Roasted Makhana : இந்த காலத்து குழந்தைகளின் நாவில் உள்ள சுவை மொட்டுக்களுக்கு விருந்தளிப்பது என்பது அம்மாக்களுக்கு மிகவும் சவாலான விஷயம். நம் காலத்தில் சிற்றுண்டி என்று சொன்னாலே அவித்த சுண்டல்கள், கொழுக்கட்டை போன்றவை தான் பிரதானமாக இருக்கும். என்றாவது கடைக்கு போய் கடலை மிட்டாய், கமர்கட்டு போன்றவை வாங்கி சாப்பிடுவதுண்டு.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆனால், இக்காலத்து குழந்தைகளுக்கு அப்படியல்ல. கடைக்குச் சென்றாலே கண்ணுக்கு முன்னால் ஆயிரம் பொருட்களை அடுக்கி வைத்துள்ளனர். அதிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள்தான் 99 சதவீதம் உள்ளன.
அதையும் மீறி நாம் வீட்டில் ஆரோக்கியமான தானிய வகைகளை கொண்டு சிற்றுண்டி செய்து கொடுத்தால் அதைப் பெயரளவில் சாப்பிட்டுவிட்டு செல்லும் குழந்தைகள் தான் ஏராளம்.
‘கொருக்கு மொறுக்கு’ என்று சாப்பிட்டு பழகிய குழந்தைகளுக்கு மற்ற எந்தவிதமான ஸ்னாக்ஸ் கொடுத்தாலும் அவர்களுக்கு சாப்பிட திருப்தி இருக்காது. அதேநேரம் கடைகளில் விற்கும் எண்ணெய் பலகாரங்களை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுப்பது அவர்களது உடல் நலத்திற்கு கேடுதானே!
அப்படி என்றால் குழந்தைகள் உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் அதே சமயம் குழந்தைகளுக்கு பிடித்த வண்ணமும் இருக்க வேண்டும் என்றால் அப்படி என்னதான் செய்வது என்று நீங்கள் யோசித்தால் உங்களுக்கான ரெசிபி தான் மக்கானா மசாலா ரோஸ்ட்.
தாமரை விதை தான் மக்கானா என்று அழைக்கப்படுகிறது. தாமரை மலர் என்றாலே பூஜைக்காக கடவுளுக்கு படைப்பது என்று தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். ஆனால், மக்கானா எனப்படும் தாமரை விதைகள் எண்ணற்ற நன்மைகளை இந்த உள்ளடக்கியதாகும்.
Roasted Makhana
இவ்வளவு சத்துக்கள் நிறைந்த இந்த தாமரை விதையினை குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஆரோக்கியமாக எப்படி செய்து தரலாம் என்பதை பார்க்கலாம். இந்த ரெசிபி பார்ப்பதற்கு முன்னால் இதில் உள்ள நன்மைகளை பார்க்கலாம்.
- தாமரை விதையில் இயற்கையாகவே புரோட்டின் சத்து நிறைந்து காணப்படுவதால் குழந்தைகளின் தசைகள் ஆரோக்கியமாக வளர்ச்சி அடைவதற்கு தேவையான சத்துக்களை புரோட்டின் வழங்குகின்றது.
- கலோரிகள் மற்றும் கொழுப்புச்சத்து தாமரை விதையில் குறைவு என்பதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சிற்றுண்டியாக இது அமையும். மற்ற துரித உணவுகள் உண்பதால் உடல் எடை அதிகரிப்பது போன்று தொந்தரவுகள் இதில் ஏற்படாது.
- மக்கானால் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் காணப்படுகின்றது. எனவே உடம்பில் உள்ள தேவையில்லாத கழிவு பொருட்களை வெளியேற்ற இது உதவுகின்றது.
- தாமரை விதையில் மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள மினரல்கள் எலும்பு வளர்ச்சிக்கு மற்றும் நரம்புகளில் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகின்றது.
- இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் என்பதால் எளிதில் செரிமானமாகும் தன்மையுடையது. எனவே குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ளும்.
- தாமரை விதையில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் இ எனப்படும் சத்து நிறைந்துள்ளது. இவை மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு துணை புரிகின்றன.
இவ்வளவு சத்துக்கள் நிறைந்த தாமரை விதைகளை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு பிடித்த சிற்றுண்டியாக இது இருக்கும்.
Roasted Makhana
- தாமரை விதைகள்- 2 கப்
- நெய் அல்லது பட்டர்- 2 டேபிள் ஸ்பூன்
- சீரகம்- 1 டீ.ஸ்பூன்
- மஞ்சள் தூள்- கால் டீ.ஸ்பூன்
- சாட் மசாலா- அரை டீஸ்பூன் (தேவைப்பட்டால்0
- உப்பு- தேவையான அளவு
- பொடியாக நறுக்கிய புதினா இலைகள்- 1 கைப்பிடி
- எலுமிச்சை சாறு – 1டேபிள் ஸ்பூன்.
Roasted Makhana
செய்முறை
- அகலமான பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைக்கவும்.
- நெய் அல்லது பட்டர் சேர்க்கவும்.
- மக்கானாவை அதில் போட்டு ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்கு மொறு மொறுப்பாகும் அளவிற்கு வறுக்கவும்.
- தாமரை விதைகள் மொறுமொறுப்பானதும் தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் மற்றும் சீரகத்தூள் ஆகியவற்றை தூவவும்.
- எல்லா இடங்களிலும் பரவுமாறு கிளறிவிட்டு இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு அடுப்பில் வைக்கவும்,
- பொடியாக நறுக்கிய புதினா இலைகளை மேலே தூவவும்.
- எலுமிச்சை சாற்றினை மேலே ஊற்றவும்.
- நன்றாக ஒரு கிளறு கிளறி மொறு மொறுப்பாக குழந்தைகளுக்கு கொடுக்கவும்.சுவைப்பதற்கு மொறுமொறுப்பாக மட்டுமல்லாமல் ஆரோக்கியமான மசாலா பொருட்கள் கலந்து சுவையாகவும் இருக்கும். மாலை நேரம் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபியாக இது இருக்கும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Roasted Makhana
Roasted Makhana
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
எத்தனை நாட்கள் வரை இதை வைத்திருக்கலாம்?
காற்று போகாத டப்பாவில் வைத்து அடைத்து ஒரு வாரம் வரை இந்த மசாலா தாமரை விதைகளை சாப்பிடலாம்.
தாமரை விதைகள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதா?
தாமரை விதையில் குழந்தைகளுக்கு தேவையான புரோட்டின், நார் சத்துக்கள், மெக்னீசியம் மற்றும் பல வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமாகும்.
Leave a Reply