Pasi paruppu dosai recipe in tamil: நம் குழந்தைகளுக்கு வழக்கமாக கொடுக்கும் தோசையில் இருந்து சற்றே வித்தியாசமாக அதேசமயம் ஆரோக்கியமாக ஏதாவது செய்து கொடுக்கலாம் என்று விரும்பினால் இந்த முளைகட்டிய பச்சை பயறு தோசை கண்டிப்பாக உங்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
காலை நேரத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான காலை சிற்றுண்டியாக இந்த தோசையை நீங்கள் செய்து கொடுக்கலாம். நாம் வழக்கமாக கொடுக்கும் தோசையில் உளுந்து மற்றும் அரிசி மட்டுமே கலந்து இருக்கும்.
ஆனால் வழக்கத்திற்கு மாறாக இதில் முளைக்கட்டிய பச்சை பயிறு சேர்த்திருப்பதால் குழந்தைகளுக்கு புரோட்டீனை அள்ளித் தரும் சத்தான தோசையாக இது இருக்கும்.
மேலும் ருசியாகவும் இருப்பதால் குழந்தைகள் கட்டாயம் இதனை விரும்பி உண்பார்கள். பொதுவாக முளைக்கட்டிய பயிரினை அப்படியே குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது அதனை சில குழந்தைகள் சாப்பிடஅடம் பிடிப்பார்கள்.
ஆனால் இப்படி தோசை வடிவில் கொடுக்கும் போது குழந்தைகளுக்கு அதனுடைய சத்து எளிதில் போய் சேரும்.
Pasi paruppu dosai recipe in tamil:
பச்சை பயிரின் நன்மைகள்:
- பச்சைப் பயறு உடலுக்கு நன்மையளிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.ஆனால் அதனை முளைகட்டும் போது அதன் பயன்கள் இன்னும் பல மடங்காக அதிகரிக்கிறது.
- முளைக்கட்டிய பச்சைப் பயிறை புரோட்டின் மூட்டை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு புரோட்டீன் சத்து அதில் நிறைந்துள்ளது.
- மேலும் இதில் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை அடங்கியுள்ளன.
- ரத்தத்திற்கு தேவையான ஆக்ஸிஜனை எடுத்துச் சென்று சிறந்த ஆக்சிஜனேற்றியாக பயன்படுகின்றது.
- பொட்டாசியம் மெக்னீஷியம் தாமிரம் மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன.
- ரத்தசோகை வராமல் தடுக்கக்கூடியது.
Pasi paruppu dosai recipe in tamil:
- கடலை மாவு -1 கப்
- முளைகட்டிய பச்சை பயறு -1/2 கப்
- உப்பு- தேவையான அளவு
- மஞ்சள்தூள் -கால் டீஸ்பூன்
- மல்லித் தூள்- அரை டீஸ்பூன்
- கரம் மசாலா- அரை டீஸ்பூன்
Pasi paruppu dosai recipe in tamil
செய்முறை
1.ஒரு பெரிய பவுலில் கடலைமாவு,முளைகட்டிய பச்சை பயறு,மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
3.10 முதல் 15 நிமிடங்களுக்கு அதனை ஒரு ஓரமாக வைக்கவும்.
4.அதன் பின் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
5.தோசைக்கல்லை சூடாக்கி சிறிதளவு நெய் ஊற்றவும்.
6.பின்பு கரண்டியால் மாவை எடுத்து எப்பொழுதும் போல தோசை சுடலாம்.
7.தோசை பொன்னிறமானதும் திருப்பிப்போட்டு குழந்தைகளுக்கு பரிமாறலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
முளைக்கட்டிய பாசிப்பருப்பு தோசை
Ingredients
- கடலை மாவு -1 கப்
- முளைகட்டிய பச்சை பயறு -1/2 கப்
- உப்பு- தேவையான அளவு
- மஞ்சள்தூள் -கால் டீ.ஸ்பூன்
- மல்லித் தூள்-அரை டீ.ஸ்பூன்
- கரம் மசாலா-அரை டீ.ஸ்பூன்
Notes
- ஒரு பெரிய பவுலில் கடலைமாவு,முளைகட்டிய பச்சை பயறு,மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- சிறிதளவு மோர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 10 முதல் 15 நிமிடங்களுக்கு அதனை ஒரு ஓரமாக வைக்கவும்.
- அதன் பின் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
- தோசைக்கல்லை சூடாக்கி சிறிதளவு நெய் ஊற்றவும்.
- பின்பு கரண்டியால் மாவை எடுத்து எப்பொழுதும் போல தோசை சுடலாம்.
- தோசை பொன்னிறமானதும் திருப்பிப்போட்டு குழந்தைகளுக்கு பரிமாறலாம்.
Leave a Reply