Teeth Grinding in Babies in Tamil:குழந்தைகள் தூங்கும் பொழுது சில நேரத்தில் பற்களை நறநறவென கடிப்பார்கள்.நாம் எதற்கு என்று தெரியாமல் திகைப்போம்.பெரும்பாலும், வளரும் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு இருக்குமென்று ஆய்வு கூறுகின்றது.அதிலும் 13 வயது முதல் 15 வயது வரை உள்ள மாணவ, மாணவியர்தான் 4 மடங்கு அதிகமாக இரவில் பற்களை கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றனர்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
Teeth Grinding in Babies in Tamil:
தூக்கத்தில் பற்களை கடிப்பதனால் ஏற்படும் பிரச்சனைகள்?
தூக்கத்தில் பற்களை கடிப்பதால் கீழ்கண்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளத்தக்க வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
- தலைவலி
- பல் தேய்மானம்
- தூக்கமின்மை
- ஈறுகளில் புண்
- பல் கூச்சம்
- பற்கள் உடைதல்
- பற்கள் விழுதல்
- முகம் மற்றும் மற்றும் தாடையில் வலி ஏற்படுதல்.
இதையும் படிங்க: வயிற்று போக்கிற்கான எளிய வீட்டு வைத்தியம்
தூக்கத்தில் பற்களை கடிப்பதற்கான காரணங்கள்
தூக்கத்தில் பற்களை கடிப்பதற்கு குறிப்பாக காரணம் இதுதான் என்று கூறமுடியாது.கீழ்கண்ட காரணங்களில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்.
மனஅழுத்தம்
மனஅழுத்தம் முக்கிய காரணமாக கூறப்படுகின்றது.குழந்தைகளுக்கு பரீட்சை பற்றிய பயம்,புதிதாக இடமாற்றம் ஆகிய சில காரணங்களால் மனஅழுத்தம் ஏற்படலாம்.
பல் முளைத்தல்
குழந்தைகளுக்கு பல் முளைக்கும் காலகட்டமான 5-6 மாத காலங்களில் பற்களை கடிப்பார்கள்.குழந்தைகளுக்கு பற்கள் விழுந்து திரும்ப முளைக்கும் காலகட்டமான 6-7 வயதில் இந்த பிரச்சனை ஏற்படலாம்.
சீரற்ற பல்வரிசை
மேல்தாடை பற்களும் கீழ்த்தாடை பற்களும் ஒழுங்கற்ற வரிசையில் இருக்கும் பொழுது இந்த பிரச்சனை ஏற்படலாம்.
உடல் வலி
குழந்தைகளுக்கு உடலில் ஏதேனும் வலி இருப்பின் பற்களை கடிக்கும் வாய்ப்புள்ளது.
மருந்துகள்
சில சமயங்களில் குறிப்பிட்ட சில மருந்துகளான மன இறுக்கத்தைத் தடுக்கும் மருந்து மாத்திரைகளின் பக்க விளைவுகளால் தூக்கத்தில் பற்களைக் கொறிக்கலாம்.
காப்ஃபைன்
காப்ஃபைன் நிறைந்த பானங்களான டீ மற்றும் காபியை ஒருவர் அதிகமாக குடித்தால், அதுவும் தூக்கத்தில் பற்களைக் கொறிக்க வைக்கும்.
மூச்சு பிரச்சனை
குழந்தைகளுக்கு மூச்சு சம்மந்தமான பிரச்சனைகள் இருந்தாலும் பற்களை கடிப்பார்கள் என ஆய்வுகள் கூறுகின்றனர்.
குழந்தைகள் இரவில் பற்களை கடித்தால் என்ன செய்ய வேண்டும்?
பெரும்பாலான குழந்தைகளுக்கு இந்த பழக்கம் தானாகவே சரியாகிவிடும்.அதனால் பயம் கொள்ள தேவையில்லை.அதே சமயம் குழந்தைகளின் மீது கவனம் செலுத்த தவற கூடாது.
- இரவில் குழந்தைகள் தூங்க செல்லும் முன் வெது வெதுப்பான நீரில் குளிக்க செய்யலாம்.இரவில் குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி அரவணைத்து தூங்க செய்யலாம்.
- குழந்தைகளுக்கு காப்ஃபைன் அதிமுள்ள உணவுகளான சாக்லேட்டுகள் போன்றவை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
- குழந்தைகளுக்கு மனஅழுத்தம் இருப்பதாக தெரிந்தால் அவர்களிடம் மனம்விட்டு பேச வேண்டும்.பள்ளி ஆசிரியர்களிடம் எடுத்து கூறி குழந்தைகளிடம் பேசச்செய்யலாம்.
- குழந்தைகளின் உடலில் நீர்சத்து குறைந்தாலும் பற்களை கடிக்க வாய்ப்புண்டு.குழந்தைகளுக்கு போதுமான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும்.
பற்களை கடிக்கும் பழக்கம் மேலும் நீடித்தால் பல்மருத்துவரால் கலந்து ஆலோசிப்பதே சிறந்தது.குழந்தைகளுக்கு ஈறுகள் சம்மந்தமான பிரச்சனைகள் இருந்தால் பல்மருத்துவரை அணுகி அதற்கேற்றவாறு சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: சளியை நீக்கும் ஓம ஒத்தடம்
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply