sugaprasavam tips:தாய் குழந்தையை சுமக்கும் பத்து மாதங்கள் அவளது வாழ்நாளில் முக்கியமான காலகட்டமாக இருக்கும்.ஏனென்றால் வீட்டில் கணவர் மட்டுமல்லாமல் மாமியார் முதலான அனைத்து உறவுகளும் நம்மை பொன் போல் பார்த்துக்கொள்ளும் பொற்காலம் எனலாம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
இதற்கு காரணம் கருவில் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே.ஏனென்றால் தாய் மகிழ்ச்சியாக இருந்தால்தான் கருவில் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியாக இருக்கும்.குழந்தையின் மகிழ்ச்சியான மனநிலை ஆரோக்கியமான குழந்தை வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும்.எனேவேதான் கர்ப்பகாலத்தில் தாய்க்கு பிடித்த உணவு வகையிலிருந்து அவளுக்கு பிடித்ததெல்லாம் பார்த்து பார்த்து செய்வர்.
சீமந்தம் என்னும் வளைகாப்பில் வித விதமான உணவு சமைத்து கர்ப்பிணி பெண்ணை சாப்பிட செய்து அனைவரும் வாழ்த்துவர்.அதே சமயம் தாய்மார்கள் செய்யும் சில காரியங்கள் கருவில் இருக்கும் குழந்தைகள் விரும்ப மாட்டார்கள்.அவை என்னெவென்பதை நாம் இப்பொழுது காணலாம்.
sugaprasavam tips:
sugaprasavam tips:
தாய் பட்டினி இருப்பது
பெரியோர்களாகிய நமக்கே ஒரு வேளை சாப்பிடவில்லையென்றால் உடலில் ஏற்படும் மாற்றங்களை சொல்லி மாளாது.சிலருக்கு மயக்கம் கூடஏற்படும்.அப்படியென்றால் சிசுவை நினைத்து பாருங்கள்.கருவின் உடல் வளர்ச்சி அனைத்தும் தாயின் உணவைசார்ந்தே இருக்கும்.தாய் சாப்பிடாமல் இருந்தால் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சரிவர கிடைக்காது.வயிற்றில் இருக்கும் குழந்தை காலால் உதைத்து சைகைகளை காண்பிக்கும்.எனவே தாய்மார்கள் பசி எடுக்கும் பொழுதெல்லாம் தவறாமல் உண்பது ஆரோக்கியமான கரு வளர்ச்சிக்கு உதவும்.
அதிகப்படியான சத்தம்
கருவில் இருக்கும் போதே இசையை கேட்டு வளரும் குழந்தைகள் புத்திசாலிகளாகவும், தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும் வளர்வார்கள் என்று ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும் தெரிவித்துள்ளனர். அதே சமயம் அதிகப்படியான இரைச்சல் குழந்தைகளுக்கு பிடிக்காது.திடீரென்று ஏற்படும் அதிகப்படியான சத்தம்,வாகனங்களின்இரைச்சல் மற்றும் ஒலிபெருக்கியின் சத்தம் போன்றவை குழந்தைக்கு அச்சம் மற்றும் பாதுகாப்பில்லாத உணர்வினை ஏற்பதும்.எனவே கர்பகாலத்தில் தாய்மார்கள் அதிகள் இரைச்சலுள்ள இடங்களை தவிர்க்கவேண்டும். மேலும் மனதை வருடும் மெல்லிய இசையினால் குழந்தையை புத்துணர்வாக்கலாம்.
இதையும் படிங்க: பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை…மற்றும் தவிர்க்கவேண்டியவை…
தாயின் மனநிலை
கருவிலிருக்கும் குழந்தை நம்மில் பாதியாகும்.எனவே நம்முடைய மனநிலை கருவிலிருக்கும் குழந்தையில் எதிரொலிக்கும்.எனவேதான் பெரியோர்கள் கர்ப்பிணி பெண்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுமென்று சொல்வர்.தாய் மகிழ்ச்சியுடன் இருந்தால் குழந்தையும்சந்தோஷமாக இருக்கும்.அதோடல்லாமல் மனதை இதமாக வைத்துக்கொள்ள நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும்.
மூன்றாம்கர்ப்பகாலத்தில்உடலுறவு
மூன்றாம் கர்ப்பகாலத்தில் அதாவது கடைசி மூன்றுமாதங்கள் உடலுறவு கொள்வதால் குழந்தை அசவுகரியமாக உணரும் என ஆய்வுகள் சொல்கின்றன.ஏனென்றால் தாயின் வயிற்றில் குழந்தை முழுமையாக வளர்ச்சியடைந்திருக்கும்.இந்த காலகட்டத்தில் கொள்ளும் உடலுறவு தாயின் வயிற்று தசைகளை இறுக்கமடைய செய்வதால் குழந்தைக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.
முறையற்ற சாலைகளில் பயணம்
அதிக மேடு பள்ளங்கள் உள்ள சாலைகளில் பயணம் செய்வதால் ஏற்படும் உடல் அதிர்வுகள் குழந்தைகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.எனவே அவ்வாறான பயணங்களை தவிர்ப்பது நல்லது. எனவே தனியாக வாகனம் ஓட்டுவதையோ மற்றும் சீரற்ற சாலைகளில் பயணம் செய்வதையோ தவிர்க்க வேண்டும்.
நீங்கள் சாப்பிடும் அனைத்து உணவுகளின் ருசியையும் உங்கள் குழந்தையும் சுவைக்கும் என்றல் ஆச்சர்யமாக உள்ளதல்லவா! ஆம்.குழந்தைகள் முதல் மூன்று மாதங்களிலேயே உணவு சுவைக்க ஆரம்பித்து விடுமென்று ஆய்வுகள் சொல்கின்றது. எனவே இந்த காலகட்டத்தில் மிகவும் காரமான உணவுகள் மற்றும் துரித உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் சேர்ப்பதே நலம்.
அதிக வெளிச்சத்தை தவிர்த்திடுங்கள்
தாயின் கருவறை இருட்டாக இருப்பதால் குழந்தையின் கண்களுக்கு வெளிச்சம் பழக்கப்படாத ஒன்று.அதிகப்படியான வெளிச்சம் தாயின் வயிற்றில் படும் பொழுது குழந்தைக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.எனவே அப்பேற்பட்ட சூழ்நிலைகளை தவிர்ப்பது நல்லது.
வயிற்றிற்கு தொந்தரவு கொடுத்தல்
தாயின் வயிற்றில் குழந்தைகளின் அசைவு கடைசி மூன்று மாதங்களில் அதிகமாக இருக்கும்.குழந்தை காலால் உதைக்கும் அசைவுகளையும் வயிற்றிற்கு வெளியில் தெளிவாக காண முடியும்.குழந்தையின் அசைவை காண்பதற்காக வயிற்றை அடிக்கடி குத்தி பார்ப்பது,அடிக்கடி அழுத்துவது போன்ற செயல்கள் குழந்தைக்கு தொந்தரவை ஏற்படுத்தும்.
படுக்கையில் அடிக்கடி புரள்வது
குழந்தையின் எடை அதிகரிக்க அதிகரிக்க தாய்க்கு படுத்து உறங்குவதில் சிரமம் ஏற்படும்.எனவே கர்ப்பிணிகள் அடிக்கடி புரண்டு புரண்டு படுப்பர்.தாய்மார்கள் புரண்டு படுக்கும் பொழுது கருவின் உள்ளிருக்கும் குழந்தைக்கும் அசவுகரியத்தைஏற்படுத்தும்.தாய்மார்கள் பகல் முழுவதும் நன்றாக வேலை செய்வது உடல் ஆரோக்கியமாவது மட்டுமல்லாமல் இரவு நல்ல தூக்கத்திற்கும் வழி வகுக்கும்.
வயிற்றின் உள்ளே இருக்கும் பொழுதே குழந்தைக்கு மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தி தருவது அவர்களின் வாழ்நாள் முழுவதுமான ஆரோக்கியமான மனநிலைக்கு வழிவகுக்கும்.எனவே மேற்கண்டவற்றை கருத்தில் கொண்டு குழந்தையின் மகிழ்ச்சி பூங்காவாக்குவது தாயாகிய நம் கடமை.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவு
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply