Raisin Ular dratchai jam for kids in Tamil
ஹெல்தி, ஈஸி, டேஸ்டி உலர்திராட்சை ஜாம்… வீட்டிலே செய்வது எப்படி?
ஜாம் பிடிக்காத குழந்தைகள் இல்லை. ஆனால், கடைகளில் விற்கும் ஜாமை குழந்தைக்கு கொடுத்துவிட முடியுமா. நிச்சயம் முடியாது. ஆனால் வீட்டிலே தயாரித்தால், அது மிகச்சிறந்த ஊட்டச்சத்து உணவாக மாறிவிடும். பிரெட், பழங்கள், ஜூஸ், கேக், ஸ்வீட்ஸ் என அனைத்திலும் இந்த ஜாம் கலந்து குழந்தைக்கு கொடுக்கலாம். புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை உலர்திராட்சையில் நிறைந்துள்ளன. இதை 9 மாத குழந்தை முதல் யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். சுவையும் சத்தும் அதிகம். சப்பாத்தி, பராத்தா, பிரெட் என எதில் வேண்டுமானாலும் உலர்திராட்சை ஜாம் கலந்து கொடுக்கக் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். இந்த ஜாமுக்கு செயற்கையான சர்க்கரை தேவையில்லை ஆதலால் இதன் இயற்கையான சுவையே இனிப்பாக இருக்கும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கான உலர்திராட்சை ஸ்ப்ரெட் ரெசிபி
- உலர்திராட்சை – ½ கப்
- ஆரஞ்சு ஜூஸ் – 1 கப்
- பட்டைத் தூள் – ¼ டீஸ்பூன்
செய்முறை
- உலர்திராட்சை, ½ கப் ஆரஞ்சு ஜூஸ் ஆகியவற்றை பானில் ஊற்றி, ஸ்டவ்வில் வைக்கவும். பட்டைத் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
2. 10-15 நிமிடங்கள் இவை வேக காத்திருக்கவும். பிறகு ஸ்டவ்வை அணைத்துவிட்டு, இந்தக் கலவையை ஆற வைக்கவும்.
3. இதை மிக்ஸியில் போட்டு, கட்டிகள் இல்லாமல் அரைக்கவும்.
4. அரைத்தவற்றை மீண்டும் பானில் வைத்து, மீதம் இருக்கின்ற ½ கப் ஆரஞ்சு ஜூஸை சேர்க்கவும்.
5. மிதமான ஹீட்டில் வைத்து ஜாம்போல வரும் வரை காத்திருந்து, பின் ஸ்டவ்வை அணைத்துவிடவும்.
இந்த ஜாம் சூடு ஆறியவுடன், சுத்தமான பாத்திரத்தில் மாற்றி ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும்.
இந்த ஜாமை ஃப்ரிட்ஜில் வைத்தால் 15 நாட்கள் வரை கெடாது.
தயாரிக்கும் நேரம் – 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் – 20 நிமிடங்கள்
முழு நேரம் – 25 நிமிடங்கள்
பலன்கள்
- நார்ச்சத்து நிறைந்தது. மலச்சிக்கல் தீரும்.
- விட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- குழந்தைகளின் சருமம், முடி வளர்ச்சிக்கு நல்லது.
- எலும்புகள் வலுவாகும்.
- ஊட்டச்சத்து குறைபாடு நீங்கும்.
- ரத்தசோகையிலிருந்து குழந்தையைக் காக்கலாம்.
வெறும் 3 பொருட்களை வைத்துச் செய்த இந்த ஜாம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்குச் சிறந்த உணவாக அமையும். வீட்டிலே ஈஸி, ஹெல்தி, டேஸ்டி ஜாம்… முழுக்க முழுக்க ஆர்கானிக்… என்ன… ஜாம் செய்ய ரெடியா?
உலர்திராட்சை ஜாம்… சாலட் முதல் சப்பாத்தி வரை…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply