Sweetcorn Vegetable Soup in Tamil: நாங்கள் ஹோட்டலுக்கு ஒவ்வொரு முறை செல்லும் பொழுதும் என்னுடைய குழந்தைகள் தவறாமல் ஆர்டர் செய்வது என்றால் அது ஸ்வீட் கார்ன் சூப்தான்.அதன் இனிப்பு கலந்த சுவை எனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது.ஆனால் தினமும் ஹோட்டலுக்கு சென்று குடிப்பது என்பது முடியாத ஒன்றல்லவா.அப்பொழுதுதான் இதை நாம் வீட்டிலேயே செய்து கொடுக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.நாம் வீட்டிலேயே செய்து கொடுத்தால் ஸ்வீட் கார்னுடன் காய்கறிகளையும் சேர்த்து பரிமாறலாம் அல்லவா? இதோ உங்கள் குழந்தைகளுக்கான ஹெல்த்தி ஸ்வீட் கார்ன் வெஜிடபிள் சூப்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
- வேகவைத்த ஸ்வீட் கார்ன்-1/2 கப்
- பொடியாக நறுக்கிய வெங்காயம்-1
- நறுக்கிய கேரட் – 1
- நறுக்கிய பீன்ஸ் – 2-3
- பட்டர் – 1 டீ.ஸ்பூன்
- மிளகுத்தூள்- 1/4 டீ .ஸ்பூன்
- உப்பு –தேவையானளவு
இதையும் படிங்க: ஹெல்த்தியான டேஸ்டியான பாலக்கீரை சப்பாத்தி.
Sweetcorn Vegetable Soup in Tamil
செய்முறை
1.ஸ்வீட் கார்னை குக்கரில் வேக வைத்துக்கொள்ளவும்.வேகவைத்த 1/2 கப் ஸ்வீட் கார்னை மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.
2.தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
3.பானை சூடாக்கி அதில் பட்டரை போடவும்.
4.பட்டர் உருகியதும் நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
5.பின்பு நறுக்கி வாய்த்த கேரட் மற்றும் பீன்ஸை போட்டு நன்றாக வதக்கவும்.
6. அதனுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
7.அரைத்து வைத்த ஸ்வீட் கார்னை அதனுடன் சேர்த்து 4-5 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
8.கடைசியாக மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
9.ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு உப்பு சேர்க்க கூடாது.
10.வெது வெதுப்பாக பரிமாறவும்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவு
குளிர் காலத்தில் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற ரெசிபி.குழந்தைகளுக்கு எளிதில் செரிமானம் ஆவதோடு மூளையை நன்கு சுறு சுறுப்பாக்குகின்றது.இதோடு கேரட் மற்றும் பீன்ஸ் சேர்ப்பதால் கூடுதல் நன்மையளிக்கும். சூப் செய்வதற்கு வீட்டில் ஸ்வீட் கார்ன் இருக்கின்றதா என்று யோசிக்கின்றீர்கள் அப்படித்தானே?
Leave a Reply