Kothamalli Sadam in Tamil: குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸ் ரெசிபி கண்டுபிடிப்பதே நம்மில் பலருக்கு பெரிய டாஸ்க்.ஒரே மாதிரியான ரெசிபிகள் செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு சலிப்பு ஏற்படும்.குழந்தைகளும் தினமும் வித்யாசமான மற்றும் கலர் ஃபுல்லான ரெசிபிகளையே விரும்புகின்றனர்.அதே சமயம் அந்த ரெசிபிகள் குழந்தைகளுக்கு ஆரோக்யமானதாகவும் இருக்க வேண்டுமென்பதே நாம் அனைவரின் விருப்பம்.குழந்தைகளுக்கான ஆரோக்யமான மற்றும் கலர் ஃபுல்லான லன்ச் பாக்ஸ் ரெசிபிதான் கொத்தமல்லி வெஜிடபிள் ரைஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.

இதையும் படிங்க: ஒரு வயதுக்கு குறைவான குழந்தைக்கு ஏன் பசும்பால் தரக் கூடாது?
Kothamalli Sadam in Tamil
- அரிசி – ½ கப்
- நறுக்கிய வெங்காயம் – 1
- நெய்- 1 டே.ஸ்பூன்
- பிரியாணி இலை-1, சீரகம்- 1/4 டீ.ஸ்பூன், மிளகு – 2-3 ,கிராம்பு – 1-2
- பட்டாணி மற்றும் கேரட் – ½ கப்
- நறுக்கிய கொத்தமல்லி இலைகள் -1/2 கப்
- பொடியாக நறுக்கிய இஞ்சி – ½ இன்ச்
- பூண்டு – 2-3 பல்
- மஞ்சள்தூள் – 1/4 டீ.ஸ்பூன்
- உப்பு-தேவையானளவு

செய்முறை
1.அரிசியை நன்றாக கழுவி 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.இஞ்சி மற்றும் பூண்டை நறுக்கவும்.
2.மிக்சி ஜாரில் கொத்தமல்லி இலைகள்,இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.தேவைப்பட்டால் சிறிதளவு சேர்க்கலாம்.
3.குக்கரை மிதமான தீயில் வைத்து நெய்யை ஊற்றவும்.மசாலா பொருட்களை(பிரியாணி இலை-1, சீரகம்- 1/4 டீ.ஸ்பூன், மிளகு – 2-3 ,கிராம்பு – 1-௨) அதனுடன் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.

4.நறுக்கி வைத்த வெங்காயத்தை அதனுடன் சேர்த்து வதக்கவும்.பின்பு காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.

5.ஏற்கனவே அரைத்து வைத்த கொத்தமல்லி பேஸ்டை சேர்த்து 1-2 நிமிடங்களுக்கு வதக்கவும்.

6.அதன்பின் மஞ்சள்தூள்,தேவையானளவு உப்பு மற்றும் அரிசி சேர்த்து 1-2 நிமிடங்களுக்கு வதக்கவும்.

7.கடைசியாக இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு கிளறு கிளறவும்.
8.குக்கரை மூடி 2 விசில்கள் வைக்கவும்.அடுப்பை அணைக்கவும்.

9.ஆரோக்கியமான கொத்தமல்லி வெஜிடபிள் ரைஸ் ரெடி.

இதையும் படிங்க: குழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்
நமது அன்றாட சமையலில் உணவின் ருசியை கூட்டவும், நமது உடல்நலத்தை மேம்படுத்தவும் பல வகையான பொடிகள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்க்கிறோம். அவற்றில் முதன்மையான ஒன்று கொத்தமல்லி இலைகள்.இதில் நமக்கே தெரியாமல் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன.

- வயிறு மற்றும் குடல் உறுப்புக்களை நன்றாக இயங்கசெய்து உடலின் செரிமான சக்தியை அதிகரிக்கின்றது.
- ஆன்டி-செப்டிக் தன்மை இதில் அதிகமிருப்பதால் சரும பிரச்சனைகள் அண்டாது.
- கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
- கொத்தமல்லி இலையில் உள்ள சிட்ரோநெல்லோல் எனப்படும் கிருமிநாசினி வாயிலுள்ள புண்கள் ஆறவும், சுவாசம் புத்துணர்ச்சி பெறவும் உதவுகின்றது.
கொத்தமல்லி இலையில் இவ்வளவு நன்மைகளா என்று நம்மையே ஆச்சர்யப்பட வைக்கின்றதல்லவா? நாமும் வாரம் ஒருமுறை கொத்தமல்லியை குழந்தைகளின் உணவில் சேர்த்து அவர்களின் ஆரோக்கியமான உடல் நலத்திற்கு வழி வகுப்போம்.

Leave a Reply