ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
மூளை, இதுதான் உடலின் அனைத்து இயக்கங்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இயக்குனர். இவரை பாஸ் என்றே சொல்லலாம். ஒவ்வொருவருக்கும் மூளை வளர்ச்சி அவசியம் இருக்க வேண்டும். அதற்கு சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவது முக்கியம். குழந்தையின் மூளை வளர்ச்சியானது தாய் கருவுற்ற 3 மாதத்திற்கு முன்பே ஆரம்பித்துவிடுகிறது. எனவே மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் சரியான உணவுகளைக் கர்ப்பக்காலத்திலே எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
கர்ப்பக் காலத்தில் சாப்பிட வேண்டியவை
ஃபோலிக் ஆசிட், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான சத்துகள். எனவே கருத்தரித்த ஆரம்ப காலத்திலே மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த சத்தளை உணவு மூலமாகவும் மாத்திரை மூலமாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டியவை
கீரை வகைகள்:
கீரைகள் , புதினா, கொத்துமல்லி போன்ற பச்சை நிறமுள்ள கீரைகளில் மூளை வளர்ச்சிக்குத் தேவையான ஃபோலேட் , செலீனியம் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன.
கீரையில் உள்ள தாதுக்கள் செரடோனின் என்னும் வேதிப்பொருளின் உற்பத்தியைத் தூண்டி , குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தும்.
கீரைகளைத் தனியாக சாப்பிட வெறுக்கும் குழந்தைகளுக்கு ஆம்லெட் அல்லது சாலட்களில் சேர்த்துக் கொடுக்கலாம்.கீரை வடை செய்தும் கொடுக்கலாம்.
தக்காளி:
தக்காளியில் லைக்கோபீன் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளது. இது மூளையிலுள்ள செல்களைப் புத்துணர்ச்சியாக்கி ஞாபக சக்தியை அதிகமாக்க உதவும்.
காலிஃப்ளவர் மற்றும் புரோக்கோலி:
நரம்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான கோலின், வைட்டமின் பி மற்றும் பி 6 சத்துகள் இந்த காய்களில் அதிகம். இவை குழந்தைகளின் மூளை வளர்ச்சியை சீராக்கி நினைவாற்றலை அதிகரிக்கும்.
மீன்கள்:
ஒமேகா 3 கொழுப்புச் சத்து நிறைந்துள்ள மீன்களைக் குழந்தைகளுக்குக் கொடுத்து வர ஆரோக்கியமான மூளை வளர்ச்சியுடன் அவர்களின் நினைவாற்றலும் மேம்படும்.
பெர்ரி பழங்கள்:
ஸ்ட்ராபெர்ரி, செர்ரி போன்ற அடர்நிற பழங்களில் அதிக ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி உள்ளன.
மேலும் இந்த பழங்களின் விதைகளிலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமிருப்பதால் பெர்ரி வகை பழங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு பெஸ்ட் சாய்ஸாக இருக்கும்.
பீன்ஸ்:
கார்போஹைட்ரேட் , புரதச்சத்து, நார்ச்சத்து, தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் என பீன்ஸில் ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன.
மதிய உணவுகளில் பீன்ஸ் சேர்த்துக் கொடுத்தால் குழந்தைகளைப் புத்துணர்ச்சியாக உணர செய்வதோடு சிந்திக்கும் திறனையும் அதிகரிக்கும்.
முழு தானியங்கள்:
கோதுமை , சோளம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளும்போது மூளையின் செயல்பாட்டுக்கு தேவையான குளுக்கோஸ் சத்து (ஆற்றல்) சீரான அளவில் தொடர்ந்து கிடைக்கும். ஆனால் குழந்தைக்கு அப்படியே தர முடியாது என்பதால் கஞ்சி மிக்ஸ், இன்ஸ்டன்ட் மிக்ஸ் மூலம் குழந்தைகளுக்கு ஊட்டி விடலாம். நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான வைட்டமின் -பி யும் இதில் அதிகம் உள்ளது.
முட்டை:
10 மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முட்டையின் வெள்ளைப் பகுதியைத் தரலாம். இதில் அதிக அளவு புரோட்டீனும், மஞ்சள் கருவில் நரம்பு வளர்ச்சிக்கு தேவையான கோலின் சத்தும் அதிகமிருப்பதால் குழந்தைகளுக்கு தினம் ஒரு முட்டைக் கொடுக்கலாம்.
மஞ்சள்:
இரவில் மஞ்சள் கலந்த பாலைத் தினமும் குடிக்க தரலாம். அத்துடன் உணவிலும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து குழந்தைக்கு கொடுங்கள். குழந்தைக்கு ஊட்டும் பொங்கல், இட்லி சாம்பார், ரசம் சாதம் ஆகியவற்றிலும் மஞ்சள் தூள் சேர்ப்பது நல்லது. மூளையின் செயல்பாட்டை மஞ்சளில் உள்ள சத்துகள் மேம்படுத்தும். நினைவாற்றல் அதிகரிக்கும். பெரியவர்களாகி மறதி நோய் வராமல் தடுக்க முடியும். மூளைத் திசுக்களுக்கு நன்மையைச் செய்யும்.
நட்ஸ்:
பாலூட்டும் தாய்மார்கள் ஒரு கைப்பிடி நட்ஸ் சாப்பிடலாம். ஆனால் அது நட்ஸ் கலவையாக இருக்க வேண்டும். 4 பாதாம், 3 முந்திரி, 4 பிஸ்தா, 3 வால்நட், 10 உலர்திராட்சை, 2 பேரீச்சை , 2 அத்தி ஆகியவற்றைச் சாப்பிட வேண்டும். சிறு குழந்தைகளும் உலர் தானியப் பொடியை கொடுக்கலாம். பழங்களின் மேல் உலர்ந்த நட்ஸ் பொடியைத் தூவி கொடுப்பது நல்லது. இது மூளை வளர்ச்சிக்கு நல்லது.
குழந்தைகளுக்கு திட உணவுகள் கொடுக்க ஆரம்பித்த பின்னர் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் இந்த உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்கத் தொடங்கலாம். அதுவரையில் பாலூட்டும் தாய்மார்கள் இந்த உணவுகளை அதிகம் சேர்த்து தாய்ப்பாலின் வழியாக உங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பராமரித்துக் கொள்ளலாம்.
மற்ற வீட்டு வைத்திய முறைகள் பற்றி தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யுங்கள்
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply