Sarbath for Summer:கோடை காலத்தில் குழந்தைகளுக்கு உடல் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்று நாம் பழச்சாறுகள், ஐஸ்கிரீம்கள் மற்றும் மோர் போன்றவை கொடுப்பது வழக்கம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆனால் இன்று நாம் பார்க்க இருக்கும் ரெசிபி பாரம்பரியமாக உடலை குளிர்ச்சியாக நாம் முன்னோர்கள் பயன்படுத்திய பானமாகும் பெருஞ்சீரக சர்பத்.
அப்பொழுதெல்லாம் பழச்சாறுகள்,ஐஸ்கிரீம்கள் இன்னும் சொல்லப் போனால் ஃப்ரிட்ஜே இருக்காது. ஆனால் அப்பொழுதும் நம் முன்னோர்கள் இந்த கோடை காலத்தை தாக்குப் பிடிக்க தானே செய்தார்கள்.
அப்படி என்றால் அவர்கள் என்ன பானம் அருந்தி இருக்கக்கூடும் என்று நான் ஆராய்ச்சி செய்த போது கிடைத்த ரெசிபி தான் இந்த சர்பத் ரெசிபி.
பாரம்பரிய ரெசிபி என்றால் நமக்கு அந்த சர்பத் செய்ய வேண்டுமான பொருட்களெல்லாம் எப்படி கிடைக்கும் என்று தானே யோசிக்கின்றீர்கள். கவலை வேண்டாம்…
இந்த சர்பத்திற்காக நாம் மிகவும் மெனக்கிட தேவையில்லை. நம் சமையலறையில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களே போதுமானது.
ஆனால் இந்த பொருட்கள் எல்லாம் உடல் சூட்டை தணிக்கும் என்று இத்தனை நாள் நமக்கு தெரியாமல் இருந்திருக்கும். இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்தும் பொழுது உடலுக்கு புது புத்துணர்ச்சி கிடைக்கும்.
நம் சமையலறையில் இருக்கும் பெருஞ்சீரகம், உலர் திராட்சை, ஏலக்காய் தூள் மற்றும் வெல்லம் ஆகியவற்றை கொண்டு எப்படி அசத்தலான இந்த சர்ப்பத்தை செய்யலாம் என்று பார்க்கலாம். இந்த சர்ப்பத்தின் ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் இதில் இருக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
Sarbath for Summer:
Sarbath for Summer:
பெருஞ்சீரக சர்பத்தை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
நீர்ச்சத்து குறைபாடு: இந்த கோடையில் நம் பெருமளவும் சந்திக்கும் பிரச்சனை என்பது நீர்ச்சத்து குறைபாடு. இந்த சர்பத்தில் இருக்கும் மூலப்பொருட்கள் நீர்ச்சத்து குறைபாட்டில் இருந்து உடலை காப்பதோடு மட்டுமல்லாமல் உடலை குளிர்ச்சியாகவும் வைக்கும்.
செரிமானம்: பெருஞ்சீரகமானது உணவை நன்கு செரிக்கச் செய்யும். எனவே குழந்தைகளுக்கு இந்த சர்பத்தை கொடுக்கும் பொழுது செரிமான மண்டலத்தை நன்கு தூண்டிவிடும். மேலும் வாயு பிரச்சனை போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சினைகளும் வராது.
ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள்: பெருஞ்சீரகமானது இயற்கையிலேயே ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்தது. எனவே உடலில் உள்ள செல்கள் பாதிப்படையாமல் பார்த்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க வல்லது.
உயிர் சத்துக்கள்: இந்த சர்ப்பத்தில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன. மேலும் வைட்டமின் சி, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்துக்கள் அதிகம். இதே குழந்தைகளின் எலும்புகள்,தசைகள் போன்றவற்றை வலுவடைய செய்து ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகின்றது.
மூச்சு திணறல் பிரச்சனை: சீரகமானது உடம்பில் உள்ள சளியை வெளியேற்றுவதோடு மட்டுமல்லாமல் மூச்சுக்குழாய்னை சீராக வைக்கும் தன்மை உடையது. இருமல்,சளி போன்றவற்றை அடியோடு வெளியேற்றும் தன்மை சீரகத்தில் உள்ளது.
உடலுக்கு அமைதி: பெருஞ்சீரகத்தில் இயற்கையாகவே குணப்படுத்தும் தன்மை அதிகம். இது உடலில் உள்ள நரம்புகள் போன்றவற்றை சாந்தப்படுத்தி நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கின்றது. இன்னும் சொல்ல போனால் நாள் முழுதும் ஓடி ஆடும் குழந்தைகளை இரவு நன்கு தூங்க செய்யும் சக்தி பெருஞ்சீரகத்திற்கு உண்டு.
பெருஞ்சீரகமானது மூச்சுக்காற்றினை சுத்திகரிக்க கூடியது. எனவே உடலில் உள்ள மூச்சுகளை சுத்திகரித்து உடல் மற்றும் வாயினை சுத்தமாக வைக்கக் கூடியது.
Sarbath for Summer:
- பெருஞ்சீரகம் – 2 டீ.ஸ்பூன்
- கருப்பு உலர் திராட்சை – 2 டீ.ஸ்பூன்
- வெல்லத்தூள்(ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு)
- ஏலக்காய் தூள்- 2 டீ.ஸ்பூன்.
Sarbath for Summer:
செய்முறை
1.இரண்டு டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகத்தினை நன்றாக பொடியாக்கிக் கொள்ளவும். மிக்ஸியில் அல்லது கையை வைத்து இடித்தோ பொடியாக்கிக் கொள்ளலாம்.
2.பவுலில் பெருஞ்சீரகத்தூள். உலர் திராட்சை. வெள்ளம் மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.
3.எல்லாவற்றையும் நன்றாக கலக்கி நாள் முதல் 5 மணி நேரம் அல்லது ஒரு நாள் இரவு முழுவதும் நன்றாக ஊற வைக்கவும்.
4.உலர் திராட்சைகளை நன்றாக மசித்து விடவும். இந்த தண்ணீரை வடிகட்டியால் நன்கு வடிகட்டவும்.
5.இந்த சர்பத்தினை பிரிட்ஜில் வைத்தோ அல்லது அப்படியே குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
ஏராளமான நன்மைகள் கொண்ட இந்த பாரம்பரியமான குளிர்ச்சியான பானத்தினை நீங்கள் கொடுத்த உடனே உங்கள் உடலில் தோன்றும் வித்தியாசத்தினை பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்கள் குடிக்கும் பொழுது வெயில் காலத்தில் ஏற்படும் உடல் களைப்பு, மயக்கம் போன்றவை நீங்கி புது தெம்பு ஏற்படும்.
Sarbath for Summer:
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Sarbath for Summer:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பெருஞ்சீரக சர்பத் என்றால் என்ன?
உடலை குளிர்ச்சியாக வைப்பதற்கு பழங்காலத்தில் உபயோகித்த பானம்தான் இந்த பெருஞ்சீரக சர்பத்.
இந்த சர்பத்தினை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
ஆம். நீங்கள் தாராளமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குழந்தைகளுக்கு விதவிதமான கூல்ட்ரிங்க்ஸ்கள் கொடுப்பதை காட்டிலும் இந்த சர்பத்தினை ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம்.
சர்பத்தில் உள்ள நன்மைகள் என்னென்ன?
இந்த சர்ப்பத்தில் வைட்டமின்கள் மற்றும் மினரசுகள் நிறைந்துள்ளன. மேலும் வைட்டமின் சி,மெக்னீசியம் பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்துக்கள் அதிகம். இதே குழந்தைகளின் எலும்புகள், தசைகள் போன்றவற்றை வலுவடைய செய்து ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகின்றது.
உடலை குளிர்ச்சியாக்கும் பாரம்பரிய சர்பத்
Ingredients
- பெருஞ்சீரகம்- 2 டீ.ஸ்பூன்
- கருப்பு உலர்திராட்சை - 2 டீ.ஸ்பூன்
- வெல்லத்தூள்(ஒருவயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு)
- ஏலக்காய் தூள்-2 டீ.ஸ்பூன்
Leave a Reply