவள்ளி செடிகளை வைத்துக் கொண்டால், குழந்தைகளுக்கு சளி தொந்தரவு ஏற்படும்பொழுது இந்த ரசத்தை வைத்து கொடுக்கலாம்.
Karpooravalli Rasam:
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Karpooravalli Rasam:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
கற்பூரவள்ளி ரசம் குழந்தைகளுக்கு ஏற்றதா?
கற்பூரவள்ளி ரசித்தினை குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம். ஆனால், ரசம் வைத்து கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு மசாலா பொருட்கள் சிறிதளவு சேர்த்து காரம் இல்லாமல் கொடுக்க வேண்டும்.
எத்தனை தடவை இந்த ரசத்தினை கொடுக்கலாம்?
ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு தடவை இந்த ரசத்தினை கொடுக்கலாம்.
இந்த ரசம் கொடுத்தால் குழந்தைகளுக்கு பக்க விளைவுகள் ஏற்படுமா?
இயற்கை மூலிகை என்பதால் எந்த வித பக்க விளைவும் ஏற்படாது. எனினும், குழந்தைகளுக்கு முதலில் கொடுக்கும் பொழுது சிறிதளவு கொடுத்து ஒத்துக் கொள்கிறதா என சோதனை செய்து கொள்ளுங்கள்.
Leave a Reply