ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கான பொருட்களை சுத்தப்படுத்துவது எப்படி?
கைகள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதுபோல குழந்தைகளுக்காக பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் கிருமிகள், தொற்றுகள் குழந்தைகளிடமிருந்து நெருங்காது. உங்கள் குழந்தைக்கு திட உணவைக் கொடுப்பதற்கு முன்னால் அவர்களுக்கென உணவு தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் அவர்கள் உணவை சாப்பிட பயன்படுத்தும் பாத்திரங்களை சுத்தம் செய்வது எப்படி எனத் தெரிந்து கொள்வது அவசியம். இதற்கென மார்கெட்டுகளில் ஏராளமான பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றையும் வாங்கி நீங்கள் பயன்படுத்தலாம்.
குழந்தைக்கு உணவு தயாரிக்க மற்றும் உணவு கொடுக்க பயன்படுத்தும் பொருட்களை சுத்தம் செய்வது எப்படி?
1. கைப்பிடி உள்ள அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
2. அதில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கும் வரை சூடுப்படுத்துங்கள்.
3. குழந்தைக்கு கூழ் தயாரிக்க, இன்றும் மிக்ஸியை பயன்படுத்தி வருகிறேன். அதனால் மிக்ஸி ஜாரையும் வெந்நீரை கொண்டுதான் சுத்தம் செய்வது நல்லது.
4. மிக்ஸி ஜாரின் உள்ளே வெந்நீரை ஊற்றி, மூடி வைத்து விடவும். 20 நிமிடம் கழித்து கழுவிய பிறகு பயன்படுத்தலாம்.
5. குழந்தைக்கு உணவு கொடுக்க உதவும் கப் வகைகள், ஸ்பூன் போன்ற பொருட்களை எல்லாம் வெந்நீரில் போட்டு விட்டு பாத்திரத்தை நன்றாக மூடி வைத்து விடுங்கள்.
6. இதனை 10 நிமிடங்கள் வரை அப்படியே விடவும்.
7. 10 நிமிடங்களுக்கு பிறகு அந்தப் பொருட்களை எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து குழந்தைக்கு உணவு கொடுக்க பயன்படுத்தலாம்.
நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை
குழந்தையின் பொருட்களை சுத்தப்படுத்தும்போது ஃபில்டர்ட் தண்ணீரைப் பயன்படுத்துவது நல்லது.
ஒவ்வொரு முறையும் குழந்தையின் பொருட்களை ஒருமுறை கழுவிய பிறகு பயன்படுத்தலாம். பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொம்மைகளைக் கூட கழுவிய பிறகு தரலாம்.
குழந்தைக்கு தேவைப்படும் பாத்திரங்களின் ஈரத்தைத் துடைக்க பிரத்யேக காட்டன் துணியை பயன்படுத்துங்கள். அந்தத் துணி குழந்தையின் பொருட்களுக்காக மட்டுமே என ஒதுக்கி வையுங்கள்.
குழந்தைகளின் பொருட்களை சுத்தம் செய்ய டிஸ்போஸபிள் டிஷ்ஷூஸ்கூட பயன்படுத்தலாம்.
முடிந்த அளவுக்கு பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்கவும். அவசியம் தேவைப்பட்டால் 2, 3, 5 எண்கள் பதித்த பிளாஸ்டிக் பொருட்களை குறைந்த காலத்துக்கு மட்டும் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் பொருட்களை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்தால், அதில் உள்ள லித்தியம் எனும் கெமிக்கல் வெளிவரும். இது நிச்சயம் குழந்தைக்கு கேடு விளைவிக்கும்.
ஸ்டீல், வெள்ளி, காப்பர், மண் பாண்டங்கள், கண்ணாடி பாத்திரங்கள் போன்றவை பாதுகாப்பானவை.
1. உங்கள் குழந்தை திட உணவை சாப்பிட தயாராகி விட்டது என்பதை எப்படி தெரிந்து கொள்வீர்கள்? இந்த லிங்க் உங்களுக்கு உதவும்.
2. 3 நாள் விதிமுறை என்றால் என்ன ? குழந்தைக்கு உணவை முதன் முதலில் கொடுக்கும்போது என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இங்கு விரிவாக படிக்கலாம்
3. ஒவ்வொரு மாதத்துக்கும் குழந்தைக்கான உணவு அட்டவணை
எங்களின் யூ ட்யூப் சேனல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள். உங்களுக்கு உபயோகமான பல்வேறு அரிய தகவல்கள் வீடியோ வடிவில் வெளியாக இருக்கிறது…
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கிறதா? எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்… எங்களிடம் இருந்து மெயில் மூலம் தகவல்கள் வேண்டும் எனில் சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply