Ragi Roti: ஆரோக்கியமான சிறுதானிய வகைகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளை நாம் அப்படியே விட்டு விட முடியாது அந்த குழந்தைகளை எப்படி சாப்பிட வைக்க வேண்டும் என்று யோசித்து அவர்களுக்கு ஏற்றார் போல் ரெசிபிகளை செய்து அவர்களுக்கு செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் போய் சேரும் .
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அந்த வகையில் ராகியை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு எப்படி சுவையாக செய்து கொடுப்பது என்பதற்கான ரெசிபி தான் இந்த ராகி அடை. இந்த ராகி அடையை நீங்கள் செய்து கொடுத்தால் கேழ்வரகை சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி வாங்கி உண்பார்கள்.
குழந்தைகள் எளிதாக கையில் எடுத்து சுருட்டி சாப்பிட எளிதாக இருக்கும் என்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். அதுமட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு தேவையான கால்சியம், புரோட்டின்,நார்ச்சத்துக்கள் போன்ற அனைத்து சத்துக்களும் இந்த ஒரே ரெசிபியில் அடங்கியிருக்கின்றது.
Ragi Roti
இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் ராகியில் நிறைந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்:

- ராகியில் கால்சியம் சத்து அதிகம் என்பதால் எலும்புகள் மற்றும் பற்களுக்கு தேவையான கால்சியத்தை தருகின்றது.
- ராகியில் நார்ச்சத்துக்கள் அதிகம் என்பதால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- ராகி குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான ஆற்றலை படிப்படியாக கொடுப்பதால் குழந்தைகள் சுறுசுறுப்பாக இருப்பர்.
- குழந்தைகளின் உடல் எடை ஆரோக்கியமாக அதிகரிக்க இந்த ராகி அடை ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.
- ராகி எனப்படும் கேழ்வரகில் அமினோமிலங்கள் அதிகம் என்பதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை இது அளிக்கின்றது.
- மேலும் இதில் இரும்புச்சத்து அதிகம் என்பதால் ரத்த சோகை வராமல் தடுக்கக்கூடியது.
- புரோட்டின் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற தானியம் இந்த ராகியாகும்.
Ragi Roti
தேவையானவை
- ராகி மாவு- 1 கப்
- கோதுமை மாவு- அரை கப்
- வேகவைத்த உருளைக்கிழங்கு-2
- சீரகம்- அரை டீ.ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை
- எண்ணெய்-1 1/2 டே.ஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
- வெதுவெதுப்பான தண்ணீர்
Ragi Roti
செய்முறை
- கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் சீரகத்தை சேர்த்து தாளிக்கவும். அதனுடன் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து ஒரு ஓரமாக வைக்கவும்.
- ஒரு பவுலில் ராகி மாவு ,கோதுமை மாவு, உப்பு மற்றும் தேவையான எண்ணெய் சேர்த்து நன்கு பிசையவும்.
- தேவைப்பட்டால் வெதுவெதுப்பான தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து மாவு பதத்திற்கு பிசையவும். 10 நிமிடங்களுக்கு அதனை மூடி வைக்கவும்.
- மாவினை முக்கோண வடிவத்தில் உருட்டி அதில் வசித்து வைத்த உருளைக்கிழங்கினை வைத்து நன்கு சப்பாத்தி போன்ற உருட்டவும்.
- நன்றாக தேய்த்து வட்ட வட்டமாக வெட்டி எடுக்கவும்.
- தோசை கல்லினை காய வைத்து இந்த ரொட்டியை மிதமான தீயில் சுட்டு எடுக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு எண்ணெய் விட்டு பொன்னிறமாகும் வரை காத்திருந்து திருப்பி போடவும்.

ஆரோக்கியமான ராகி அடை
Ingredients
- ராகி மாவு- ஒரு கப்
- கோதுமை மாவு- அரை கப்
- வேகவைத்த உருளைக்கிழங்கு-2
- சீரகம்- அரை டீஸ்பூன்
- மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை
- எண்ணெய்-1 1/2 டேபிள்ஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
- வெதுவெதுப்பான தண்ணீர்
Instructions
- கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் சீரகத்தை சேர்த்து தாளிக்கவும்.
- அதனுடன் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து ஒரு ஓரமாக வைக்கவும்.
- ஒரு பவுலில் ராகி மாவு ,கோதுமை மாவு, உப்பு மற்றும் தேவையான எண்ணெய் சேர்த்து நன்கு பிசையவும்.
- தேவைப்பட்டால் வெதுவெதுப்பான தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து மாவு பதத்திற்கு பிசையவும். 10 நிமிடங்களுக்கு அதனை மூடி வைக்கவும்.
- மாவினை முக்கோண வடிவத்தில் உருட்டி அதில் வசித்து வைத்த உருளைக்கிழங்கினை வைத்து நன்கு சப்பாத்தி போன்ற உருட்டவும்.

![குழந்தைகளுக்கான முளைகட்டிய ராகி மில்க் ஷேக்[Ragi Recipe in Tamil] Ragi Recipe in Tamil](https://tamil.mylittlemoppet.com/wp-content/uploads/2022/04/feature-3-150x150.jpg)









Leave a Reply