ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
Ravai kanji
(குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்)
- ரவை – ஒரு கப்
- நெய் – 2 டீஸ்பூன்
- பனங்கல்கண்டு அல்லது வெல்லம் – தேவையான அளவு
- ஏலக்காய் தூள் – சிறிது
- தண்ணீர் – 3 கப்
செய்முறை :
1.பாத்திரத்தில் ரவையை கொட்டி நன்றாக வறுத்துக் கொள்ளவும். இதனை பொடித்துக் கொள்ளலாம் அல்லது அப்படியே சமைக்கலாம்.
2. ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீரை ஊற்றி அதை நன்றாக கொதிக்கவிடவும்.
3. அதில் வறுத்த ரவையை சிறிது சிறிதாக கொட்டி கட்டிகளில்லாமல் நன்றாக கிளறவும்.
4. ரவை பாதி வெந்து கொண்டிருக்கும்போது பனங்கல்கண்டை சேர்த்து கட்டிகள் இல்லாமல் கிளறிக் கொண்டு இருக்கவும்.
5. ரவையும் பனங்கல்கண்டும் நன்றாக சேர்ந்து இறக்குவதற்கு முன் நெய்யை சேர்த்துக் கொள்ளவும். இத்துடன் ஏலக்காய் பொடியை சேர்க்கவும்.
6. குழந்தைகள் எளிதாக சாப்பிடுவதற்கு ஏற்றவகையில் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் சேர்த்து தரவும்.
தெரிந்து கொள்ள வேண்டியது :
கடைகளில் ரவை வாங்கும் போது தரமானதாக பார்த்து வாங்குங்கள்.
எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. குழந்தைகளின் வயிற்றுக்கு போதுமான உணவு என்பதால் இதனை இரவு நேர உணவாக கொடுக்கலாம்.
கோதுமை மற்றும் கோதுமை மாவு தயாரிப்பின் போது கிடைக்கும் பொருள்தான் ரவை.
இதில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், தயாமின், செலினியம் உள்ளது. மேலும் கொலஸ்ட்ரால் இதில் இல்லை என்பதால் குழந்தைக்கு ஏற்றது.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply