பால் மட்டுமே குடித்துக் கொண்டிருந்த உங்கள் குழந்தையின் டயட்டில் சின்ன மாற்றம். திட உணவைக் குழந்தைக்குக் கொடுப்பதை நாம் வீனிங் (Weaning) என்கிறோம். இந்த வீனிங்கின் முதல் படி, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் குழந்தைக்கு அறிமுகப்படுத்துவது. அதாவது, திட உணவுகள் குழந்தைக்கு கொடுப்பது. குழந்தை, ஸ்பூனில் இருந்து எப்படிச் சாப்பிடுவது, எப்படி மென்று விழுங்குவது என முதல்முறையாக நீங்கள் குழந்தைக்குக் கற்றுத் தருகிறீர்கள். இந்த முறையால் குழந்தை வேறு சுவையை உணர்கிறது; உணவின் தன்மையை, பதத்தை உணரத் தொடங்குகிறது. இதை அவர்களின் அழகான முகசுளிப்பில் நீங்கள் கண்டு ரசிக்கலாம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகள் நாம் சாப்பிடுவதைப் பார்த்தால், தனக்கும் வேண்டும் என்பதுபோலப் பார்பார்கள். ஆனால், திட உணவுகள் குழந்தைக்கு கொடுக்கலாமா எனத் தெரியாது. வீட்டுப் பெரியவர்கள், நண்பர்கள், குடும்பத்தில் உள்ளவர்கள் போன்றவர்களின் கட்டாயத்தால் சிலர் முன்னதாகவே திட உணவுகள் கொடுக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகிறார்கள். ஆனால், குழந்தைக்கு எப்போது திட உணவுகள் கொடுக்கலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
“குழந்தையின் 6-வது மாதத்தில் இருந்து திட உணவுகள் கொடுக்கலாம்” என்கிறது இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்.
”அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ், 6-வது மாதம் நெருங்கும்போது திட உணவுகள் கொடுக்கலாம்” என்கிறது.
“குழந்தையின் 17-வது வாரத்தில் இருந்து 27-வது வாரம் வரையிலான காலகட்டத்தில் திட உணவை அறிமுகப்படுத்தினால் நாட்பட்ட நோய்கள், அலர்ஜி, வயிற்று உபாதைகள் ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு” என்கிறது ஒரு புள்ளி விபரம்.
மருத்துவரின் கருத்துக்கும் இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்களுக்கும்கூட சில மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் முடிவெடுக்க வேண்டியது நிச்சயம் நீங்கள்தான்… அனைத்து குழந்தைகளும் ஒன்றல்ல. ஒவ்வொரு குழந்தையின் உடல்நலமும் வெவ்வேறாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் அப்படித்தான். அவர்களின் செய்கையை உணர்ந்து நீங்கள் முடிவெடுப்பது நல்லது.
ஆனால் குழந்தையின் 4-வது மாதத்தில் திட உணவை அறிமுகப்படுத்தினால் பிற்காலத்தில் உடல்பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் தெரிவிக்கிறது. எனவே, நான்கு மாதங்களுக்கு முன்னதாகக் குழந்தைக்குத் திட உணவைக் கொடுப்பதைத் தவிர்த்து விடுங்கள். மருத்துவரின் பரிந்துரையின் படி 5 முதல் 6 மாதங்களுக்குள் நீங்கள் தாராளமாகத் திட உணவைக் கொடுக்கலாம். அதாவது, 6-வது மாதத்திலிருந்து திட உணவைக் குழந்தைகளுக்கு கொடுத்தாக வேண்டும். ஏனெனில் குழந்தையின் வளர்ச்சிக்கு திட உணவுகள் முக்கியம்.
இப்போது உங்களின் புரிதல் மேம்பட்டிருக்கும்…
- தன் கைகளால் எதையாவது எடுக்க முயற்சி செய்வது.
- கட்டைவிரல், ஆட்காட்டி விரலால் பொருட்களை எடுக்கத் தொடங்குவது.
- தேவையான பாலைக் குடித்த போதும் பசியுடன் இருப்பது.
- பொருட்களை எடுத்து வாயில் வைக்கத் தொடங்குவது.
- குழந்தையின் கழுத்து நின்ற பிறகு நீங்கள் உணவைக் கொடுக்கலாம். சில குழந்தைகளுக்கு 3-வது மாத இறுதியிலேயே கழுத்து நின்று விடும். அவர்களின் செய்கை மற்றும் பசியை அறிந்து திட உணவுக் கொடுக்கலாம்.
- குழந்தை தானாக உட்கார தொடங்கும்போது கொடுக்கலாம்.
- குழந்தை தன்னுடைய நாக்கை உள்ளேயும் வெளியேயும் சுழற்றியபடி இருப்பது;
வாயை எப்போதும் அசைபோட்டபடி இருப்பது. - சாப்பிடுபவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் தன் நாக்கை வெளியே நீட்டி சைகை கொடுத்தாலும் குழந்தை திட உணவைச் சாப்பிட விரும்புகிறது என அர்த்தம்.
- குழந்தை அமர்ந்திருக்கும் நிலையில் உணவைக் கொடுக்க வேண்டும். குழந்தையைப் படுக்கவைத்தபடி உணவை ஒருபோதும் கொடுக்க கூடாது.
- குழந்தைக்கு ஊட்டும் ஸ்பூன் கூர்மையாக இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். ஸ்பூன் கூர்மையாக இருந்தால் குழந்தையின் ஈறுகளைப் பாதிக்கும்.
- குழந்தைக்காகப் பயன்படுத்தும் ஸ்பூன் உள்ளிட்ட பாத்திரங்களை வெந்நீரில் முக்கி எடுத்து நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். இப்போது இதற்கென நிறையப் பொருட்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம்.
- உணவு சரியான பதத்தில் இருக்க வேண்டியது அவசியம். ஸ்பூனில் எடுத்து குழந்தைக்கு ஊட்டும்போது உணவு கீழே கொட்டாமல் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.
- உணவைத் தயார் செய்த இரண்டு மணி நேரத்திற்குள் குழந்தைக்கு ஊட்டிவிடுங்கள். தயாரித்த உணவு இரண்டு மணி நேரமாகிவிட்டால், அதைக் குழந்தைக்குத் தர வேண்டாம். எப்போதும் புதிதாக தயாரித்த உணவுகளைத் தருவது நல்லது.
- குழந்தைக்கு எந்த மாதத்தில் எதைத் தரவேண்டும் என்பதை மாத வாரியான உணவு அட்டவணையைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
குழந்தைக்கு உணவுக் கொடுப்பதற்கு முன் அதுபற்றிய அனைத்து தகவல்களையும் முழுமையாகத் தெரிந்து கொள்வது நல்லது. இதனால் குழந்தையின் நலம் மேம்படும். கவலையின்றி, மகிழ்ச்சியாக உங்கள் குழந்தைக்கு உணவளியுங்கள். நீங்கள் தருவது வெறும் உணவல்ல; உணவின் மூலமாக ஊட்டத்தைக் குழந்தைக்கு தருகிறீர்கள் என்பதை நினைவில் வையுங்கள்.
*****
மாத வாரியாக உங்களுக்கு டயட் சார்ட் தேவையெனில் எங்களை கூகுள் பிளஸ், ட்விட்டர், பின்ட்ரஸ்ட்டில் பின் தொடருங்கள். மை லிட்டில் மொப்பெட் பக்கத்தை முகப்புத்தகத்தில் லைக் செய்யுங்கள்.
எங்களின் கட்டுரைகள் உங்களுக்கு பிடித்திருந்தால், நியூஸ்லெட்டரை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள். இதனால் உங்களுக்கு அனைத்து தகவல்களும் வந்து சேரும். நிச்சயம் அவை உதவியாக இருக்கும்.
இந்த கட்டுரைகள் எல்லாம் எழுதியவரின் முடிவுக்கு உட்பட்டவையே. அவர் சுயமாக பரிசோதித்து அதனை உங்களுக்கு வழங்கியுள்ளார். இதனை பின்பற்றுவது உங்கள் விருப்பம்தான். இதற்கு அவர் எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்…
References
# – 2013 Sep-Oct;41(5):337-45. doi: 10.1016/j.aller.2012.08.012. Epub 2012 Dec 31.The timing of introduction of solid food and risk of allergic disease development: understanding the evidence.
Sansotta N1, Piacentini GL, Mazzei F, Minniti F, Boner AL, Peroni DG.
#- http://pediatrics.aappublications.org/content/89/6/1105
photo credit: jeff.snodgrass via photopin cc photo credit: Turkinator via photopin cc
Leave a Reply