ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அவ்வளவு ஏன் சட்டினியை விரும்பாத குழந்தைகள் இட்லி தோசைக்கு கூட ஜாம் வைத்து சாப்பிடுவது உண்டு. அந்த அளவிற்கு ஜாமின் மீது குழந்தைகளுக்கு தீராத பிரியம் உண்டு.
அதற்கு காரணம் ஜாமின் இனிப்பு சுவை மற்றும் குழந்தைகளை கவரும் அட்டகாசமான நிறமும் தான். ஆனால் கடைகளில் விற்கும் ஜாம்களில் இயற்கையாகவே பழங்கள் சேர்க்கப்படுகின்றன என்று விளம்பரம் செய்தாலும் அவை உண்மையிலேயே பழங்கள் தானா என்று சந்தேகம் நம் அனைவர் மனதிலும் இருக்கும்.
மேலும் நீண்ட நாள் கெடாமல் இருப்பதற்காக அவற்றில் செயற்கை நிற முட்டிகள் மற்றும் பிரசர்வேட்டிவ்ஸ் சேர்க்கப்படுவதுண்டு.
எனவே இவற்றையெல்லாம் கலக்காமல் இயற்கையான ஆரோக்கியமான ஜாம் ரெசிபியை நீங்கள் வீட்டிலேயே குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.
இதற்கு முன்பே நாம் அத்தி பழம் ஜாம், ஆப்பிள் பட்டர் போன்ற வகையான ஜாம் வகைகளை பார்த்தாலும் இன்று நாம் ஜாம் ரெசிபி குழந்தைகள் அனைவருக்கும் பிடித்தமான ஒரு பழத்தை வைத்து தான். ஆம்! ஸ்ட்ராபெரி சியா ஜாம்.
பொதுவாகவே ஸ்ட்ராபெரி பழத்தின் மணம் மற்றும் சுவையின் காரணமாக அனைத்து குழந்தைகளுக்கும் பிடிக்கும். எனவே அதை வைத்து ஜாம் செய்யும் பொழுது குழந்தைகள் கண்டிப்பாக வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்.
strawberry jam recipe in Tamil
strawberry jam recipe in Tamil
ஜாம் ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் ஸ்ட்ராபெரி மற்றும் சியா விதைகளில் உள்ள நன்மைகளை பார்க்கலாம்:
- ஸ்ட்ராபெரியில் இயற்கையாகவே வைட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே வழங்குகின்றது.
- மேலும் இதில் மாங்கனிசு, போலேட் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
- இயற்கையாகவே பெர்ரி வகை பழங்கள் ஆனது ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்ததாகும். எனவே இவை உடல் செல்கள் சிதைவடையாமல் பார்த்துக் கொள்ளும்.
- மேலும் ஸ்ட்ராபெரியில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்க கூடியது.
- மேலும் இந்த பழத்தில் நிறைந்துள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்திலிருந்து இதயத்தை காக்க வல்லது.
- இதில் சேர்க்கப்பட்டிருக்கும் சியா விதைகளில் இயற்கையாகவே ஒமேகா -3 எனப்படும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது இயற்கையாகவே சில மீன்களில் மட்டுமே காணப்படும் பிரத்தியேக சத்தாகும்.
- எனவே இவை குழந்தைகளின் ஒருமுகத் தன்மை மற்றும் கற்றலை மேம்படுத்துவதற்கான திறனை வழங்குகின்றது.
- சியா விதைகளில் நார் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் வராமல் தடுக்கக்கூடியது.
- மேலும் சியா விதைகளில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றது. மேலும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க கூடிய ஜிங்க் நிறைந்துள்ளது.
- எனவே குழந்தைகளின் தசைகளின் ஆரோக்கியமாக வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை வழங்குகின்றன.
strawberry jam recipe in Tamil
strawberry jam recipe in Tamil:
- ஸ்ட்ராபெரி பழங்கள்-2
- நாட்டுசக்கரை- ½ கப்
- சியா விதைகள்- 2 டேபிள் ஸ்பூன்
- வெண்ணிலா எசன்ஸ் -½ டீ.ஸ்பூன் (தேவைப்பட்டால்)
- லெமன் ஜூஸ்- சிறிதளவு
strawberry jam recipe in Tamil
செய்முறை
- ஸ்ட்ராபெரி பழத்தினை நன்றாக கழுவி அதன் முள் போன்ற பகுதியினை சுரண்டி எடுத்து பழத்தினை இரண்டு முதல் நான்கு துண்டுகளாக வெட்டவும்.
- மிதமான தீயில் அகலமான பாத்திரத்தில் ஸ்ட்ராபெரி பழத்தினை அதன் சார் இறங்கும் வரை மெதுவாக கிளறவும். ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை கரண்டியால் நன்கு மசித்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
- நாட்டுசர்க்கரையை தண்ணீரில் கரைத்து வடிகட்டி உங்கள் இனிப்பு சுவைக்கு ஏற்றவாறு பாத்திரத்தில் சேர்க்கவும்.
- சியா விதைகளை அதில் போட்டு லேசாக கிளறவும். சியா விதைகள் தண்ணீரை உறிஞ்சி கெட்டியாக மாறி கலவையானது ஜாம் பதத்திற்கு வரும்.
- அடுத்து ஐந்து நிமிடங்களுக்கு ஜாம் பாத்திரத்தில் ஒட்டாதபடி கிளறிக் கொண்டே இருக்கவும்.
- அடுப்பில் இருந்து பாத்திரத்தை அகற்றி வெண்ணிலா எசன்ஸ் மற்றும் லெமன் ஜூஸ் சிறிதளவு சேர்க்கவும். அசல் ஜாம் போலவே வரவேண்டும் என்றால் இவற்றை சேர்க்கலாம்.
- ஜாமினை ஒரு பாட்டிலில் அடைத்து ஆற வைக்கவும். ஆறியதும் கெட்டியாக மாறும். ஃப்ரிட்ஜில் வைத்து இரண்டு வாரங்கள் வரை இதனை பயன்படுத்தலாம்.
இந்த ரெசிபி கடைகளில் வாங்கும் ஜாமினை போலவே நல்ல சுவையை தரும். மேலும் இதில் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் சேர்ந்துள்ளதால் ஆரோக்கியமானதும் ஆகும். இதனை பிரட் , சப்பாத்தி, இட்லி, தோசை அனைத்திற்கும் பயன்படுத்தலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஸ்ட்ராபெரி ஜாம் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதா?
இதில் இயற்கையான பழம் மற்றும் சியா விதைகள் சேர்ந்திருப்பதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது.
ஸ்ட்ராபெரி பழத்திற்கு பதிலாக வேறு பழங்களை சேர்க்கலாமா?
ஆம். நீங்கள் ப்ளூபெர்ரி ,பீச் போன்ற வேறு பழங்களை வைத்தும் செய்து பார்க்கலாம். ஆனால் பழங்களின் சுவையைப் பொறுத்து ஜாமின் சுவையும் மாறுபடலாம்.
நாட்டுசக்கரை சேர்க்காமல் ஜாம் செய்யலாமா?
ஆம். நாட்டு சக்கரை சேர்க்காமலும் நீங்கள் இந்த ஜாமினை செய்யலாம்.
ஜாம் பதத்திற்கு வந்து விட்டதா என்பதை எப்படி அறிவது?
கரண்டியால் எடுத்து பிரட்டில் தடவும் பொழுது கெட்டியாக தடவும் பதத்தில் இருக்க வேண்டும்.
ஸ்ட்ராபெரி சியா ஜாம்
Ingredients
- ஸ்ட்ராபெரி பழங்கள்-2
- நாட்டுசக்கரை- ½ கப்
- சியா விதைகள்- 2 டேபிள் ஸ்பூன்
- வெண்ணிலா எசன்ஸ் -½ டீ.ஸ்பூன் தேவைப்பட்டால்
- லெமன் ஜூஸ்- சிறிதளவு
Notes
- ஸ்ட்ராபெரி பழத்தினை நன்றாக கழுவி அதன் முள் போன்ற பகுதியினை சுரண்டி எடுத்து பழத்தினை இரண்டு முதல் நான்கு துண்டுகளாக வெட்டவும்.
- மிதமான தீயில் அகலமான பாத்திரத்தில் ஸ்ட்ராபெரி பழத்தினை அதன் சார் இறங்கும் வரை மெதுவாக கிளறவும். ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை கரண்டியால் நன்கு மசித்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
- நாட்டுசர்க்கரையை தண்ணீரில் கரைத்து வடிகட்டி உங்கள் இனிப்பு சுவைக்கு ஏற்றவாறு பாத்திரத்தில் சேர்க்கவும்.
- சியா விதைகளை அதில் போட்டு லேசாக கிளறவும். சியா விதைகள் தண்ணீரை உறிஞ்சி கெட்டியாக மாறி கலவையானது ஜாம் பதத்திற்கு வரும்.
- அடுத்து ஐந்து நிமிடங்களுக்கு ஜாம் பாத்திரத்தில் ஒட்டாதபடி கிளறிக் கொண்டே இருக்கவும்.
- அடுப்பில் இருந்து பாத்திரத்தை அகற்றி வெண்ணிலா எசன்ஸ் மற்றும் லெமன் ஜூஸ் சிறிதளவு சேர்க்கவும். அசல் ஜாம் போலவே வரவேண்டும் என்றால் இவற்றை சேர்க்கலாம்.
- ஜாமினை ஒரு பாட்டிலில் அடைத்து ஆற வைக்கவும். ஆறியதும் கெட்டியாக மாறும். ஃப்ரிட்ஜில் வைத்து இரண்டு வாரங்கள் வரை இதனை பயன்படுத்தலாம்.
Leave a Reply