Sapotta for babies in Tamil: குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க ஆரம்பித்தவுடன் ஒவ்வொரு பழமாக கொடுக்க ஆரம்பிப்போம்.ஆப்பிள் மற்றும் வாழைப்பழம் ஆகியவை அவற்றில் பிரதானம்.பல்வேறு ஆரோக்கியமான பழங்கள் இருந்தாலும் அவற்றை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா? என்ற சந்தேகம் நமக்கு ஏற்படும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
மேலும் அவற்றை எப்படி கொடுப்பது என்ற ஐயமும் ஏற்படும். அதற்காக தான் குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முதல் காய்கறி கூழ் ,பழக்கூழ் மற்றும் பல்வேறு ரெசிபிக்களை குழந்தைகளுக்கு பக்குவமாய் எப்படி கொடுப்பது என நான் உங்களுக்கு கூறி வருகிறேன்.
அவற்றின் வரிசையில் இன்று நாம் பார்க்க இருப்பது சப்போட்டா கூழ். இயற்கையிலேயே அதிக இனிப்புச் சுவையுடன் இருக்கும் சப்போட்டா பழம் பல ஆரோக்கியமான சிறப்பம்சம்களையும் தன்னுள்ளே கொண்டுள்ளது.
இயற்கையிலேயே பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றை கொண்டுள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கவல்லது.மேலும் இது கீழ்காணும் மருத்துவப்பண்புகளை கொண்டுள்ளது.
- நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை போக்க வல்லது.
- இரைப்பைக்கு நன்மை அளிக்கக் கூடியது.
- இயற்கையாகவே கால்சியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால் எலும்புகளுக்கு வலுவளிக்கின்றது.
- உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு சருமத்தில் ஈரப்பதத்தினை தக்க வைக்க உதவுகின்றது.
- சப்போட்டாவில் இயற்கையாகவே உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் புற்றுநோய் வராமல் தடுக்கின்றது.
- இதில் அமைந்துள்ள பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்றவை குழந்தைகள் நாள் முழுவதும் விளையாடுவதற்கு தேவையான எனர்ஜியை அளிக்கவல்லது.
- வைட்டமின் ஏ உள்ளதால் கண்களுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடியது.
Sapotta for babies in Tamil:
சப்போட்டா-2
செய்முறை
1.சப்போட்டாவை நன்கு கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும்.
2.கொட்டைகளை நீக்கவும்.
3.சதை பகுதியினை தனியாக எடுக்கவும்.
4.கரண்டியால் நன்றாக மசிக்கவும்.
5.குழந்தைகளுக்கு பரிமாறவும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
குழந்தைகளுக்கான சப்போட்டா கூழ்
Ingredients
- 1 சப்போட்டா
Notes
- சப்போட்டாவை நன்கு கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும்.
- கொட்டைகளை நீக்கவும்.
- சதை பகுதியினை தனியாக எடுக்கவும்.
- கரண்டியால் நன்றாக மசிக்கவும்.
- குழந்தைகளுக்கு பரிமாறவும்.
Leave a Reply