ஹெல்தி, டேஸ்டி மல்டி மில்லட் பான்கேக்
Tasty Multi Millet Pancakes for kids
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பெரும்பாலான வீடுகளில் காலை உணவு என்ன செய்வது என்பதே பெரும் சவாலாகி விடுகிறது. சரியாக சாப்பிடாத குழந்தைகளுக்கு குறைந்த நேரத்தில் அதுவும் சத்தான உணவாகத் தர வேண்டும் என்பது பெற்றோரின் எண்ணம். ஆனால், குழந்தைகளுக்கோ டேஸ்டியாக, அதேசமயம் விதவிதமாக செய்து தர வேண்டும் என்பதே எண்ணம். அனைத்து வயதினருக்கும் சத்தான, சுவையான உணவாக பான்கேக் இருக்கும். இந்த பான்கேக் செய்வது மிகவும் எளிமையான விஷயம். நம் லிட்டில் மொப்பெட் பிராண்டின் மல்டி மில்லட் பான்கேக் செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.
ஹெல்தியான மல்டி மில்லட் பான்கேக்
- லிட்டில் மொப்பெட் மல்டி மில்லட் பான்கேக் பவுடர் – ¼ கப்
- முட்டை – 1 அல்லது பால் – ¼ கப்
- வெல்லம் தூள் – 1-2 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
- நெய் – 1-2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முட்டை இல்லாத பான்கேக்
- கால் கப் பான்கேக் பவுடருடன் கால் கப் பால் சேர்த்து கலக்க வேண்டும். மாவு கட்டியதாக இருந்தால் கூடுதலாக பால் சேர்த்துக் கலக்கலாம் ஆனால் மிகவும் தண்ணியாக மாறிவிடாமல் பார்த்துக்கொள்ளவும்.
முட்டை சேர்த்த பான்கேக்
1. கால் கப் பான்கேக் பவுடருடன் ஒரு முட்டை சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும். மாவு கட்டியாக இருப்பின் சிறிதளவு பால் சேர்க்கலாம். மிகவும் கெட்டியான அல்லது நீர்த்த தன்மையுடன் மாவு இருக்க கூடாது.
2. இதில் வெல்லம் தூள் கலந்து பான்கேக் மாவை நன்கு கலக்கவும். இங்கு உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப ட்ரை டேட்ஸ் பவுடர் அல்லது தேங்காய் சர்க்கரை கூட சேர்க்கலாம்.
3. பானை சூடாக்கி அதன் நடுவில் சிறியதாக மாவை ஊற்றவும். தோசை போல தேய்க்க கூடாது.
4. நெய்யை சுற்றிலும் ஊற்றி, மிதமான தீயில் மூடி போட்டு வேக வைக்கவும். திருப்பி போட்டு அதே மாதிரி வேக விடவும்.
5. இதுபோலவே மாவை ஊற்றி பான்கேக்களை செய்யவும்.
6. இந்த பான்கேக்களின் மீது தேன் அல்லது ஹோம்மேட் டேட்ஸ் சிரப் போன்றவை ஊற்றி பழங்களுடன் சேர்த்துப் பரிமாறலாம்.
பான்கேக் செய்ய எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால், இந்த மல்டி மில்லட் பான்கேக் கொஞ்சம் ஸ்பெஷல்தான். காரணம், இது ஆர்கானிக், குழந்தைகளுக்காகவே சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டது. பேக்கிங் பவுடர், சர்க்கரை, பதப்படுத்திகள் இல்லாதது. இந்த பான்கேக் மிக்ஸ் சோளம், கோதுமை, கேழ்வரகு, தினை போன்ற சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்டது. உங்களது காலை உணவை ஆரோக்கியமாக்க இந்த மிக்ஸூடன் சில பொருட்கள் சேர்த்தால் போதும். சுவையான, சத்தான பான்கேக் தயார்.
வீட்டில் இதைத் தயாரிக்க உங்களுக்கு நேரம் இல்லையா? கவலை வேண்டாம், நாங்கள் இதைத் தயாரித்து உங்கள் வீட்டுக்கே அனுப்புகிறோம். நீங்கள் ஆர்டர் செய்த பின், ஃப்ரெஷ்ஷாக இதைத் தயாரித்து வீட்டுக்கே டெலிவரி செய்துவிடுகிறோம்.
வீட்டில் இதைச் செய்வதற்கு உங்களுக்கு நேரமில்லையா? கவலையே வேண்டாம்.
எங்களிடம் கிடைக்கும் இயற்கையான முறையில் சுத்தமாக தயாரிக்கப்பட்ட லிட்டில் மொப்பெட் மல்டி மில்லட் பான்கேக் பவுடர் வாங்கி பயன்படுத்துங்கள்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply