Vayitru Pokku remedies in Tamil: வயிற்றுபோக்கு வந்தாலே நம்மை வாட்டி வதைத்து விடும்.பெரியவர்களுக்கே அதை தாங்கும் சக்தி குறைவுதான்.குழந்தைகளுக்கு சொல்லவா வேண்டும்.வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கு வந்தால் துடித்து போய்விடுவார்கள்.உடலில் உள்ள நீர்சத்து வெளியேறி குழந்தைகளை சோர்வடைய செய்துவிடும்.எடை உடனடியாக குறைந்ததுபோல் தோன்றும்.பொதுவாக வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தாலோ, இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தாலோ மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.குழந்தைகளுக்கு என்றால் ஒரு நாளைக்கு மேல் வயிற்றுப்போக்கு நீடித்தால் உடனே குழந்தைகள் நல மருத்துவரை அணுக வேண்டும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆனால் ஆரம்ப கட்டத்திலேயே நீங்கள் வீட்டு வைத்திய முறையினை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கலாம்.அதற்கான எளிய வீட்டு வைத்திய முறையினைத்தான் நான் இங்கு கூறவிருக்கின்றேன்.வீட்டில் உள்ள எளிய பொருட்களான மோர் மற்றும் மஞ்சள் மட்டுமே இதற்கு போதுமானது. என் தோழி வாயிலாக கேட்டறிந்த எளிமையான வீட்டு வைத்தியம்தான் இந்த மோர் மஞ்சள் கலவை.என் அம்மா,குழந்தைகள் மற்றும் எனக்கும் இதன் வாயிலாக நல்ல நிவாரணம் கிடைத்தது.உங்களுக்கும் பகிர்கின்றேன்.
![Vayitru pokku home remedies in tamil](https://tamil.mylittlemoppet.com/wp-content/uploads/2020/01/pin-no-name-3.jpg)
வயிற்று போக்கிற்கான எளிய வீட்டு வைத்தியம்
- மோர்
- மஞ்சள்
- தண்ணீர் (தேவையானளவு)
இதையும் படிங்க: சளியை நீக்கும் ஓம ஒத்தடம்
Vayitru Pokku remedies in Tamil:
செய்முறை:
1.மோர் தயாரிக்க 2 டீ.ஸ்பூன் தயிருடன் 7 டீ.ஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும்.
2.தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
3.பானை சூடாக்கி மோரை சேர்க்கவும்.
4.மோரை லேசாக சூடாக்கவும்.கொதிக்க வைக்க கூடாது.தொடுவதற்கு வெது வெதுப்பாக இருந்தால் போதுமானது.
5.அடுப்பை அணைக்கவும். மோருடன் இம்மியளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
6.நன்றாக கலக்கவும்.
7.முதல் முறை 3 டீ.ஸ்பூன் மோர் பருக வேண்டும்.4 மணி நேரம் கழித்து திரும்பவும் 3 டீ.ஸ்பூன் மோர் பருக வேண்டும்.
இதையும் படிங்க: நேந்திரம் பழம் நெய் வறுவல்
குறிப்பு: 4 மணி நேரத்திற்கு மேலாக மோரை வைத்திருக்க கூடாது.திரும்பவும் பிரெஷாக தயாரித்து பருக வேண்டும்.
வயிற்று போக்கிற்கான ஆரம்ப கட்ட வீட்டு வைத்தியத்தைத்தான் நான் இங்கு கொடுத்துள்ளேன்.வைத்தியத்தை பின்பற்றியும் வயிற்றுப்போக்கு நிற்கவில்லையென்றால் மருத்துவரை அணுக சிறிதும் தாமதிக்க வேண்டாம். குழந்தைகளுக்கு உதட்டில் வறட்சி,கண்களில் வறட்சிம்,மலத்தில் ரத்தம் கலந்து வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.இந்த வீட்டு வைத்தியத்தை ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பின்பற்றவும்.குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியோர்களும் பின்பற்றலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply