குழந்தைகளுக்கான ட்ரை ப்ரூட்ஸ் (அல்லது) உலர்தானிய பொடியை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
குழந்தைக்கு ட்ரை ப்ரூட்ஸ் பொடியை வீட்டில் தயாரிப்பது எப்படி என நானும் பல்வேறு சோதனைகளை செய்து பார்த்தேன். ஆனால் அந்த முயற்சிகள் எல்லாம் சரியான முறையில் அமையவில்லை. பல்வேறு பொருட்களை சேர்த்து பார்த்தும் பலனளிக்கவில்லை. இந்நிலையில் தான் அதில் கொஞ்சம் ஜாதிக்காய் சேர்த்து தயாரித்த போது சுவையும் அதிகமாக இருந்ததுடன் நான் எதிர்பார்த்தபடியே அமைந்தது…
குழந்தைகளின் உடல் எடையை அதிகரிப்பதுடன் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் தன்மை உலர் தானிய பொடிக்கு உண்டு. இதனை குழந்தைகள், நடைபோடும் குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரும் சாப்பிடலாம். சிறுவர்களுக்கு கூட இதனை கொடுக்கலாம்…
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
உலர் தானிய பொடியை தயாரிப்பது எப்படி?
- பாதாம் 100 கிராம்
- பிஸ்தா 100 கிராம்
- முந்திரி 100 கிராம்
- குங்குமப்பூ அரை டீஸ்பூன்
- ஜாதிக்காய் 1 டீஸ்பூன் (துருவியது)
- மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் (தேவையெனில்)
செய்முறை :
1.பாதாம், முந்திரி மற்றும் பிஸ்தாவை தனித்தனியாக வறுத்துக் கொள்ளுங்கள்.
2. கடாயை சூடுபடுத்தி குங்குமப்பூவை போட்டு அதன் நிறம் மாறும் வரை வதக்கி பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்…
3. ஜாதிக்காயை நன்றாக துருவிக் கொள்ளுங்கள்.
4. வறுத்த பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். கடைசியாக துருவிய ஜாதிக்காய் பொடி மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து ஒரு சுற்று சுற்றினால் போதும்.
5. அரைக்கும் போது மிக கவனமாக இருங்கள். உலர் தானியத்தில் உள்ள எண்ணெய் தன்மை முற்றிலும் போகும் வரை நீண்ட நேரம் அரைக்க வேண்டாம்.
6. இதனை நீங்கள் நன்றாக மாவாக அரைக்க வேண்டும் என நினைக்க வேண்டாம். கைகளில் தொடும் போது கொஞ்சம் எண்ணெய் தன்மை இருப்பது போல் அதாவது உலர் தானியங்களின் தன்மை அப்படியே இருக்கும் படி அரைக்க வேண்டும்.
7. காற்றுப்புகாத டப்பாவில் போட்டு இதனை ப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். இதனை நீங்கள் ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்…
உலர் தானிய பொடியை இதுபோல் தயாரிப்பது உங்களுக்கு சிரமமாக இருக்கிறதா? கவலை வேண்டாம்… சுத்தமான முறையில் நாங்கள் தயாரித்த பொருளை உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தருகிறோம்…
உலர்தானிய பொடியை குழந்தைக்கு எப்படி கொடுப்பது?
குழந்தைகளுக்கு:
1. 8 மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உலர் தானிய பொடியை நீங்கள் கொடுக்கலாம்.
2. 3 நாள் விதிமுறையை பின்பற்றுங்கள். முதன் முதலில் கொடுக்கும் போது கஞ்சியுடன் கால் டீஸ்பூன் சேர்த்துக் கொடுங்கள். அடுத்த நாள் அளவை அரை டீஸ்பூனாக அதிகரித்துக் கொள்ளவும்.
3. இதனை நீங்கள் கஞ்சி, பான்கேக், ரொட்டி, பாயசம் போன்றவற்றில் சேர்க்கலாம்…
சிறுவர்களுக்கு :
சிறுவர்களுக்கு இதனை பாலுடன் கலந்து கொடுக்கலாம்… பாலுடன் சேர்த்து தரும் போது எனர்ஜி தரக் கூடியதாக இருக்கும்.
2 அல்லது 3 டீஸ்பூன் பவுடரை சூடான அல்லது குளிர்ந்த பாலுடன் கலந்து சிறுவர்களுக்கு தரலாம்.
அப்டேட் : எப்படி படிப்படியாக இதனை செய்வது குறித்து வீடியோவையும் நாங்கள் கொடுத்துள்ளோம்…
சத்துகள் குறித்த தகவல்கள்:
பாதாம்:
மூளை வளர்ச்சிக்கு ஏற்றது.
இதில் பாஸ்பரஸ், வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துகள் இருப்பதால் குழந்தையின் எலும்பு வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.
பளபளப்பான சருமத்தை தரக்கூடிய தன்மை பாதாமிற்கு உண்டு.
உடலில் ஏற்படும் அலர்ஜியை நீக்கும் தன்மை இதற்கு உண்டு.
முந்திரி :
இதில் காப்பர், கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் சத்துகள் உள்ளன.
உடலின் தசை, நரம்பு மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணையானது.
ரத்தசோகை வராமல் தடுக்கும் தன்மை கொண்டது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு.
பிஸ்தா :
தோலை வறண்டு போக விடாமல் தடுக்கும் தன்மை கொண்டது.
அதிகளவிலான நார்ச்சத்துகள் நிரம்பியது.
சிறந்த உயிர்வளியேற்ற எதிர்ப்பொருளை கொண்டுள்ளது.
குங்குமப்பூ :
வைட்டமின் சி, இரும்புச்சத்து, மக்னீசியம் சத்துகள் உள்ளன.
ஜாதிக்காய் :
எளிதில் ஜீரணிக்கும் தன்மை கொண்டது.
பளபளப்பான சருமத்தை தக்கவைக்கும் தன்மை கொண்டது.
எளிதில் தூக்கத்தை தரும் தன்மை கொண்டது.
மஞ்சள் :
இயற்கையான கிருமிநாசினி.
இருமல் மற்றும் சளிக்கு தீர்வு தரக் கூடியது.
அலர்ஜியை நீக்கும் தன்மை கொண்டது.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply