Makhana Milkshake Recipe: தாமரைப்பூ என்றாலே அதன் அழகான நிறம், தோற்றம் மற்றும் தேசிய மலர் என்பதே நம் நினைவிற்கு வரும். குளங்களில் வளரும் தாமரைப் பூவினை நாம் கோவில்களுக்கு செல்லும் பொழுது இறைவனுக்கு படைப்பதற்காக வாங்கிச் செல்வதுண்டு தாமரைப்பூ குழந்தைகளின் உடலுக்கு ஆரோக்கியமானது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
உண்மையில் மக்கானா விதை என்று அழைக்கப்படும் தாமரை விதை உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கக் கூடியது. சூப்பர் மார்க்கெட்டுகளில் இந்த விதைகள் பொதுவாக பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுவதுண்டு. சிறு சிறு பந்து போல இருக்கும் இந்த விதைகளை குழந்தைகளுக்கு கொடுப்பதால் ஏற்படும் ஏராளம்.
இவற்றினை குழந்தைகளுக்கு சுவையாக எப்படி செய்து தருவது என்பதை பார்க்கலாம். பொதுவாகவே ஆரோக்கியமானது என்றால் சாப்பிட மறுக்கும் நம் குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்தமான பல பொருட்களுடன் சேர்ந்து ஸ்மூத்தி போன்று செய்து கொடுத்தால் விரும்பி உண்பர்.
Makhana Milkshake Recipe:
Makhana Milkshake Recipe:
குழந்தைகளின் உடலுக்கு பல வகையில் ஆரோக்கியம் அளிக்கும் மக்கானா ஸ்மூத்தி எப்படி செய்யலாம் என்பதை பார்ப்பதற்கு முன்னால் தாமரை விதையில் புதைந்திருக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
- மக்கானா எனப்படும் தாமரை விதை குழந்தைகளுக்கு புரோட்டின், கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்றவற்றை அள்ளித் தருவதாகும். மேலும் குழந்தைகளின் எலும்பு மற்றும் தசைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகின்றன.
- தாமரை விதையில் நார் சத்துக்கள் அதிகம் எனவே குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் கூடியது.
- தாமரை விதையில் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள க்ளூட்டோமெயின் எனப்படும் வேதிப்பொருள் காணப்படுகின்றது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் துணை புரிகின்றது.
- குளூட்டன் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு மக்கானா சிறந்த உணவுப் பொருளாகும்.குழந்தைகளுக்கு எந்த விதமான அலர்ஜியையும் ஏற்படுத்தாது.
- நார் சத்துக்கள் அதிகம் உள்ளதால் குறைவான அளவு கலோரிகளை கொண்டுள்ள உணவாகும். எனவே குழந்தைகளுக்கு உடல் பருமனை தவிர்த்து ஆரோக்கியமாக அதிகரிக்க வல்லது..
- மக்கானாவில் அதிகம் உள்ள மெக்னீசியம் இதய ஆரோக்கியத்திற்கு துணை புரிகின்றது. மேலும் ரத்த அழுத்தம் போன்றவற்றை முறையாக வைத்து ஆரோக்கியத்திற்கு துணை பிரிகின்றது.
- ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகம் இருப்பதால் சருமத்தினை பாதுகாக்க வல்லது. மேலும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகின்றது.
- இதில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் என்பதால் உடலுக்கு தேவையான எனர்ஜியை தரவல்லது. எனவே ஓடி ஆடி விளையாடும் குழந்தைகளுக்கு நல்ல எனர்ஜியை கொடுக்கும்.
- மக்கானாவில் நிறைந்திருக்கும் கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் முக்கியமான வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- பாதாம் பருப்பில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் போன்றவை நிறைந்துள்ளன.
- உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றி நல்ல குறிப்பினை தக்க வைத்துக் கொள்ளும் தன்மை பாதாம் பருப்பிற்கு உண்டு.
- இதில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் அமினோ அமிலங்கள் சருமத்திற்கு மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கு துணை புரிகின்றன.
- மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க பாதாம் பருப்பு உதவுகின்றது.
Makhana Milkshake Recipe:
- முந்திரிப்பருப்பு- கால் கப்
- பாதாம்- கால் கப்
- வால்நட்- கால் கப்
- பேரிச்சை- ௪-5
- அத்திப்பழம்- ௨-3
- பெனல் சீட்ஸ் -1 டீ.ஸ்பூன்
- மக்கானா – அரை கப்
- ஐஸ் கட்டிகள்
Makhana Milkshake Recipe:
செய்முறை
- முந்திரிப்பருப்பு, பாதாம் மற்றும் வால்நட் ஆகியவற்றை சில மணி நேரம் அல்லது ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
- மிக்ஸியில் ஊற வைத்த முந்திரி, வால்நட், பாதாம், பேரிச்சை,பெனல் சீட்ஸ் மற்றும் மக்கானா சேர்க்கவும்.
- தேவையான அளவு பால் சேர்த்து ஸ்மூத்தி பதத்திற்கு வரும் அளவிற்கு அரைக்கவும்.மிகவும் கட்டியாக இருந்தால் மேலும் சிறிது பால் ஊற்றி அரைக்கவும்.
- இதில் குழந்தைகளுக்கு பிடித்த நட்ஸ்கள் கலந்துள்ளதால் குழந்தைகள் கட்டாயம் விரும்பி சாப்பிடுவர் மக்கானாவை ஸ்மூத்தியாக மட்டுமல்லாமல் நெய் ஊற்றி லேசாக வறுத்து மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் தூவி மாலை நேர ஸ்நாக்ஸாக கொடுக்கலாம்.
- பாப்கார்ன் போன்றிருப்பதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Makhana Milkshake Recipe:
Makhana Milkshake Recipe:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
மக்கானா என்றால் என்ன?
தாமரை பூவிலிருந்து கிடைக்கும் விதையே மக்கானா என்று அழைக்கப்படுகின்றது. இது சூப்பர் மார்க்கெட்டுகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றது.
குழந்தைகளுக்கு தாமரை விதை கொடுப்பது ஆரோக்கியமானதா?
தாமரை விதையில் குழந்தைகளுக்கு தேவையான புரோட்டின், கால்சியம், மெக்னீசியம் நிறைந்துள்ளதால் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு துணை புரிகின்றது.
குழந்தைகளுக்கு எந்த மாதத்தில் இருந்து இதை கொடுக்கலாம்?
குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க ஆரம்பித்த உடன் அடிப்படை உணவுகள் கொடுத்த பின்பு மக்கானாவை கஞ்சி போன்று செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
ஸ்மூத்தியுடன் வேறு பொருள்கள் சேர்க்கலாமா?
குழந்தைகளுக்கு பிடித்தமான வேறு விதமான பழங்கள் மற்றும் நட்ஸ் போன்றவற்றை சேர்த்து குழந்தைகளுக்கு பிடித்த சுவையுடன் கொடுக்கலாம்.
ஹெல்த்தியான மக்கானா ஸ்மூத்தி
Ingredients
- முந்திரிப்பருப்பு- கால் கப்
- பாதாம்- கால் கப்
- வால்நட்- கால் கப்
- பேரிச்சை- ௪-5
- அத்திப்பழம்- ௨-3
- பெனல் சீட்ஸ் -1 டீ.ஸ்பூன்
- மக்கானா - அரை கப்
- ஐஸ் கட்டிகள்
Leave a Reply