Tomato Dosa in tamil: காலை மற்றும் இரவு உணவு என்றாலே நம் வீடுகளில் இட்லி மற்றும் தோசைக்கு அடுத்து தான் மற்ற தேர்வு இருக்கும். சட்டென்று பிரிட்ஜில் அரைத்து வைத்த மாவை எடுத்து தோசை வார்த்து கொடுத்தால் அம்மாக்களுக்கு பாதி வேலை குறைந்த மாதிரி இருக்கும். ஆனால் நம் குட்டீஸ்களுக்கு இன்றும் தோசை தானா? என்ற கேள்வி தான் மனதிற்குள் இருக்கும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அப்படி தோசை என்றாலே முகத்தை சுருக்கும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியூட்டும் ஒரு ஹெல்த்தியான ரெசிபி தான் இந்த தக்காளி தோசை. தக்காளி தோசை என்றவுடன் எளிதாக டிபன் செய்யும் நேரத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக வேண்டுமோ என்ற யோசனை வேண்டாம்.
Tomato Dosa in tamil:
வழக்கமாக நம் தோசை சுடும் நேரத்தில் இருந்து சிறிதளவு மெனக்கெடுத்தாலே இந்த தக்காளி தோசையினை எளிதாக செய்து முடிக்கலாம்.பார்ப்பதற்கும் நிறம் பிரகாசமாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார். தக்காளி தோசை பார்ப்பதற்கு முன்னால், தக்காளியில் நிறைந்திருக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
- தக்காளியில் அதிகளவு நிறைந்துள்ள வைட்டமின் சி எனப்படும் சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது. இதற்கு அடுத்தபடியாக இதில் நிறைந்துள்ள வைட்டமின் ஏ ஆரோக்கியமான கண்பார்வையினை வழங்கவல்லது.
- தக்காளியில் நிறைந்திருக்கும் வைட்டமின் கே எலும்புகளுக்கு வலுவூட்டுகின்றது. மேலும் ரத்த உறைதலை சீராக வைத்திருக்க உதவுகின்றது.
- தக்காளியில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளதால் உடலில் செல்கள் சிதைவடையாமல் பார்த்துக் கொள்கின்றது. மேலும் தக்காளியின் சிவப்பு நிறத்திற்கு லைகோபின் எனப்படும் வேதிப்பொருள் காரணமாக அமைகின்றது. இந்த வேதிப்பொருள் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது
- தக்காளியில் நிறைந்துள்ள நார் சத்துக்கள் உணவை எளிதில் செருமானமடை செய்து மலச்சிக்கலை தடுக்கின்றது.
- தக்காளியை நிறைந்துள்ள பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதை ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. மேலும் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கின்றது.
- தக்காளியில் நீர் சத்து அதிகம் என்பதால் உடலில் நீச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்கிறது.
- தக்காளியில் கலோரிகள் குறைவு அதேநேரம் நீர் சத்து நிறைந்த பழம் என்பதால், சிறிதளவு சாப்பிட்டாலே வயிறு நிறைந்த திருப்தியை கொடுப்பதால் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள இது சிறந்த உணவாகும்.
Tomato Dosa in tamil:
- தோசை மாவு- 2 கப்
- நறுக்கிய வெங்காயம்-1
- நறுக்கிய தக்காளி- 2
- நறுக்கிய மிளகாய் வத்தல்- 2-3
- மிளகாய்த்தூள்- கால் டீ.ஸ்பூன்
- துருவிய தேங்காய்- 2 டேபிள் ஸ்பூன்
- சீரகம் – கால் டீ.ஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி -அரை டீ.ஸ்பூன் - பூண்டு -2-3 பல்
- சமையல் எண்ணெய் -தேவையான அளவு
- உப்பு -தேவையான அளவு
- கருவேப்பிலை
Tomato Dosa in tamil
செய்முறை
- ஒரு பவுலில் வெங்காயம், தக்காளி, மிளகாய் வத்தல், இஞ்சி, பூண்டு, துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- தேவையான அளவு மிளகாய்த்தூள் சேர்த்து, தோசையின் மீது பரப்புவதற்கு ஏற்றவாறு தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
- தோசை கல்லை சூடாக்கி எப்பொழுதும் போல தோசை ஊற்றவும்.
- அதில் நாம் ஏற்கனவே கலக்கி வைத்த வெங்காய தக்காளி கலவையை மேலே சீராக பரப்பவும்
- தோசை வெந்தவுடன் திருப்பி போடவும்.
- குழந்தைகளுக்கான தக்காளி தோசை ரெடி.
குறிப்பு: இந்த தோசையை ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குழந்தைகளுக்கு கொடுக்கின்றீர்கள் என்றால் வத்தல் சேர்க்காமல் கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Tomato Dosa in tamil
Tomato Dosa in tamil:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குழந்தைகளுக்கு தக்காளி உணவில் எப்பொழுது சேர்க்க ஆரம்பிக்கலாம்?
குழந்தைகளுக்கு முதல் உணவு கொடுக்க ஆரம்பித்தவுடன் ஆறு மாத காலம் முதல் தக்காளியை உணவில் சேர்க்கலாம்.
தக்காளி தோசை குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதா?
தக்காளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் குழந்தைங்களுக்கு ஆரோக்கியமானது தான்.
தக்காளி தோசையை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் இல் கொடுத்து விடலாமா?
தாராளமாக தக்காளி தோசையை லஞ்ச் பாக்ஸில் கொடுத்து அனுப்பினால் லஞ்ச் பாக்ஸ் காலியாக வீட்டுக்கு வரும்.
Leave a Reply