Nalangu Maavu Seivathu Eppadi?: வண்ண வண்ண சோப்புகள் உலா வருவதற்கு முன்னால் நம் குளியலறையை அலங்கரித்தவை நலங்கு மாவு. நான் சிறுவயதிலிருக்கும் பொழுது என் பாட்டி தயாரித்த குளியல் பொடியை இன்றும் மறக்க முடியாது.அதன் ரம்மியமான வாசனை உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.இன்று குழந்தைகளுக்கென பிரத்யேகமாக பல்வேறு சோப்புகள் வந்தாலும் நாம் வீட்டிலேயே தயாரிக்கும் குளியல் பொடிக்கு ஈடாகாது.நமது குழந்தைகளுக்கென பார்த்து பார்த்து வாங்கும்பொழுது ஆரோக்கியதுடன் அன்பும் கலந்தல்லவா இருக்கும்!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
நலங்கு மாவு தயாரிக்கும் முறை,அவற்றின் நன்மைகள் மற்றும் உபயோகிக்கும் முறை ஆகியவற்றை காணலாம்.
Nalangu Maavu:
நலங்கு மாவு பொடி என்றால் என்ன ?
பாரம்பரியமாக நம் முன்னோர்கள் குளியலுக்கு பயன்படுத்திய மூலிகை பொருட்களின் கலவையே நலங்கு மாவு ஆகும்.இது கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, செண்பகப்பூ, ரோஜா இதழ்கள் மற்றும் பலவகையான மூலிகை பொருட்கள் கலந்தது.இது குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு ஏற்றது மேலும் தோல் சம்மந்தமான பிரச்சனைகள் அண்டாது.
நலங்கு மாவு உபயோகிப்பதால் கிடைக்கும் பயன்கள்:
- சருமத்திலிருக்கும் அதிகப்படியான எண்ணெய்பசையை நீக்குகின்றது.
- குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு ஏற்றது.
- தோலை பளபளப்பாக்கும்.
- சருமத்தின் அமிலத்தன்மையை நிலைப்பாட்டில் வைக்கின்றது.
- இதில் கலந்துள்ள மஞ்சள் முகத்திலுள்ள மாச, மரு நீக்கி தோலுக்கு ஊட்டமளிக்கும்.
- உடலுக்கு நிறத்தைக் கூட்டும் தன்மை கொண்டது.
- வெயில் காலங்களில் ஏற்படும் சரும தொல்லைகள் வராமல் தடுக்கப்படும்.
- வியர்க்குரு தொல்லையும் இருக்காது.
- இதை தினமும் பூசி வர உடலில் ஏற்படும் வியர்வை நாற்றத்தை தடுக்கும்.
- நலங்கு மாவினை தொடர்ந்து உபயோகிக்கும் போது முகப் பருவானது குறைவதுடன் நாளடைவில் மறைந்து மீண்டும் தோன்றாமல் போகும்.
நலங்கு மாவு தயாரிக்கும் முறை:
நலங்குமாவில் இடம் பெற்றுள்ள பொருட்கள் எல்லா வகையான சருமத்தினரும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி அரைக்க வேண்டும்.
- கஸ்தூரி மஞ்சள்- 250 கிராம்
- மஞ்சள் கிழங்கு -200 கிராம்
- பூலாங்கிழங்கு- 100 கிராம்
- ரோஜா பூ-100 கிராம்
- ஆவாரம் பூ-100 கிராம்
- செண்பக மொட்டு-50 கிராம்
- கார்போக அரிசி- 100 கிராம்
- கோரை கிழங்கு- 50 கிராம்
- வெட்டிவேர்- 25 கிராம்
- மலை நன்னாரி-100 கிராம்
- பூஞ்சாந்து பட்டை- 50 கிராம்
- திருமஞ்சன பட்டை- 100 கிராம்
- மரிக்கொழுந்து- 50 கிராம்
- மருவு- 50 கிராம்
- பச்சிலை- 50 கிராம்
- வசம்பு- 25 கிராம்
- கல்பாசி- 50 கிராம்
- அதிமதுரம்-50 கிராம்
- லவங்க பத்திரி இலை -25 கிராம்
இதையும் படிங்க: குழந்தைகளுக்கான உளுந்து ராகி கஞ்சி
Nalangu Maavu:
1.மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வாங்கி 2-3 மணி நேரங்களுக்கு காய வைக்க வேண்டும்.
2.மெஷினில் கொடுத்து பொருட்களை அரைக்க வேண்டும்.குளியல் பொடியை அரைக்கும் மெஷினில் அரைக்க வேண்டும்.ஏனென்றால் மசலா பொருட்களை அரைக்கும் மெஷினில் நலங்கு மாவினை அரைக்கும் பொழுது உடலுக்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.
3.அரைத்த நலங்கு மாவினை காற்று புகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தலாம்.
உங்களுக்கு மேலே உள்ள பொருட்களை கடையில் வாங்கி அரைப்பதற்கு நேரமில்லையா? கவலை வேண்டாம்.நலங்கு மாவு தயாரிக்க தேவையான பொருட்களை வாங்கி நாங்களே அரைத்து தருகின்றோம்.
நலங்கு மாவினை யார் உபயோகிக்கலாம்?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உபயோகிக்கலாம்.ஆண் குழந்தைகளுக்கு தேவையான மாவினை தயாரிக்கும் பொழுது மஞ்சளை தவிர்க்கவும்.ஏனென்றால் மஞ்சள் உடலிலுள்ள ரோமங்களை நீக்கும். அதற்கு பதிலாக பாசி பயிரினை உபயோகிக்கலாம்.பெண் குழந்தைகளுக்கு தயாரிக்கும் பொழுது மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் பயன்படுத்தலாம்.
முதல் முதலாக உபயோகிக்கும் பொழுது பேட்ச் டெஸ்ட் செய்து பின் உபயோகிக்க வேண்டும்.நலங்கு மாவு பொதுவாக தோலுக்கு பக்க விளைவினை ஏற்படுத்தாது.எனினும் குழந்தைகளுக்கு பயன்படுத்தும்பொழுது சோதனை செய்த பின்பு உபயோகிப்பது நன்று.
நலங்கு மாவு பொடியை உபயோகிக்கும் முறை:
நலங்கு மாவு பொடியினை சிறிது தண்ணீர் சேர்த்து கலக்க வேண்டும்.உடலில் தேய்த்து 5 நிமிடம் ஊறவைத்து பின்பு குளிக்க வேண்டும். தண்ணீர் சேர்க்காமல் உடலில் தேய்த்த பின்பும் குளிக்கலாம்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவு
நலங்கு மாவு பேஸ் பேக் தயாரிக்கும் முறை:
- நலங்கு மாவுடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை கலக்கவும்.
- ட்ரை ஸ்கின்னாக இருந்தால் தயிர் அல்லது பாலாடை சேர்த்து கலக்கி முகத்தில் பூசவும்.
- நார்மல் ஸ்கின்னாக இருந்தால் தேன் கலந்து தேய்க்கலாம்.
- 5 நிமிடம் மசாஜ் செய்து பின்பு கழுவவும்.
நலங்கு மாவு முற்றிலும் இயற்கையானது.கெமிக்கல் கலந்த சோப்புகளுக்கு பதிலாக இதனை உபயோகிக்கும் பொழுது சருமத்திற்கு பாதுகாப்பானது.தொடர்ந்து இதனை உபயோகப்படுத்தும் பொழுது சருமத்தில் நல்ல மாற்றத்தினை காணலாம்.வெயில் காலத்தில் உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரக்கூடியது. இதில் நாம் எலுமிச்சை பழத்தோல் மற்றும் ஆரஞ்சு பழத்தோல் ஆகியவற்றை காயவைத்து சேர்க்கலாம்.இன்னும் என்ன யோசிக்கின்றீர்கள்? கெமிக்கல் கலந்த சோப்பிற்கு பை பை சொல்லி நலங்குமாவினை உபயோகப்படுத்துங்கள்! உங்கள் குழந்தைகளின் சருமத்தினை பட்டு போல மிளிர செய்யுங்கள்!
Leave a Reply