Millet Kheer / Payasam Recipe
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
மில்லெட்ஸ் என்பவை சத்துக்கள் நிறைந்த எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவு வகையாகும். மில்லெட் கீர் குழந்தைகளுக்கு முற்றிலும் ஏற்ற உணவு வகையாகும். மில்லெட் கீர் பாயாசம் ரெசிபியானது மிக்ஸ்டு ஹெல்த் மிக்ஸ், பாதாம் பால் மற்றும் ட்ரை ப்ரூட்ஸ் பவுடரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இனிப்பு சுவைக்காக ஆர்கானிக் வெல்லத்தூள் பயன்படுத்தியுள்ளேன்.
Millet Kheer/ Payasam Recipe
- மில்லெட் ஹெல்த் மிக்ஸ்-2 டேபிள் ஸ்பூன்
- வெல்லத்தூள்-1 டேபிள் ஸ்பூன்
- பாதாம் மில்க்-1 ½ கப்
- நெய்-1 டீஸ்பூன்
- ட்ரை ப்ரூட்ஸ் பவுடர்-1 டீஸ்பூன்
- ஏலக்காய் பவுடர்-1 ¼ டீஸ்பூன்
தயாரிக்கும் முறை
- 2 டேபிள் ஸ்பூன் மில்லெட் ஹெல்த் மிக்ஸ்-ஐ சாஸ் பானில் எடுத்துக்கொள்ளவும்.
- அதனுடன் பாதாம் பாலை சேர்க்கவும்.கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.
- பான் -ஐ அடுப்பில் வைக்கவும். மிதமான சூட்டில் 4- 5 நிமிடங்களுக்கு கலவையை வேக வைத்து நன்கு கலக்கவும்.
- கலவை கட்டியானதும் வெல்லத்தை சேர்த்து நன்கு கலக்கவும். 1- 2 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
- ட்ரை ப்ரூட்ஸ் பொடியை சேர்த்து நன்கு கலக்கவும். 1நிமிடத்திற்கு வேக வைக்கவும்.
- கடைசியாக நெய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கியதும் அடுப்பை அணைக்கவும்.
Millet Kheer/ Payasam Recipe
குறிப்பு
1.ஆறியவுடன் பாயாசம் கெட்டியாகும் அதற்கேற்றவாறு பாயாசத்தை சமைக்கவும்.
2.சிறு குழந்தைகளுக்கு கொடுக்கும் போது ட்ரை ப்ரூட்ஸ் பொடியை சேர்க்க வேண்டாம்
3. 1 வயத்திற்குட்பட்ட குழந்தைகளுக்கு வெல்லம் சேர்ப்பதைத் தவிர்க்கவும்.
மற்ற லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்
மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply