Sweet Semiya Recipe: சேமியாவுடன் பால், நெய், நட்ஸ் மற்றும் வெல்லம் கலந்து செய்யப்படும் பாரம்பரிய ரெசிபி.சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தூள் சேர்க்கப்படுவதால் உடலுக்கு ஆரோக்கியமானது. பொதுவாக ரம்ஜான் முதலிய பண்டிகைகளின் பொழுது இந்த ரெசிபி விசேஷமாக செய்யப்படுகின்றது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
மிக எளிதாக அதே நேரம் குறைவான நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய ரெசிபியாகும். இதில் சேமியாவை பாலில் கொதிக்க வைப்பதற்கு பதிலாக தண்ணீர் சேர்க்கலாம். மேலும் சுவையை அதிகரிக்க வேண்டுமானால் உங்களுக்கு விருப்பமான பிளேவர் சேர்த்து கொள்ளலாம். உங்களுக்கு விருப்பமான நட்ஸை சுவைக்கேற்றவாறு உபயோகிக்கலாம். சிறு குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது நட்ஸை சீவி தூவுவதற்கு பதிலாக ட்ரை புரூட்ஸ் பவுடரை உபயோகிக்கலாம். இதனால் சுவைப்பதற்கு எளிதாக இருக்கும்.
- கோதுமை சேமியா – 1 கப்
- காய்ச்சிய பால்- 2 கப்
- வெல்லத்தூள்- ¼ கப்
- ஏலக்காய் மற்றும் நட்மக் பவுடர் – ¼ கப்
- நெய் – 1 டே .ஸ்பூன்
- நறுக்கிய நட்ஸ் மற்றும் உலர் திராட்சை – 2 டே .ஸ்பூன்
மை லிட்டில் மொப்பெட் ஆர்கானிக் வெல்லத்தூளை எப்படி வாங்குவது என்ற சந்தேகமா?கவலைவேண்டாம் நீங்கள் ஆர்டர் செய்தால் பிரெஷாக தயார் செய்து உங்களின் வீட்டிற்கே தேடி வந்து தருகிறோம்.
செய்முறை
1.பானில் நெய் ஊற்றி சேமியாவை போட்டு 2-3 நிமிடங்களுக்கு இடைவிடாமல் நல்ல நறுமணம் வரும்வரை கிளறவும்.
2. வெட்டி வைத்த நட்ஸ் மற்றும் உலர் திராட்சையை பானில் சேர்த்து 1 நிமிடத்திற்கு வறுக்கவும்.
3.காய்ச்சி வைத்த பாலை பானில் ஊற்றி சேமியா நன்கு வேகும்வரை சமைக்கவும்.
5. சேமியா பாலை நன்கு உறிஞ்சியவுடன் வெல்லத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.சேமியாவை மேலும் 4-5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
6.கடைசியாக ஏலக்காய் மற்றும் நட்மக் பவுடர் சேர்க்கவும்.
7.நன்றாக கலவையை கலக்கி அடுப்பை அணைக்கவும். சேமியாவை பிஸ்தா மற்றும் பாதாம் கொண்டு அலங்கரிக்கவும்.
8.சூடாக பரிமாறவும்.
சேமியாவுடன் பாலை 1:2 என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். நான் ஆர்கானிக் வெல்லத்தூளை பயன்படுத்தியுள்ளதால் நேரடியாக சேமியாவுடன் சேர்த்துள்ளேன். நீங்கள் கடைகளில் வெல்லம் வாங்கும்பொழுது காய்ச்சி வடிகட்டி பயன்படுத்த வேண்டும். வெறும் 20 நிமிடங்களில் செய்து முடிக்கக்கூடிய எளிமையான ரெசிபியாகும். குழந்தைகளுக்கு காலைஉணவுடன் சேர்த்துக்கொடுக்கலாம். இப்பொழுது வீட்டிலேயே ஸ்வீட் செய்வது மிகவும் எளிது அப்படித்தானே!
இதையும் படிங்க: குழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…
Leave a Reply