பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை…மற்றும் தவிர்க்க வேண்டியவை…
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
தாய்ப்பால், குழந்தைகளின் முதல் உணவு மட்டுமல்ல. முக்கியமான உணவும்கூட. கர்ப்பக்காலத்தில் உணவில் எடுத்துகொள்ளும் அதே கவனத்தைக் குழந்தை பிறந்த பின்னரும் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் தாய் உண்ணும் உணவே தாய்ப்பாலாக குழந்தைக்கு வந்து சேரும். அதுவே குழந்தையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். எனவே, பாலூட்டும் தாய்மார்களின் உணவுமுறையைப் பற்றி தெரிந்து வைத்திருப்பது நல்லது..
என்ன சாப்பிடலாம்? ஏன் சாப்பிடலாம் ?
பால் சுரப்பை அதிகரிக்க
பேரீச்சம், அத்தி போன்ற இரும்புச்சத்து நிறைந்த பழங்கள் தாய்ப்பாலின் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகமாக்கும்.
நீர்ச்சத்துகள் அதிகம் உள்ள காய்கறிகளான முள்ளங்கி, சுரைக்காய் போன்றவை பால் சுரப்பை அதிகரிக்கும்.
கல்யாண முருங்கை இலையைத் தேங்காய் எண்ணெயில் வதக்கி சாப்பிடலாம்.
மெர்க்குரி அதிகம் உள்ள சில மீன் வகைகளைத் தவிர்த்து சுறா போன்ற பால் சுரப்பைக் கூட்டும் மீன்களைச் சாப்பிடலாம்.
பப்பாளிக் காயின் தோலை நீக்கிவிட்டுச் சிறுசிறு துண்டுகளாக்கி லேசாக வேகவைத்துச் சாப்பிடலாம். இதில் குழந்தைக்குத் தேவையான வைட்டமின் ‘ ஏ’ சத்தும் அடங்கியுள்ளது.
வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அல்லது வெந்தயக்கஞ்சி வைத்து குடிக்க பால் சுரப்பு அதிகரிப்பதோடு, கருப்பையைச் சுருங்கச் செய்து கருப்பையின் அழுக்குகளையும் நீக்கும்.
பூண்டு, வெங்காயத்தை உணவில் சேர்த்துக்கொள்வதால் பால் சுரப்பை அதிகமாக்கி உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் குறைக்கும்.நெய்யில் பூண்டை தோலுடன் நன்கு வதக்கி, பின் தோலை நீக்கி அதை சாப்பிட்டு வர தாய்ப்பால் நன்கு ஊறும்.
கேழ்வரகால் தயாரித்த உணவுகளைச் சாப்பிட்டாலும் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
முளைகட்டிய பயறு வகைகள் மற்றும் சிறுதானியங்களை சிற்றுண்டிகளாக சாப்பிடலாம். இது தாய் மற்றும் குழந்தைக்கும் தேவையான சரிவிகித சத்துள்ள உணவாக அமையும்.
நார்ச்சத்து நிறைந்த கீரை வகைகள் மற்றும் காய்கறிகளான கேரட், முருங்கைக்காய் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் பால் சுரப்பு சீராக இருக்கும். மலச்சிக்கல் பிரச்னையையும் தடுக்கலாம். இதனால் குழந்தைகளுக்கும் செரிமானப் பிரச்னைகள் ஏற்படாது.
குழந்தைக்கு ஒவ்வொருமுறை பால் கொடுக்கும் முன்பும் சுத்தமான நீர் ஆகாரங்களை அதிகமாக குடிக்க வேண்டும். இதனால் பால் கட்டுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படாது.
தாய்ப்பாலை அதிகரிக்க செய்யும் பொடி
எங்களது லேக்டோ பூஸ்டர் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு தாய்ப்பாலை அதிகரிக்க செய்கிறது.பால் சுரப்பை அதிகரிக்க உதவும் அனைத்து பொருட்களும் இதில் அடங்கி இருக்கிறது. பால் சுரப்பை அதிகரிக்க செய்யும் ஹார்மோனை தூண்டும் தன்மை கொண்ட புரோ லாக்டின் சத்துகளை கொண்ட ஓட்ஸ் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இதில் சம்பா கோதுமை, ப்ரெளன் ரைஸ் போன்ற பொருட்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இது அதிக கால்சியம் சத்து கொண்டது என்பதால் பால் சுரக்க உதவும் பீட்டா குளூக்கேனை சுரக்கும். மேலும் இதில் பால் சுரக்க உதவும் எள், வைட்டமின் , சத்துகள் நிரம்பிய முந்திரி, பாதாம் போன்றவையும் சேர்க்கப்பட்டுள்ளன.
எங்களிடம் கிடைக்கும் இயற்கையான முறையில் சுத்தமாக தயாரிக்கப்பட்ட அதிக சத்துகள் நிரம்பிய இந்த லாக்டோ பூஸ்டர் பொடியை வாங்கி பயன்படுத்துங்கள்…
எங்களது லாக்டோ பூஸ்டர் மற்றும் குழந்தைகளுக்கான வெயிட் கெய்னிங் புட்ஸை 10% தள்ளுபடியில் பெற இங்கே கிளிக் செய்யவும்.
தவிர்க்க வேண்டியவை
அதிக காரமான உணவுகளை உட்கொண்டால் குழந்தைகளுக்கு செரிமானப் பிரச்னை ஏற்படும்.
பிராய்லர் கோழி மற்றும் துரித உணவுகளைக் கட்டாயமாகத் தவிர்க்கவும்.
பசும்பால் பொருள்களில் உள்ள பால் புரதம் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே பால், தயிர், பாலாடைக்கட்டி போன்ற உணவுகள் உண்பதை தாய்மார்கள் குறைத்துக்கொள்ள வேண்டும்.
அதிக அளவு காபி குடித்தால் அதிலுள்ள ‘கெஃபைன்’ என்னும் வேதிப்பொருள் தாய்ப்பாலில் கலந்து குழந்தையின் உறக்கத்தைக் கெடுக்கும்.
எண்ணெயில் பொரித்த உணவுகள் குழந்தைளுக்கு மந்ததன்மையை ஏற்படுத்துவதோடு, தாயின் உடல் எடையையும் கூட்டி விடும்.
கார்போனைட்டட் பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
முக்கியமாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் முன்னரும் மருத்துவரை ஆலோசிக்க வேண்டியது முக்கியம். ஏனெனில் குழந்தைகளுக்கு தாய்ப்பாலே உணவும் மருந்தும் என்பதை மறந்துவிட கூடாது.
குழந்தைக்கான உணவு அட்டவனைகள் காண இங்கு க்ளிக் செய்யவும். உங்கள் குழந்தையின் வயதுக்கேற்றபடி 6 மாசத்தில் இருந்து 12 மாதங்கள் வரை எல்லா வித உணவு முறைகளும் கொடுக்கப்படும்.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Very useful
தங்கள் கருத்துக்கு நன்றி.
Very useful Thank you
நன்றி
Very useful
Thanks for your comment dear.
பயனுள்ள தகவல் நன்றி
நன்றி டியர்.
மிக்க பயன்பாடான தகவல் மிக மிக நன்றிகள்
தங்களது கருத்துக்களுக்கு நன்றி டியர்.
Very very useful mam and thank u so much
Thank you dear.
Sweet corn sapidalama .. ? I mean cholam.. sapidalam ..?
Yes dear.Sapidalam.
பயனுள்ள தகவல் நனறி டாக்டா்!
you are welcome dear.
Yennoda babyku five month aaguthu milkla sugar ku bathil vellam serkalama sollunga sister
குழந்தைக்கு ஒரு வயது வரை இனிப்பு கொடுக்க கூடாது டியர்.8 மாதத்திற்கு மேல் பனை வெல்லம் மற்றும் ட்ரை டேட்ஸ் பவுடர் ஆகியவை சிறிது சேர்த்து கொள்ளலாம்.
my baby is 1 year 3 month old. i give her lactojan from 4 month to now can i give cow milk to my baby?
ஒரு வயதிற்கு மேல்தான் பசும்பால் கொடுக்க வேண்டும் டியர்.தெளிவான விளக்கத்திற்கு கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
https://tamil.mylittlemoppet.com/kulandaikku-pasumpaal-koodathu/
நன்றி.. பிறந்த குழந்தை மஞ்சள் காமாலை உள்ளது. காலை சூரிய ஒளி மில் காட்டினால் மட்டும் போதுமா….. தாய்க்கு இதற்கு காக தனியாக உணவு உள்ள தா…ஹாட்டீஸ்..இப்ப…17 விருந்து..12. வந்துள்ளது.
இ
குழந்தைகள் நல மருத்துவரை அணுகி அவர்களின் அறிவுரையினை பின்பற்றுவதே சிறந்தது டியர்.
தாய்ப்பால் கொடுப்பதை குழந்தைக்கு மறக்கடித்த பின்னர் தாயின் உடல் எடை அதிகரிக்குமா அல்லது குறையுமா?
நம் உடலிலுள்ள மெட்டபாலிசம் அளவினை பொறுத்தது டியர். ஆனால் தாய்ப்பாலை நிறுத்திய பின்பு நீங்கள் சரியான கலோரி கொண்ட உணவினை எடுத்து கொண்டு உடற்பயிற்சி மேற்கொண்டால் உடல் பருமனை கட்டுப்படுத்தலாம்.
Hi mam
My baby is 3 days born baby I have done c section I m not getting breast milk .what I should do to stimulate my breast milk
முதலில் தண்ணீர் அதிகம் அருந்த வேண்டும் டியர்.சத்தான உணவினை உட்கொள்ள வேண்டும்.பாலூட்டும் தாய்மார்கள் அருந்த வேண்டிய உணவு வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.லிங்கினை கிளிக் பண்ணுங்க டியர்.தாய்ப்பால் எனக்கு வரவில்லை என்று நினைக்காதீர்கள்.குழந்தையினை அடிக்க சுவைக்க விடுங்கள்.தாய்ப்பால் கண்டிப்பாக ஊறும்.
https://tamil.mylittlemoppet.com/paal-kodukkum-thaaiyin-unavu/