ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
Masala for babies-
குழந்தைகளின் உணவில் மசாலா பொருட்களை சேர்க்க வேண்டுமா? என்பது குறித்து நான் எழுதுவேன் என நிச்சயம் நினைக்கவே இல்லை. என் மகன் சாப்பிடும் உணவில் நான் எந்த வித மசாலா பொருட்களையும் நான் சேர்த்தது இல்லை. காரணம் உணவில் மசாலா சேர்த்து சாப்பிட என் மகன் விரும்பாத காரணத்தால் நானும் அவனுக்கான உணவில் மசாலா பொருட்களை சேர்க்கவே இல்லை.
ஆனால் என் மகளின் விருப்பம் வேறு விதமாக இருந்தது. முதன் முதலில் பருப்பு சூப் கொடுத்தபோது அதன் சுவை அவளுக்கு பிடித்து இருந்ததால் அதனை சாப்பிட்டாள். ஆனால் அதற்கு பிறகு கேரட் கூழ் கொடுத்தேன். ஒரு வாய் மட்டும் சாப்பிட்ட அவள் அடுத்து கொடுத்த கூழை துப்பிவிட்டாள். அதன்பிறகு கேரட் கூழை அவள் சாப்பிடவே இல்லை. ஒருவேளை கேரட் சுவை தான் பிடிக்கவில்லை போல என நினைத்து அடுத்த நாள் உருளைக் கிழங்கு கூழ் செய்து கொடுத்தேன். ஆனால் அதையும் என் மகள் சாப்பிட மறுத்துவிட்டாள். அந்த கூழை வீணாக்க வேண்டாம் என நினைத்து அதில் சிறிது சீரகத்தூளை சேர்த்து என் குழந்தைக்கு கொடுத்த போது அதன் ருசி பிடித்துப் போய் மிச்சம் வைக்காமல் அனைத்தையும் சாப்பிட்டு முடித்து விட்டாள்.
அன்றிலிருந்து இன்று வரை என் மகளுக்கு தயாரிக்கும் அனைத்து உணவிலும் மசாலா பொருட்களை சேர்த்து வருகிறேன். குழந்தைகளுக்காக நான் கொடுத்துள்ள உணவுகளை பார்க்கும் போது அதில் நிச்சயம் ஒரு மசாலா பொருளாவது சேர்க்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம்…
ஆனால் குழந்தையின் ஒரு வயதுக்கு முன்னதாக சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கும் படி நான் கூறுவதில்லை. மசாலா பொருட்களை சேர்க்கும் அளவிற்கு சர்க்கரை மற்றும் உப்பை குழந்தைக்கான உணவில் சேர்க்க வேண்டாம்.
தாய்ப்பால் குடித்து வரும் குழந்தைகளுக்கு பல்வேறு விதமான மசாலா பொருட்களின் சுவை திட உணவை சாப்பிடுவதற்கு முன்னதாகவே தெரிந்து இருக்கும். அம்மா ருசியான உணவை சாப்பிடும் போது தாய்ப்பாலின் மூலமாக அந்த உணவின் ருசியை குழந்தையும் நிச்சயம் சுவைத்திருக்கும்.
குழந்தைக்கு தயாரிக்கப்படும் கூழ் வகைகள், கஞ்சி வகைகள், சாத வகைகள், கீர் வகைகள் மற்றும் மலாய் போன்ற அனைத்து உணவுப் பொருட்களில் நீங்கள் மசாலா பொருட்களை சேர்க்கலாம்.
குழந்தையின் வயதுக்கு ஏற்றார் போல அவர்களின் தேவையை பொறுத்து உணவின் சுவையை கூட்டும் வகையில் மசாலா பொருட்களை அவர்களின் உணவில் சேர்த்து வாருங்கள்…
குழந்தை திட உணவை சாப்பிட ஆரம்பிக்கும் போது நீங்கள் அனைத்து விதமான மசாலா பொருட்களையும் அவர்கள் உணவில் சேர்க்கலாம். ஆனால் மசாலா பொருட்களை அவர்களுக்கு நேரடியாக கொடுக்கும் போது அது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் கவனமாக இருங்கள். எந்த ஒரு மசாலா பொருட்களையும் முதன் முறையாக கொடுக்கும் போது 3 நாள் விதிமுறையை பின்பற்றுங்கள்…
எப்போது என் குழந்தைக்கு பெருங்காயத்தை நான் தரலாம்?
குழந்தையின் 6 மாதம் நிறைவடைந்த பிறகு நீங்கள் பெருங்காயத்தை தரலாம்.
இதனை குழந்தைக்கு தயாரிக்கப்படும் சாதத்துடன் சேர்த்து சமைத்து தாருங்கள்.
எந்த அளவு பெருங்காயத்தை குழந்தையின் உணவில் சேர்க்கலாம்?
ஒரு சிட்டிகை அளவு சேர்த்தால் போதுமானது.
குழந்தைக்கு பெருங்காயத்தில் இருக்கும் கிடைக்கும் நன்மைகள் :
குழந்தைக்கு ஏற்படும் வாயுக் கோளாறுகளை அகற்றுவதுடன் உணவுகளை எளிதில் ஜீரணிக்க வைக்க உதவியாக இருக்கிறது.
குழந்தைக்கு 6 மாதம் நிறைவடைந்த பிறகு நீங்கள் மஞ்சள் தூளை தாராளமாக தரலாம்.
குழந்தைக்கு தயாரிக்கப்படும் பருப்பு சூப், சாதம், சூப் வகைகள், உலர் தானிய பொடி போன்ற பொருட்களுடன் மஞ்சள் தூளையும் நீங்கள் சேர்த்து தரலாம்.
குழந்தையின் உணவில் எந்த அளவு மஞ்சள் தூளை சேர்க்கலாம்?
நீங்கள் தயாரிக்கும் உணவைப் பொறுத்து நீங்கள் சேர்க்கும் மஞ்சள் தூளின் அளவும் மாறும். சாதமாக இருந்தால் கால் டீஸ்பூன் அளவு மஞ்சள் தூளை சேர்க்கலாம். சூப், பருப்பு சூப் ஆகியவற்றில் ஒரு சிட்டிகை அளவு சேர்த்தால் போதும்.
குழந்தைக்கு மஞ்சள் தூளில் இருந்து கிடைக்கும் நன்மைகள் :
குழந்தைக்கு இயற்கையாக கிடைக்கும் ஆன்டிசெப்டிக் இது. குழந்தைக்கு ஏற்படும் சளி மற்றும் இருமல் தொல்லைகளை நீக்கும் தன்மை கொண்டது. இதில் சக்தி வாய்ந்த உயிர் வளியேற்ற எதிர்பொருள் உள்ளது.
குழந்தையின் 6 வது மாதம் நிறைவடைந்த பிறகு நீங்கள் சீரகத்தை தாராளமாக தரலாம்.
சீரகத்தை நீங்கள் கூழ், சாதம், கஞ்சி வகைகள் மற்றும் சூப் ஆகியவற்றுடன் சேர்த்து தர ஏற்றது.
குழந்தையின் உணவில் சீரகத்தை எந்த அளவு சேர்க்கலாம்?
நீங்கள் தயாரிக்கும் உணவின் அளவை பொறுத்து அது மாறுபடும். அதாவது உணவின் அளவைப் பொறுத்து ஒரு சிட்டிகை சீரகப் பொடியில் இருந்து கால் டீஸ்பூன் சீரகத் தூளை நீங்கள் குழந்தையின் உணவில் சேர்க்கலாம்…
குழந்தைக்கு சீரகத்தில் இருந்து கிடைக்கும் நன்மைகள் :
குழந்தைக்கு ஏற்படும் பூஞ்சை தொற்றுகளில் இருந்து காக்கும் தன்மை சீரகத்திற்கு உண்டு. மேலும் இது நுண்ணுயிர்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு பிரச்சினைகளை தடுப்பதுடன், அவர்களுக்கு ஏற்படும் வாயுத் தொல்லைகளையும் சரிசெய்கிறது.
குழந்தைக்கு 6 மாதம் நிறைவடைந்த பிறகு அவர்களின் திட உணவில் நீங்கள் பட்டையை சேர்த்துக் கொள்ளலாம்.
பட்டையை நீங்கள் ஆப்பிள் கூழ் மற்றும் பேரிக்காய் கூழுடன் சேர்த்து தரலாம். மேலும் பழங்கள், ஓட்ஸ் கஞ்சி, கோதுமை மற்றும் பழம் கலந்த கேக், ஜாம் வகைகள் மற்றும் மசாலா சாதத்துடன் பட்டையை நீங்கள் சேர்க்கலாம்… ஆப்பிள் மற்றும் பேரிக்காய் கூழுடன் சேர்த்து தருவதற்கு பட்டை ஒரு சிறந்த பொருளாக இருப்பதால் அதன் சுவை குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்துப் போகும்.
குழந்தையின் உணவில் எந்த அளவு பட்டையை சேர்க்கலாம்?
கேக் மற்றும் ஜாம் வகைகளை தவிர்த்து குழந்தைக்கு தயாரிக்கப்படும் உணவில் ஒரு சிட்டிகை அளவு பட்டைத் தூளை சேர்த்து கொடுக்க ஏற்றது.
குழந்தைக்கு பட்டையில் இருந்து கிடைக்கும் நன்மைகள் :
குழந்தையின் செரிமான சக்திக்கு மிகவும் ஏற்றது. மேலும் சிறந்த ஆக்சிஜனேற்ற பொருளாகவும் இருக்கிறது.
குழந்தைக்கு 7வது மாதம் நிறைவடைந்த பிறகு நீங்கள் அவர்களின் உணவில் கொத்தமல்லி தழையை சேர்க்கலாம்…
கொத்தமல்லி தழையை நீங்கள் சூப், சாதம் வகைகளில் சேர்த்து கொடுக்கலாம்.
இதனை நன்றாக மசித்தோ அல்லது அரைத்தோ உணவுடன் சேர்க்க வேண்டும். கொத்தமல்லி தழையை அப்படியே உணவில் சேர்த்தால் அது முழுதாகவே அவர்களின் மலத்தில் வெளியேறி விடும்.
குழந்தையின் உணவில் எந்த அளவு கொத்தமல்லி தழையை சேர்க்கலாம்?
சிறு சிறு தழைகளில் ஒன்றிரண்டை கொடுக்கலாம். அல்லது ஒரு கொத்தில் உள்ள இலைகளை எடுத்து உணவுடன் சேர்க்கலாம்… ஆனால் நன்றாக கழுவிய பின் பொடிப் பொடியாக நறுக்கி அதனை குழந்தையின் உணவில் சேர்க்க வேண்டியது அவசியம்.
குழந்தைக்கு கொத்தமல்லி தழையில் இருந்து கிடைக்கும் நன்மைகள் :
சிறந்த ஆன்டிசெப்டிக் ஆக செயல்படுகிறது. மேலும் ஆக்சிஜனேற்ற பொருளாக இருப்பதால் வயிற்றுப் போக்கு பிரச்சினையை தடுக்கிறது. இதில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.
கரம் மசாலா பொடியை குழந்தையின் உணவில் சேர்க்க வேண்டும் என்றால் உங்கள் குழந்தைக்கு ஒரு வயது நிறைவாகி இருக்க வேண்டும். அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் உணவுகளில் இதனை சேர்த்து தரலாம்…
கரம் மசாலா பொடியை குழந்தைக்கு தயாரிக்கப்படும் சாதம், பான் கேக் மற்றும் பிரியாணி ஆகியவற்றில் வாசனைக்காக சேர்க்கலாம்…
குழந்தையின் உணவில் எந்த அளவு கரம் மசாலாவை சேர்க்கலாம்?
ஒரு சிட்டிகை அளவில் இருந்து கால் டீஸ்பூன் வரையிலான கரம் மசாலாவை உங்கள் குழந்தையின் உணவில் சேர்க்கலாம்…
குழந்தையின் 7 வது மாதம் நிறைவடைந்த பிறகு அவர்களின் உணவில் புதினாவை நீங்கள் சேர்க்கலாம்…
புதினா இலைகளை நன்றாக கழுவி பொடிப் பொடியாக நறுக்கி பின் அதனை சூப் மற்றும் சாத வகைகளுடன் சேர்த்து கொள்ளலாம்…
குழந்தையின் உணவில் புதினாவை எந்த அளவு சேர்க்க வேண்டும் ?
ஒரு கொத்து புதினா இலைகள் அல்லது 6 முதல் 7 புதினா இலைகளை குழந்தையின் உணவுடன் சேர்க்கலாம்…
உணவை எளிதில் ஜீரணிக்க வைக்க புதினா பேருதவி புரிகிறது. வயிற்றுப் போக்கு பிரச்சினை ஏற்படும் போது அதனை சரி செய்ய புதினா உதவும். மேலும் சுவாசக் குழாய் தொடர்பான பிரச்சினைகளை தடுக்கவும் புதினா உதவுகிறது.
குழந்தைக்கு 7வது மாதம் நிறைவான பிறகு நீங்கள் அவர்களின் உணவில் வெந்தயத்தை சேர்த்துக் கொள்ளலாம். குழந்தை உணவை மென்று சாப்பிடும் நிலை வராத வரை அவர்களுக்கு வெந்தயம் ஜீரணிக்காது. அதுவரை வெந்தயமானது அவர்களின் மலத்தில் தான் வெளியேறும்.
குழந்தைக்கு 7 வது மாதம் நிறைவடைந்த பிறகு அவர்களின் உணவில் கறிவேப்பிலையை சேர்க்கலாம்.
கறிவேப்பிலையை நீங்கள் அவர்களுக்கு தயாரிக்கும் சாதத்துடன் சேர்க்கலாம். இதனை வெறும் வாசனைக்காக மட்டும் தான் சேர்க்கிறோம். அதனால் குழந்தைக்கு உணவைக் கொடுப்பதற்கு முன் இலைகளை எடுத்துவிட வேண்டும்.
குழந்தையின் உணவில் எந்த அளவு கறிவேப்பிலையை சேர்க்கலாம்?
2 முதல் 3 இலைகளை சேர்த்தால் போதுமானது. ஆனால் அதையும் உணவை ஊட்டுவதற்கு முன்னால் எடுத்து விடுங்கள்.
குழந்தைக்கு கறிவேப்பிலையில் இருந்து கிடைக்கும் நன்மைகள் :
கறிவேப்பிலையில், அலர்ஜிகளை எதிர்க்கும் தன்மை உள்ளதால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு பிரச்சினையை சரிசெய்கிறது. மேலும் குழந்தைக்கு உணவு எளிதில் ஜீரணமாக உதவுகிறது.
குழந்தைக்கு 6 மாதம் நிறைவடைந்த பிறகு அவர்களின் உணவில் பூண்டை சேர்த்துக் கொள்ளலாம்.
பூண்டை குழந்தைக்கு தயாரிக்கும் பருப்பு சூப், இதர சூப் வகைகள் மற்றும் சாதம் ஆகியவற்றுடன் சேர்க்கலாம்…
குழந்தையின் உணவில் எந்த அளவு பூண்டை சேர்க்கலாம்?
குழந்தையின் ஒரு வயதுக்கு முன்னதாக 2 பல் பூண்டை(பூண்டு பல்லின் அளவைப் பொறுத்து) அவர்களின் உணவில் சேர்க்கலாம். ஆனால் இதனை நன்றாக நசுக்கிய பின் உணவில் சேர்க்க வேண்டும். அல்லது உணவு ஊட்டுவதற்கு முன்னதாக அதனை கைகளால் மசித்து உணவுடன் சேர்த்து கொடுக்கவும். ஆனால் குழந்தைக்கு பருப்பு சூப்பில் பூண்டை சேர்க்கலாம். ஆனால் அதனை குழந்தைக்கு கொடுப்பதற்கு முன்னால் பூண்டை நீக்கி விடுங்கள்.
குழந்தைக்கு பூண்டில் இருந்து கிடைக்கும் நன்மைகள் :
நுண்ணுயிர்களை எதிர்த்து உடலில் போராடும் தன்மை கொண்டது. உயிர் வளியேற்ற எதிர்பொருள் கொண்டது. மேலும் இதில் விட்டமின் சி சத்துகள் அதிகமாக உள்ளது.
குழந்தைக்கு 6 அல்லது 7 மாதங்களில் திட உணவை கொடுக்கும் போது அவர்களின் உணவில் இஞ்சியை சேர்த்துக் கொள்ளலாம்.
நன்றாக துருவிய இஞ்சியை ஆப்பிள் கூழ்,கேரட் கூழ், பேரிக்காய் கூழ், சர்க்கரை வள்ளிக் கிழங்கு கூழ், மசாலா சாதம் மற்றும் சூப் வகைகள், அரிசி வகை உணவுகளில் சேர்க்கலாம்…
குழந்தையின் உணவில் எந்த அளவு இஞ்சியை சேர்க்கலாம்?
நன்றாக துருவிய இஞ்சியை ஆரஞ்சு பழ விதையளவு எடுத்து குழந்தைகளின் உணவில் சேர்க்கலாம்.
குழந்தைகளுக்கு இஞ்சியின் மூலம் கிடைக்கும் நன்மைகள் :
குழந்தைகளுக்கு ஏற்படும் சளி மற்றும் இருமலை போக்க எளிமையான வீட்டு வைத்திய பொருள் இது. மேலும் சுவாசம் தொடர்பான பிரச்சினைகளை தடுப்பதுடன் குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சினையையும் சரிசெய்கிறது.
குழந்தை எப்போது திட உணவை சாப்பிட ஆரம்பிக்கிறதோ அதற்கு பிறகு (அதாவது 6 வது மாதத்தில்) சோம்பை நீங்கள் அவர்களின் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
சோம்பு விதைகளை நீங்கள் குழந்தைகளுக்கு சாதம் தயாரிக்கும் போது தாளித்து சேர்க்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலிகளுக்கு சோம்பினால் தயாரித்த டீயை வழங்குவதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை உங்கள் குழந்தைக்கு வயிற்று வலி இருந்தால் நீங்கள் தாய்ப்பால் ஊட்டும் தாய்மாராக இருக்கும் போது நீங்கள் உணவில் சோம்பை சேர்த்துக் கொண்டால் போதும். தாய்ப்பாலின் மூலம் உங்கள் குழந்தைக்கு சோம்பின் சக்தி சென்று அவர்களின் வயிற்று வலியை குணமாக்கும்.
குழந்தையின் உணவில் எந்த அளவு சோம்பை சேர்க்கலாம் ?
குழந்தைக்கு தயாரிக்கும் சாதத்தில் தாளிக்க ஒன்றிரண்டு சோம்புகளை சேர்த்தால் போதுமானது. ஆனால் குழந்தைக்கு சாதம் ஊட்டுவதற்கு முன்னதாக உணவில் உள்ள சோம்பு விதைகளை நீக்கி விடுங்கள்.
குழந்தைக்கு 8 வது மாதம் நிறைவடைந்த பிறகு அவர்களின் உணவில் கிராம்பை நீங்கள் சேர்த்து தரலாம்.
கிராம்பை நீங்கள் அவர்களுக்கு தயாரிக்கும் ஆப்பிள் சாஸ், மசாலா சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து தாருங்கள்.
குழந்தையின் உணவில் எத்தனை கிராம்புகளை சேர்க்க வேண்டும் ?
குழந்தையின் உணவில் 2 கிராம்புகளை சேர்த்தால் போதும். ஆனால் உணவை ஊட்டுவதற்கு முன்னதாக அவற்றை நீக்கி விடுங்கள்.
குழந்தை 8 மாதங்களை நிறைவு செய்த பிறகு நீங்கள் அவர்களின் உணவில் கடுகை சேர்க்கலாம்.
கடுகை குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் சாதம் மற்றும் சூப் வகைகளில் சேர்த்துக் கொள்ளலாம்.
கவனிக்க வேண்டியது : குழந்தை தன் வாயில் உணவை மென்று சாப்பிடும் போதுதான் கடுகு அவர்களுக்கு செரிமானமாகும். அதுவரையிலான காலகட்டத்தில் நீங்கள் சேர்க்கும் கடுகு முழு வடிவத்தில் அவர்களின் மலத்திலேயே வெளியேறும்.
குழந்தையின் உணவில் எந்த அளவு கடுகு சேர்க்கலாம் ?
கால் டீஸ்பூனுக்கும் குறைவான அளவில் கடுகை குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் சாதம் மற்றும் மற்ற உணவுகளில் சேர்க்கலாம்.
கடுகினால் குழந்தைகளுக்கு கிடைக்கும் நன்மைகள் :
குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் நெஞ்சு எரிச்சல் மற்றும் அடைப்பை தடுக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சினைக்கு இது தீர்வு தரும்.
குழந்தைக்கு 6 வது மாதம் முடிந்த பிறகு அவர்களின் உணவில் ஏலக்காயை சேர்க்கலாம்.
பச்சை ஏலக்காய் அல்லது ஏலக்காய் பொடியை குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் கீர், ஷீரா, கஞ்சி வகைகள் மற்றும் பான் கேக்கில் சேர்க்கலாம்.
குழந்தையின் உணவில் எந்த அளவு ஏலக்காயை சேர்க்கலாம்?
கால் அல்லது அரை டீஸ்பூன் அளவிற்குள் ஏலக்காய் பொடியை குழந்தைகளுக்கு தயாரிக்கும் உணவில் சேர்க்கலாம்.
குழந்தைகளுக்கு ஏலக்காயின் மூலம் கிடைக்கும் நன்மைகள் :
எளிதில் உணவை ஜீரணமாக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் சுவாச கோளாறுகளை தடுக்கிறது. இதில் அதிகளவிலான காப்பர் சத்தும், இரும்பு சத்துகளும் உள்ளன. மேலும் இதில் உள்ள ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் சி சத்துகள் ரத்த சோகையில் இருந்து குழந்தைகளை காக்கும் தன்மை கொண்டது.
குழந்தைகளுக்கு 8 வது மாதம் நிறைவடைந்த பிறகு அவர்களின் உணவில் குங்குமப் பூவை சேர்க்கலாம்.
குங்குமப் பூ இழைகளை குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் கீர் வகைகள், உலர் தானிய பொடி மற்றும் ஷீரா, பாயசம் போன்ற உணவு வகைகளில் சேர்க்கலாம்.
குழந்தைகளின் உணவில் எந்த அளவு குங்குமப் பூவை சேர்க்கலாம் ?
சமைக்கும் போது ஒன்று அல்லது இரண்டு இழைகளை சேர்த்தால் போதுமானது. ஒரு வேளை அது உணவில் கரையாத பட்சத்தில் உணவை குழந்தைக்கு கொடுப்பதற்கு முன்னதாக குங்குமப் பூ இழைகளை எடுத்து விடுவது நல்லது.
குழந்தைகளுக்கு குங்குமப் பூ மூலம் கிடைக்கும் நன்மைகள் :
குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணிக்கும் தன்மையை குங்குமப் பூ தருகிறது.
குழந்தைக்கு 8 வது மாதம் நிறைவடைந்த பிறகு அவர்களின் உணவில் ஜாதிக்காயை நீங்கள் தரலாம்.
குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் கீர் வகைகள், உலர் தானிய பொடி, ஷீரா, மற்றும் பாயசம் போன்ற உணவுகளில் ஜாதிக்காய் பொடியை சேர்க்கலாம்.
ஜாதிக்காயை குழந்தைகளின் உணவில் எவ்வளவு சேர்க்கலாம் ?
ஒரு சிட்டிகை அளவிலான ஜாதிக்காய் பொடியை குழந்தைகளின் உணவில் சேர்க்கலாம்…
ஜாதிக்காய் மூலம் குழந்தைகளுக்கு கிடைக்கும் நன்மைகள் :
குழந்தைகள் ஆழ்ந்த தூக்கத்தை தரக் கூடிய தன்மை ஜாதிக்காய்க்கு உண்டு. மேலும் உணவு எளிதில் ஜீரணமாக இது உதவுகிறது.
குழந்தைக்கு 7 வது மாதம் நிறைவடைந்த பிறகு அவர்களுக்கு ஓமத்தை தரலாம்.
ஓமம் அல்லது ஓமப் பொடியை குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் சாத வகைகள், ஹெல்த் மிக்ஸ், கஞ்சி வகைகள், குழந்தைகள் தங்கள் கைகளால் சாப்பிடக் கூடிய உணவு வகைகள் மற்றும் அவர்களின் ஸ்நாக்ஸ் வகைகளில் சேர்த்து தரலாம்.
குழந்தகைதளுக்கு எந்த அளவு ஓமம் கொடுக்கலாம்?
கால் முதல் அரை டீஸ்பூன் அளவிலான ஓமப் பொடியை குழந்தைகளின் உணவில் சேர்க்கலாம்…
குழந்தைகளுக்கு ஓமத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள் :
வயிற்றுப்போக்கு, சளி மற்றும் இருமல் பிரச்சினையை தீர்க்க சிறந்த வீட்டு வைத்திய முறைக்கு இது உதவும். குழந்தைகளுக்கு ஏற்படும் குடல் புழு பிரச்சினையை தடுக்க ஓமம் உதவுகிறது. மேலும் எளிதில் ஜீரணமாக்கும் சக்தியை இது தருகிறது.
குழந்தையின் 6 வது மாதம் முதல் 7 வது மாதம் வரையிலான கால கட்டத்தில் ஒரு சிட்டிகை அளவு மிளகுத்தூளை கொடுத்துப் பாருங்கள். ஒருவேளை அது அவர்களுக்கு ஒத்துக் கொண்டால் தாராளமாக தரலாம். இல்லாவிட்டால் 14 முதல் 18 மாதங்கள் நிரம்பிய குழந்தைக்கு மிளகை நீங்கள் அவர்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
மிளகை நீங்கள் சாதம், கஞ்சி வகைகள், காய்கறி தோசை மற்றும் சூப்பில் சேர்த்து தரலாம்.
குழந்தைகளின் உணவில் எந்த அளவு மிளகை சேர்க்கலாம்?
கால் முதல் அரை டீஸ்பூன் அளவு மிளகுத் தூளை நீங்கள் குழந்தைகளுக்கான உணவில் சேர்க்கலாம்.
குழந்தைகளுக்கு மிளகில் இருந்து கிடைக்கும் நன்மைகள் :
குழந்தைகளின் உணவில் மிளகை சேர்த்தால் சளி மற்றும் இருமலை தடுக்கும் தன்மை கொண்டது. மேலும் செரிமானத்திற்கு மிளகு பேருதவி புரிகிறது.
குழந்தைகளுக்கு 14 முதல் 18 மாதங்களுக்கு இடையிலான கால கட்டத்தில் நீங்கள் சிவப்பு மிளகாயை அவர்களின் உணவில் அறிமுகப்படுத்தலாம்.
சிவப்பு மிளகாய் தூளை குழந்தைகளுக்கு தயாரிக்கும் சாதம் மற்றும் காய்கறி வகைகள், கிரேவிகளில் சேர்க்கலாம்.
குழந்தைகளின் உணவில் எந்த அளவு சிவப்பு மிளகாயை சேர்க்கலாம்?
கால் முதல் அரை டீஸ்பூன் அளவிலான சிவப்பு மிளகாய் தூளை நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
குழந்தைக்கு 14 மாதம் முதல் 18 மாதங்கள் வரையிலான காலகட்டத்தில் நீங்கள் பச்சை மிளகாயை அவர்களின் உணவில் சேர்க்க முடியும்.
குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் உணவில் சிறிய அளவிலான பச்சை மிளகாயில் பாதியை எடுத்து அதை நன்றாக அரைத்து உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கு ஒரு வயது நிறைவடைந்த பிறகு அவர்களின் உணவில் புளியை சேர்க்கலாம். நாம் வீட்டில் சாப்பிடும் உணவை குழந்தைகளுக்கு கொடுக்கும் கால கட்டத்தில் புளியை கொடுத்து பழக்குங்கள்.
புளியை குழந்தைகளுக்கு தரும் சாம்பார், கிரேவி வகைகள் மற்றும் சாத வகைகளில் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply