Kondakadalai Sadam: உங்கள் குழந்தைகளுக்கு புரோட்டின் சத்து அதிகம் உள்ள நல்ல சத்தான மதிய உணவு கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த கொண்டைக்கடலை பிரியாணி அதற்கு சரியான தீர்வாகும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
தினமும் நீங்கள் குழந்தைகளில் லஞ்ச் பாக்ஸ் இருக்கு லெமன் சாதம், தயிர்சாதம் மற்றும் சாம்பார் சாதம் போன்றவை கொடுத்து உங்கள் குழந்தைகளுக்கு போர் அடித்து விட்டதா? அப்படி என்றால் நீங்கள் இந்த கொண்டைக்கடலை பிரியாணியை வீட்டில் செய்து பாருங்கள்.
பொதுவாகவே கொண்டக்கடலை என்றால் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள் எனவே இதை வைத்து பிரியாணி செய்து கொடுத்தால் இதன் சுவையும் நன்றாக தான் இருக்கும் என்பதால் குழந்தைகளுக்கு வித்தியாசமான மதிய உணவாக இது இருக்கும்.
Kondakadalai Sadam:
தற்பொழுது எல்லா சத்துக்களும் ஒன்றாக கிடைக்கக்கூடிய ஒரே நேரத்தில் சமைக்கக்கூடிய ‘ஒன் பாட் மீல்’ எனப்படும் கலாச்சாரம் அதிகரித்து வருகின்றது.
அதாவது சாதம், பொரியல், குழம்பு என்று தனித்தனியாக வைப்பதை காட்டிலும் எல்லா சத்துக்களும் ஒன்று சேர கிடைக்கக்கூடிய ஒரே நேரத்தில் ஒரே வகை உணவாக வைத்தால் வேலைக்கு செல்லும் தாய்மார்களுக்கு எளிதாக இருக்கும் என்பதால் இதனை எல்லோரும் விரும்புகிறார்கள்.
எனவே அவ்வாறு எல்லா சத்துக்களும் ஒரே நேரத்தில் கிடைக்கக்கூடிய ஒரே மில்ஸாக இது இருக்கும். இதனை செய்வதற்கு முன்னால் கொண்டக்கடலை பிரியாணியில் அடங்கியுள்ள நன்மைகளை பார்க்கலாம்.
புரோட்டின் சத்து என்பது மாமிசத்தில் மட்டுமே நிறைந்துள்ளது என்று நாம் நினைத்திருக்கின்றோம் ஆனால் கொண்டைக்கடலையானது புரோட்டின் சத்து அதிகம் உள்ள மற்றும் தசை வளர்ச்சியை ஆரோக்கியமாக வைத்திருக்கக்கூடிய ஒரு நல்ல உணவுப் பொருளாகும்.
Kondakadalai Sadam:

- இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் வராமல் தடுக்கக்கூடியது.
- இதில் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளதால் ரத்த சோகை வராமல் தடுக்க கூடியது.
- கால்சியம் சத்து மெக்னீசியம் சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்றவை நிறைந்துள்ளதால் எலும்புகளுக்கு பலம் அளிக்கக்கூடியது.
- இதில் நிறைந்துள்ள ஜிங்க் மட்டும் போலேட் போன்ற சத்துக்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது.
- சிறிது சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய திருப்தியை கொடுக்கும் என்பதால் இது ஆரோக்கியமான உணவாகும்.
Kondakadalai Sadam
- வேக வைத்த கொண்டைக்கடலை- அரை கப்
- வேகவைத்த சாதம்- ஒரு கப்
- நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி- ஒரு கப்
- நறுக்கிய காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி மற்றும் தேவையானவை)- 1/4 கப்
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- அரை டீ.ஸ்பூன்
- மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
- சீரகத்தூள் மற்றும் மல்லித்தூள்- கால் டீ.ஸ்பூன்
- நெய்- ஒரு டீ.ஸ்பூன்
- தண்ணீர்- தேவையான அளவு
- உப்பு -தேவையான அளவு
Kondakadalai Sadam
செய்முறை
- கடாயில் நெய் ஊற்றி அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- இஞ்சி பூண்டு பேஸ்ட் அதில் சேர்த்து பச்சை வாசனை போகும் அளவிற்கு வதக்கவும்.
- நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசியும் அளவிற்கு வதக்கவும்.
- கொண்டைக்கடலை மற்றும் பொடியாக நறுக்கிய காய்கறிகள் சேர்த்து நன்கு கிளறவும்.
- மஞ்சத்தூள், சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- வேகவைத்த சாதத்தை சேர்க்கவும்.(அரிசி சேர்த்து வேகவைக்க நினைத்தால் ஊறிய அரிசியுடன் தண்ணீரை 1:2 என்ற விகிதத்தில் சேர்க்கவும்)
- அடுப்பை மிதமான தீயில் வைத்து லேசாக கிளறவும்.
- கொத்தமல்லியில் தலைகளை தூவி தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு செய்து கொடுக்க ஏற்ற ரெசிப்பியாக இது இருக்கும். குழந்தைகளுடன் வீட்டில் இருக்கும் பொழுதும் நான் சாதாரணமாக காய்கறி பிரியாணி செய்வதற்கு பதிலாக இப்படி வித்தியாசமாக செய்து சூடாக குடும்பத்துடன் உட்கார்ந்து சாப்பிடுவதற்கும் சுவையாக இருக்கும்.
Kondakadalai Sadam:

உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. எந்த வயதிலிருந்து குழந்தைகளுக்கு இதனை கொடுக்கலாம்?
ஒரு எதற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு கொண்டக்கடலை நன்றாக மசித்து சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.
2. இதனுடன் எதை வைத்து சாப்பிட நன்றாக இருக்கும்?
இதனுடன் தயிர், வெள்ளரிக்காய் பச்சடி அல்லது வெஜிடபிள் கறி போன்றவை வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.
3. பெரியவர்களுக்கு செய்ய வேண்டும் என்றால் எப்படி செய்ய வேண்டும்?
ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் மற்றும் பெரியவர்களுக்கு செய்ய வேண்டும் என்றால் சிறிது மசாலா பொருட்களை சேர்த்து சற்று காரம் அதிகமாக செய்து கொடுக்கலாம்
கொண்டக்கடலை பிரியாணி
Ingredients
- வேக வைத்த கொண்டைக்கடலை- அரை கப்
- வேகவைத்த சாதம்- ஒரு கப்
- நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி- ஒரு கப்
- நறுக்கிய காய்கறிகள் கேரட், பீன்ஸ், பட்டாணி மற்றும் தேவையானவை- 1/4 கப்
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- அரை டீ.ஸ்பூன்
- மஞ்சள் தூள் -ஒரு சிட்டிகை
- சீரகத்தூள் மற்றும் மல்லித்தூள்- கால் டீஸ்பூன்
- நெய்- ஒரு டீ..ஸ்பூன்
- தண்ணீர் -தேவையான அளவு
- உப்பு -தேவையான அளவு







Leave a Reply