Nendram pala podi in Tamil
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
நேந்திரம் பழ பொடி
தென் இந்தியாவின் பிரபலமாக அறியப்படும் உணவு வகைகளில் ஒன்றாக இருக்கிறது வாழைப்பழம்… கேரளாவின் பாரம்பரிய உணவாக கருதப்படும் நேந்திரம் பழமானது அவர்களின் ஓண விருந்தில் தவறாமல் இடம் பிடித்திருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகளில் பிரதான இடம் பிடித்திருக்கும் இந்த காயை பொடியாக செய்து கஞ்சியாக காய்ச்சி குழந்தைக்கு கொடுக்கலாம்…
சாதாரண பழங்களை நீங்கள் அப்படியே கொடுக்க முடியும். கேரளாவில் கிடைக்கும் விதவிதமான நேந்திரம் பழங்களை வேகவைத்துக் கொடுப்பது சிறந்தது.
வாழைப்பழ பொடியில் இருந்து தயாரிக்கப்பட்ட கஞ்சியை குழந்தைக்கு எப்போது கொடுக்கலாம்?
குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து நேந்திரம் பழ பொடி கஞ்சியை நீங்கள் தரலாம். ஆனால் குழந்தைக்கு கொடுக்கப்படும் முதல் உணவு என்பது அவர்களின் உடல் ஆரோக்யத்திற்கு ஏற்ற வகையில் இருப்பது சிறந்தது.
நேந்திரம் பழ பொடியில் உள்ள சத்துகள்:
1. இதில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு சத்துகள் உள்ளன.
2. இதில் உள்ள நார்ச்சத்து குழந்தையின் செரிமானத்துக்கு உதவும்.
நேந்திரம் பழ பொடியை வீட்டில் தயாரிப்பது எப்படி?
- வாழைத்தாரில் இருந்து எடுக்கப்பட்ட காய்கள்
செய்முறை :
1. வாழைப்பழத்தின் இரு முனைகளையும் வெட்டிவிட்டு தோலை உரித்துக் கொள்ளுங்கள்…
2. துருவிக் கொள்ளும் கருவி மூலம் காய்களை சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளுங்கள். மெல்லிதாக துருவும் போது அது விரைவில் காயும்..
3. துருவிய துண்டுகளை ஒரு பேப்பரில் விரித்து வைத்து நன்றாக மொறு மொறுப்பாக மாறும் வரை காய விடவும். (உங்கள் ஊரின் வெப்பநிலையை பொறுத்து 2 முதல் 3 நாட்கள் வரை ஆகலாம்)
4. நன்றாக காய்ந்த பிறகு அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனை சல்லடை கொண்டு நன்றாக சலித்துக் கொள்ளுங்கள். நன்றாக மசிய அரைத்த பிறகு இதனை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து பத்திரப்படுத்துங்கள்…
வீட்டில் இதைச் செய்வதற்கு உங்களுக்கு நேரமில்லையா? கவலையே வேண்டாம்.
எங்களிடம் கிடைக்கும் இயற்கையான முறையில் சுத்தமாக தயாரிக்கப்பட்ட நேந்திரம் பழ பொடி வாங்கி பயன்படுத்துங்கள்…
நேந்திர பழ பொடியிலிருந்து குழந்தைகளுக்கு கஞ்சி தயாரிப்பது எப்படி?
செய்முறை:
1. ஒரு டேபிள் ஸ்பூன் பவுடரை எடுத்து 100 மிலி தண்ணீர் அல்லது பாலில் கரைத்துக் கொள்ளுங்கள்.
2. பின்னர் இதனை மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் வரை அடுப்பில் வைத்து கிளறவும். மிதான சூட்டில் இதனை குழந்தைக்கு கொடுக்கவும்.
- வாழைப்பழ அல்வா
- வாழைப்பழ பஜ்ஜி
- தேங்காய் வாழைப்பழ பாயசம்
வாழைப்பழத்தில் பல்வேறு சத்துகள் நிரம்பியிருப்பதால் நீங்கள் இதனை எப்போது வேண்டுமானாலும் தரலாம்.
காலை நேரத்தில் நேந்திர பழ பொடி கஞ்சியை தரும் போது அது அவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும்.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply