Aval Potato Rice: (அவல் உருளைக்கிழங்கு சாதம்) : குழந்தைகளுக்கு அடிக்கடி ஒரே மாதிரியான சுவையில் உணவு செய்து தருவதை விட விதவிதமான சுவையில் செய்து கொடுக்கும் பொழுது அவர்களுக்கு உணவின் மீதான ஈர்ப்பு அதிகமாக இருக்கும் என்று ஆய்வுகள் சொல்கின்றன.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அதற்காகத்தான் நாங்கள் குழந்தைகளுக்கான ஒவ்வொரு ரெசிபியாக பார்த்து பார்த்து தருகின்றோம். மேலும் நாங்கள் கூறும் ஒவ்வொரு ரெசிபியும் அம்மாக்களுக்கும் செய்து தர எளிமையாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் கொள்கின்றோம்.
அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருக்கும் ரெசிபி எளிமையான அவல் உருளைக்கிழங்கு சாதம். வழக்கமாக நம் குழந்தைகளுக்கு மதிய உணவாக அரிசி சாதத்தை கொடுப்பது வழக்கம்.
அதற்கு மாறான சுவையில் உருளைக்கிழங்கின் சுவையும் சேரும் பொழுது சற்று வித்தியாசமான மற்றும் ஆரோக்கியமான ரெசிபியாக இது இருக்கும். மேலும் குழந்தைகளுக்கு செரிமானம் ஆவதற்கும் மிகவும் எளிமையாக இருக்கும் என்பதால் இதனை நீங்கள் வாரம் ஒரு முறை உங்கள் குழந்தைகள் அது டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.
Aval Potato Rice
இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் அரிசி அவலில் நிறைந்திருக்கும் நன்மைகளை பார்க்கலாம்:

- அவலில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் என்பதால் குழந்தைகளின் உடலுக்கு தேவையான ஆற்றலை தரவல்லது.
- அவல் மிகவும் எளிதான உணவு என்பதால் குழந்தைகளுக்கு உணவினை எளிதில் செரிமானமாக செய்து குழந்தைகளின் வயிற்றை பாரமாக அல்லாமல் எளிதாக வைக்க உதவுகின்றது.
- அவலில் இரும்பு சத்து அதிகம் என்பதால் ஹீமோகுளோபின் நலவை அதிகரிக்க உதவுகின்றது.
- வைட்டமின் பி அதிகம் என்பதால் மூளைக்கு தேவையான சத்துக்களை தரவல்லது.
- அவலில் இயற்கையாகவே கொழுப்பு சத்து குறைவு என்பதால் மற்ற உணவுகளான தானியங்கள், காய்கறிகள் மற்றும் நெய் போன்றவற்றுடன் கலந்து கொடுக்கும் பொழுது சரிவிகித உணவாக இருக்கும்.
- மேலும் உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள் பன்னீர் போன்றவற்றுடன் சேரும்பொழுது குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்கள், மினரல்ஸ் ஆகியவற்றுடன் எனர்ஜியையும் கொடுக்கும்.
- எல்லாவற்றுக்கும் மேலாக அவலினை இனிப்பான ரெசிபி ஆகவும் மற்றும் காரமான ரெசிபியாகவும் செய்து குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம்.
Aval Potato Rice
- அவல்- 1 கப்
- உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்தது- 1
- நறுக்கிய வெங்காயம்- 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு- கால் டீ.ஸ்பூன்
- மஞ்சள் தூள் -கால் டீ.ஸ்பூன்
- தண்ணீர்- தேவையான அளவு
Aval Potato Rice
செய்முறை
- அவலினை நன்றாக கழுவி ஐந்து நிமிடங்களுக்கு ஊற வைத்து தண்ணீரை வடிகட்டவும்.
- கடாயில் நெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்கவும்.
- நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் அளவிற்கு வதக்கவும்.
- அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
- வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கிளறவும்.
- ஊற வைத்து எடுத்த அவுல் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு நன்றாக மென்மையாக மாறும் வரை கிளறவும்.
- இந்த கலவையை நன்றாக மசிக்கவும்.
Aval Potato Rice

சிறு குழந்தைகளுக்கு கொடுக்கின்றோம் என்றால் இன்னும் சிறிதளவு வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து நன்கு மையாக மசித்து கொடுக்கலாம்.
அரிசி சாதத்தை போன்று குக்கரில் வைத்து வேக வைக்கும் நேரமும் குறைவு என்பதால் அவலை ஊற வைத்தாலே போதும் மிகவும் எளிதாக இந்த ரெசிபியை செய்து முடிக்கலாம்.
உருளைக்கிழங்கு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு பிடித்தமான வேறு விதமான காய்கறிகளும் சேர்த்து நீங்கள் செய்து கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு முதன் முதலாக கொடுக்கின்றீர்கள் என்றால் மூன்று நாள் விதிமுறைகளை கடைபிடித்து இந்த ரெசிபியை கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஆறு மாத குழந்தைகளுக்கு இந்த ரெசிபியை கொடுக்கலாமா?
ஆம். ஆறு மாதத்திற்கு மேல் திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது இந்த ரெசிபியை தாராளமாக கொடுக்கலாம். ஆனால் அதற்கு முன்பாக உருளைக்கிழங்கு மற்றும் அவல் போன்றவற்றை நீங்கள் தனித்தனியாக குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி இருக்க வேண்டும்.
இந்த ரெசிபியில் உப்பு சேர்க்கலாமா?
ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கின்றீர்கள் என்றால் உப்பு சேர்க்க கூடாது.
இந்த ரெசிபியில் புரோட்டீன் அதிகமாக சேர்க்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?











Leave a Reply