Samba Makhana Payasam Recipe : இப்பொழுதெல்லாம் ஆரோக்கியமான உணவுகளை தேடி தேடி உண்ண வேண்டும் என்கின்ற விழிப்புணர்வு எல்லோருக்கும் வந்து விட்டது என்றே சொல்லலாம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பெரும்பாலும் குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதால் தற்பொழுது அம்மாக்கள் சத்தான உணவு வகைகளை சமூக ஊடகங்களில் தேடி வருகின்றனர்.
எனவே தான் நீங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான விதவிதமான உணவுகளை கொடுப்பதற்காக தேடி தேடி உங்களுக்கு ரெசிபிகளை கொடுக்கின்றோம்.
அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது வித்தியாசமான இனிப்பு வகையான சம்பா ரவை மக்கானா பாயாசம். இதற்கு முன்பாக மக்கானாவை குழந்தைகளுக்கு எப்படி ரோஸ்ட் செய்து கொடுக்க வேண்டும் என்பதை பார்த்திருப்போம்.
மேலும் ஆரோக்கியமான பாயாசம் எப்படி செய்து கொடுக்க வேண்டும் என்பதற்கான பல்வேறு இனிப்பு வகைகளையும் நாம் பார்த்து விட்டோம்.
அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கப் போகும் ரெசிபி நார்ச்சத்து அதிகம் உள்ள அதே நேரம் கால்சியம் சத்தும் அதிகம் உள்ள சம்பா கோதுமை மக்கானா பாயாசம். மக்கானா குழந்தைகளுக்கு பல்வேறு வகைகளில் நன்மையை கொடுக்கக்கூடியது என்று நாம் பல்வேறு பதிவுகளை இதுவரை பார்த்திருப்போம்.
Samba Makhana Payasam Recipe
Samba Makhana Payasam Recipe:

எனவேதான் அதை வைத்து பாயாசம் எப்படி செய்வது என்பதை பற்றிய ரெசிபியை நாம் பார்க்க போகின்றோம்.
- மக்கானாவில் கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்து அதிகம் என்பதால் எலும்புகள் மற்றும் பற்களுக்கு பலம் தருகின்றது.
- மக்கானாவில் புரோட்டின் அதிகம் உள்ளதால் தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- எளிதில் செரிமானமாகும் என்பதால் குழந்தைகளுக்கு மற்ற இனிப்பு வகைகளை சாப்பிடும் பொழுது ஏற்படும் செரிமான பிரச்சனை மற்றும் வயிறு தொந்தரவு ஏற்படாது.
- குறைந்த அளவு கொழுப்பு மற்றும் கலோரிகளை பெற்றுள்ளதால் ஆரோக்கியமான காலை உணவிற்கு ஏற்றது.
- ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடியது.
சம்பா கோதுமையில் நிறைந்துள்ள நன்மைகள்:

- சம்பா கோதுமையில் நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கல் வராமல் தடுக்கக்கூடியது.
- சம்பா கோதுமையானது குழந்தைகள் நீண்ட நேரம் விளையாடுவதற்கு தேவையான ஆற்றலை அளிக்கக் கூடியது.
- இதில் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் பி அதிகம் உள்ளதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு பக்கபலமாக உள்ளது.
- விதவிதமான இனிப்பு மற்றும் கார வகைகள் இரண்டும் செய்வதற்கும் சம்பா கோதுமை ஏற்றது.
Samba Makhana Payasam Recipe
- சம்பா கோதுமை-2 டேபிள் ஸ்பூன்
- மக்கானா- 1 டேபிள்ஸ்பூன்
- தண்ணீர் அல்லது பால்-1 கப்
- நாட்டு சக்கரை அல்லது டேட்ஸ் பவுடர்- 1-2 டீ.ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- ஒரு சிட்டிகை
- நெய்- அரை டீ.ஸ்பூன்.
Samba Makhana Payasam Recipe
செய்முறை
1. மக்களவை ஒரு கடாயில் போட்டு லேசாக மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும். சூடு ஆறியவுடன் ஒன்று இரண்டாக உடைத்து மிக்ஸியில் போட்டு லேசாக பவுடர் ஆக்கவும்.
2.கடாயில் நெய் ஊற்றி அதில் சம்பா ரவை கோதுமையை போட்டு லேசாக நறுமணம் வரும் வரை லேசான தீயில் வறுக்கவும்.
3. அதில் தண்ணீர் அல்லது பால் ஊற்றி சம்பா கோதுமை நன்றாக வேகம் வரை காத்திருக்கவும்.
4. அதில் உடைத்த மகனா சேர்த்து நன்றாக கிளறவும். மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைக்கவும்.
5. அடுப்பை அணைத்தவுடன் நாட்டு சக்கரை அல்லது டேட்ஸ் பவுடர் சேர்த்து நன்கு கிளறவும்.
6. சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
7. மிகவும் கட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறி கொள்ளலாம்.
குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் அவர்களுக்கு கொடுப்பதற்கு ஏற்ற நல்ல ஒரு இனிப்பு பண்டமாக இது இருக்கும்.
சம்மா கோதுமை மற்றும் மக்கானா போன்ற இரு சத்தான பொருட்கள் சேர்த்துள்ளதால் சிறியவர்களுக்கு மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள பெரியவர்களும் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக இதை எடுத்துக் கொள்ளலாம்.
பொதுவாக சம்பா ரவை கோதுமையை செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் ஆனால் இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு கோதுமையின் நன்மை போய் சேரும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Samba Makhana Payasam Recipe:

Samba Makhana Payasam Recipe
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இந்த பாயாசத்தை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
இதில் சேர்க்கப்பட்டுள்ள மக்கானா மற்றும் சம்பா ரவை கோதுமை இரண்டிலும் குழந்தைகளுக்கு தேவையான நார் சத்துக்கள் கால்சியம் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம்.
எந்த வயதில் இருந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்?
இதில் சக்கரை சேர்த்துள்ளதால் ஒரு வயதுக்கு மேலே உள்ள குழந்தைங்களுக்கு இதனை கொடுக்கலாம் ஆனால் கொடுக்கும்பொழுது நன்கு மசித்து கொடுக்க வேண்டும்.
இதை கொடுத்தால் குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்குமா?
ஆம். குழந்தைகளின் உடல் எடை ஆரோக்கியமாக அதிகரிப்பதற்கு இந்த ரெசிபியை நீங்கள் கொடுக்கலாம்.
சம்பா ரவை மக்கானா பாயாசம்
Ingredients
- மக்கானா- 1 டேபிள்ஸ்பூன்
- தண்ணீர் அல்லது பால்-1 கப்
- நாட்டு சக்கரை அல்லது டேட்ஸ் பவுடர்- 1-2 டீ.ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- ஒரு சிட்டிகை
- நெய்- அரை டீ.ஸ்பூன்











Leave a Reply