பெரும்பாலான பெற்றோருக்கு ஏற்படும் சந்தேகமாக இருப்பது குழந்தைக்கு திட உணவை கொடுக்கும் போது என்னவெல்லாம் கொடுக்கலாம் என யோசிப்பார்கள். ஆனால் குழந்தையின் செரிமான சக்தி என்பது குறைவாக இருக்கும் என்பதால் எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளை கொடுப்பது சிறந்தது. எந்த வயதில் என்ன உணவு கொடுக்கலாம்? என்ன தரக் கூடாது என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருப்பார்கள். அதில் முதன்மையான சந்தேகமாக இருப்பது குழந்தைக்கு உலர் தானியங்களை தரலாமா என்பது தான்.. குழந்தையின் ஆரோக்யத்திற்கு உலர் தானியங்கள் ஏற்றது என்பது தெரிந்திருந்தாலும் அதை எப்போது குழந்தைக்கு கொடுப்பது என்பது தான் பெரும் கேள்வியாக இருக்கும்…
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
உலர்தானியங்கள் குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் என்ற அச்சம் தாய்மார்களிடையே உள்ளது. ஆனால் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கும் கருத்து என்னவெனில், 6 மாத குழந்தைக்கு தாராளமாக உலர்தானியங்கள் கொடுக்கலாம் என்கிறது.
2008ல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் குழந்தைகளுக்கு ஏதேனும் அலர்ஜி இருந்தால் உலர்தானியங்களை கொடுக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அப்படி நீங்கள் கொடுப்பதாக இருந்தால் முதலில் வேர்க்கடலையை கொடுத்து அதன்பிறகு படிப்படியாக மற்ற பொருட்களை தரலாம்…
95 சதவீத குழந்தைகளுக்கு உணவு மூலம் அலர்ஜி ஏற்படுவது குறைவு என்பதால் நீங்கள் அதிகம் பயப்பட வேண்டாம்… நீங்கள் கர்ப்ப காலத்தில் இருக்கும் போது உலர் தானியங்கள் மற்றும் கொட்டைகளை சாப்பிடும் போது அது உங்கள் குழந்தைக்கு அலர்ஜியை உண்டாக்காது.. பொதுவாக இந்தியாவில் கிடைக்கும் பாதாம், முந்திரி, வேர்க்கடலை போன்ற கொட்டை சார்ந்த பொருட்களை தாராளமாக சாப்பிடலாம்… அதேபோல் பேரீச்சம்பழம், அத்திப்பழம், கொடி முந்திரி போன்ற உலர் தானிய பொருட்களையும் கொடுக்கலாம்… எனவே இதனை பார்த்து நீங்கள் பயம் கொள்ளாமல் உலர் தானியங்களை நீங்கள் தாராளமாக உங்கள் குழந்தைக்கு தரலாம்…
என் குழந்தைக்கு உலர் தானியங்களை தரலாமா?
வேர்க்கடலை
உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் வேர்க்கடலையால் அலர்ஜி இருந்தால் அது நிச்சயம் உங்கள் குழந்தைக்கும் அதிகளவிலான அலர்ஜியை ஏற்படுத்தும். ஆனால் வேர்க்கடலை என்பது உலர்தானியம் என்பதை விட பருப்பு வகைகளில் தான் வரும். எதற்கும் உங்கள் குழந்தைக்கு வேர்க்கடலை கொடுப்பதற்கு முன்னதாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து விட்டு பின்னர் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்கள் குடும்பத்தில் யாருக்கும் வேர்க்கடலையால் அலர்ஜி இல்லையென்றால் தாராளமாக 6 வது மாதத்தில் இருந்தே வேர்க்கடலை தரலாம். இதில் உங்களுக்கு குழப்பம் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்த பிறகு குழந்தையின் 8வது மாதத்தில் இருந்து கொடுக்கலாம்…
வேர்க்கடலையால் குழந்தைகளுக்கு கிடைக்கும் சத்துகள் :
1) அதிகமான புரதச்சத்து நிரம்பியது. குறிப்பாக சைவ உணவு வகைகளை சாப்பிடும் குழந்தைகளுக்கு புரதச்சத்துகள் இதிலிருந்து கிடைக்கும்.
2) நிறைவுறா கொழுப்புகள் கொண்டது. இந்த நல்லகொழுப்பு வகையானது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும்.
3) குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்றது.
4) குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை இதில் உள்ளது.
வேர்க்கடலையில் இருந்து குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் ரெசிபிகள்:
1) வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய்
2) வேர்க்கடலை கோதுமை கஞ்சி
3) வேர்க்கடலை அவல் கஞ்சி பொடி
4) சம்பா கோதுமை கஞ்சி பொடி
5) வாழைப்பழ பான்கேக்(இதில் ஆப்பிள் சாஸ்க்கு பதிலாக வேர்க்கடலை வெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்)
பாதாம் :
மரத்திலேயே உலர் தானியமாக கிடைக்கும் இந்த பாதாம் வகையானது குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்றது. அதிலும் குறிப்பாக குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு பாதாம் சிறப்பான பங்காற்றுகிறது. வேர்க்கடலையுடன் ஒப்பிடும் போது அலர்ஜியை ஏற்படுத்தக் கூடிய தன்மை இதில் குறைவு தான் என்றாலும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியம். பால் பொருட்களை விரும்பாத குழந்தைகளுக்கு மாற்றாக பாதாம் பாலை கொடுத்து வந்தால் அதுவே அவர்களுக்கு பிடித்தமான ஒன்றாகிவிடும்.
பாதாமில் இருந்து குழந்தைகளுக்கு கிடைக்கும் சத்துகள் :
1) குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும்
2) இதில் உள்ள பாஸ்பரஸ், வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துகள் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.
3) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருள் (நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளில் இதனை பார்க்கலாம்)
4) பளபளப்பான சருமத்தை தரும் தன்மை கொண்டது.
5) உயிர்வளியேற்ற எதிர்பொருளை கொண்டுள்ளதால் உடலில் சிறப்பாக செயலாற்றும்.
பாதாம் இருந்து குழந்தைகளுக்கு செய்யப்படும் ரெசிபிகள் :
1) வீட்டிலேயே தயாரிக்கப்படும் பாதாம் பால் (டாக்டரின் பரிந்துரையின் பேரில் இதனை பயன்படுத்தவும்)
2) பாதாம் பால் பான்கேக் (ஒரு வயதுக்குட்பட்ட குழந்தை எனில் தேனை தவிர்க்கவும்)
3) பாதாம் பால் யோகர்ட்
4) உலர் தானிய பொடி
5) உலர் தானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் உணவு
6) வீட்டில் தயாரிக்கப்படும் சத்து மாவு
முந்திரி :
இந்தியாவில் பெரும்பாலும் சமையலுக்கு பயன்படுத்தப்படுவது முந்திரி. குறிப்பாக இங்கு சில தரமான முந்திரி வகைகளும் விளைவிக்கப்படுகிறது. முந்திரியை பயன்படுத்தி சாஸ் மற்றும் கூழ் வகைகளை திக்காக செய்ய முடியும். மேலும் எந்த உணவுப் பொருளாக இருந்தாலும் அதன் அடர்த்தியை அதிகப்படுத்த முந்திரி உதவுகிறது. பாதாமுடன் ஒப்பிடும் போது இதை அரைப்பது எளிதானது. மேலும் இந்திய குழந்தைகளுக்கு முந்திரியால் அலர்ஜி தொந்தரவும் குறைவு தான்.
முந்திரியில் இருந்து குழந்தைகளுக்கு கிடைக்கும் சத்துகள் :
1) இதில் காப்பர், கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் சத்துகள் உள்ளன.
2) குழந்தைகளுக்கு தசை வளர்ச்சி, நரம்பு மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு பேருதவியாக உள்ளது.
3) ரத்தசோகை வராமல் தடுக்கும் தன்மை கொண்டது.
4) நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டக் கூடிய உணவுப் பொருள் இது.
1) முந்திரியில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய் (உப்பை தவிர்த்து விடுங்கள்)
2) உலர் தானிய பொடி
3) வீட்டில் தயாரிக்கப்படும் சத்துமாவு
4) சோயா பனீர் மற்றும் முந்திரியில் இருந்து தயாரிக்கப்படும் மயோனீஸ்
5) உலர் தானிய பொடியில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருள் (8 மாதங்களுக்கு பிறகு இதனை கொடுக்கவும்)
வால்நட் :
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் ஒரு பொருளாக வால்நட் தற்போது மாறி வருகிறது. பொதுவாக குழந்தைகளை விட சிறுவர்களுக்கு இதனை தரலாம். மரத்திலேயே இது விதையாக மாறிவிடுவதால் அலர்ஜியை ஏற்படுத்தும் தன்மை இதில் இருக்கிறது. ஆனாலும் இதை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது 3 நாள் விதிமுறையை பின்பற்றுங்கள். மற்ற உலர்தானிய பொருட்களுடன் ஒப்பிடும் போது இது சீக்கிரமே கெட்டுப்போகும் தன்மை கொண்டது என்பதால் பயன்படுத்துவதற்கு முன்னதாக இதனை சோதித்து கொள்ளுங்கள். மேலே குறிப்பிட்ட மற்ற உலர்தானிய பொருட்களை கொடுத்தபிறகு இறுதியாக வால்நட்டை குழந்தைக்கு கொடுங்கள்.
வால்நட்டில் இருந்து குழந்தைகளுக்கு கிடைக்கும் சத்துகள் :
1) உங்கள் குழந்தையை நீண்ட நேரம் எனர்ஜியாக வைத்திருக்கும் தன்மை கொண்டது.
2) இதில் உள்ள தாதுச்சத்துகள் குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் ரத்தசோகையை தடுப்பதுடன், உடலின் செல்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
3) ஒமேகா 3 போன்ற நல்ல கொழுப்பு சத்துகள் இதில் இருப்பதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு பேருதவி புரிகிறது.
4) இதில் உள்ள மெலடோனின் தூக்கத்தை வரவைக்க கூடியது.
வால்நட்டில் இருந்து குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் ரெசிபிகள்
1) வால்நட்டில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய்
2) வாழைப்பழ வால்நட் மில்க் ஷேக்
பிஸ்தா :
இந்தியாவில் செய்யப்படும் பெரும்பாலான இனிப்பு வகைகளில் பிஸ்தா அதிகம் சேர்க்கப்படும். ஆனால் மற்ற உலர்தானியங்களோடு ஒப்பிடும் போது இது அந்த அளவுக்கு பிரபலமாகாத ஒரு பொருளாகத் தான் இருக்கிறது. காரணம் கொட்டைகளை உடைத்து பயன்படுத்த வேண்டும் என இருப்பதால் இதனை பெரும்பாலானோர் விரும்புவதில்லை. மரத்திலேயே கொட்டைகளாக கிடைக்கும் இது குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. ஒரு வேளை உங்கள் குடும்பத்தில் யாருக்கும் இதனால் அலர்ஜி தொந்தரவு இல்லையெனில் தாராளமாக இதனை நீங்கள் உங்கள் குழந்தைக்கு அறிமுகப்படுத்தலாம்…
பிஸ்தாவில் இருந்து குழந்தைகளுக்கு கிடைக்கும் சத்துகள் :
1) சருமம் வறண்டு போகாமல் காக்கும் தன்மை கொண்டது.
2) அதிகளவிலான நார்ச்சத்துகளை கொண்டது
3) சிறந்த ஆன்டி ஆக்சிடன்ட் ஆக செயல்படும்.
பிஸ்தாவில் இருந்து குழந்தைகளுக்கு செய்யப்படும் ரெசிபிகள் :
1) உலர் தானிய பொடி
2) பிஸ்தா பால் (சர்க்கரை மற்றும் தேன் சேர்க்க வேண்டாம்)
3) பிஸ்தாவில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய் (சர்க்கரை மற்றும் தேன் சேர்க்க வேண்டாம்)
பேரீச்சம்பழம் :
பேரீச்சம்பழம் என்பது எளிதாக கிடைக்க கூடிய ஒரு பொருள். இது எல்லா சத்துகளையும் ஒன்றாக பெற்றிருப்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. இதனால் ஏற்படும் அலர்ஜி பொதுவானது தான். குழந்தைகளுக்கு ஆர்கானிக் பேரீச்சம்பழங்களை கொடுக்கலாம். ஆனால் விதைகள் இருக்கும் பழங்களை கொடுக்கும் போது எச்சரிக்கையாக இருங்கள்.
பேரீச்சம்பழத்தில் இருந்து குழந்தைகளுக்கு கிடைக்கும் சத்துகள் :
1) குழந்தைகளின் மலச்சிக்கல் பிரச்சினைக்கு தீர்வு தரும்.
2) இரும்பு சத்து அதிகம் நிரம்பி உள்ளதால் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்த சோகையை தடுக்கும்.
3) இதில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துகள் நிரம்பி இருக்கிறது.
4) ஜீரணிக்கும் தன்மை கொண்ட நார்ச்சத்துகள் பேரீச்சம்பழத்தில் அதிகம் உள்ளது.
பேரீச்சம்பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான ரெசிபிகள்:
1) பனீர் கீர்
2) சுகர்ப்ரீ ஸ்நாக்ஸ் வகை
3) பேரிக்காய் மற்றும் பேரீச்சம்பழ கூழ்
4) உலர் தானிய ஸ்நாக்ஸ்
அத்திப்பழம் :
காய்ந்த அத்திப்பழம் எளிதாக இங்கு கிடைக்கும். ஆனால் ப்ரெஷ் அத்திப்பழமானது சீசனைப் பொறுத்து கிடைக்கும். இந்த அத்திப்பழத்தை நீங்கள் மற்ற உலர் தானியங்களை போலவும், கொட்டை வகைகளை போலவும் குழந்தைக்கு தாராளமாக கொடுக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு மற்ற உணவு வகைகளை கொடுத்து பழகிய பிறகு அத்திப் பழத்தை கொடுக்கலாம். ப்ரெஷ்ஷான அத்திப்பழம் மற்றும் காய்ந்த அத்திப் பழம் என இரண்டையும் குழந்தைக்கு கொடுக்கலாம். ஆனால் எதுவாக இருந்தாலும் அது முறையாக தயாரிக்கப்பட்டு குழந்தைக்கு தருவது அவசியம்.
அத்திப்பழத்தில் இருந்து குழந்தைகளுக்கு கிடைக்கும் சத்துகள் :
1) அத்திப்பழத்தில் அதிகமான நார்ச்சத்து இருப்பதால் உணவை எளிதாக ஜீரணிக்க வைக்கும் தன்மை கொண்டது.
2) குழந்தைகளுக்கு தேவையான கால்சியம் சத்து அத்திப்பழத்தில் இருந்து கிடைக்கும்.
3) நன்றாக பழுத்த அத்திப் பழமானது இயற்கையான மலமிளக்கியாக இருப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சினைக்கு தீர்வளிக்கும்.
4) அத்திப்பழமானது சிறந்த நுண்ணுயிர் எதிரியாக இருப்பதால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் தன்மை கொண்டது.
5) அத்திப்பழத்தில் அதிகளவு வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துகள் நிரம்பி இருப்பதால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு சிறப்பான பங்கு ஆற்றுகிறது.
அத்திப் பழத்தில் இருந்து குழந்தைகளுக்கு செய்யப்படும் ரெசிபிகள் :
அத்திப்பழத்தை ஊறவைத்த நீர்
காய்ந்த அத்திப்பழ கூழ்
ஆப்ரிகாட் மற்றும் அத்திப் பழ கூழ்
வறுக்கப்பட்ட பேரிக்காய், அத்திப்பழம் மற்றும் பார்ஸ்னிப் கூழ்
இதில் குறிப்பிட்டுள்ள ரெசிபிகளை பொறுத்தவரை நீங்கள் உலர்தானிய வகைகளில் உங்களுக்கு விருப்பமானதை எல்லாம் பொடித்து குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் கூழ், கஞ்சி வகைகளில் சேர்த்துக் கொள்ளலாம். நீங்கள் உணவில் இனிப்பு சுவைக்காக சேர்க்கப்படும் சர்க்கரை மற்றும் தேனுக்காக மாற்றாக உலர் தானிய பொடியிலிருந்து தயாரிக்கப்படும் கூழ் வகையை பயன்படுத்தலாம். முதல்முறையாக குழந்தைக்கு உலர் தானியங்களை கொடுக்கும் போது ஏதேனும் ஒன்றை மட்டும் கொடுக்கவும். இரண்டு அல்லது மூன்று கொட்டை வகைகள் அல்லது உலர் தானியங்களை முதல் முறையாக கொடுக்கும் போது கொடுக்க வேண்டாம். குழந்தைகளுக்கு உலர் தானியங்களை கொடுக்கும் போது எச்சரிக்கையாக இருப்பதுடன் 3 நாள் விதிமுறையை இதிலும் பின்பற்றுங்கள். உலர் தானிய வகைகளை கொடுக்கும் போது காலை வேளையில் கொடுங்கள். ஒருவேளை அது அவர்களுக்கு ஒத்துக் கொள்ளாமல் போனால் மாலை வேளையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சரியாக இருக்கும். இந்த உலர் தானிய வகைகளை அரைக்கும்போது அதில் சின்ன சின்ன துண்டுகள் உணவுடன் சேர்ந்து விடாமல் நைசாக அரைக்கவும். மேலும் இந்த சிறு துணுக்கு குழந்தைக்கு பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும் என்பதால் கவனமாக இருங்கள்.
உங்கள் குழந்தை உலர் தானியம் மற்றும் கொட்டை வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு பழக்கப்பட்டால் ஹெல்த்தியானவைகளையே பின்னாளில் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் சத்துகள் நிரம்பிய உணவை மட்டுமே விரும்பி சாப்பிடும் நிலை உருவாகும். இதனால் அவர்களின் வாழ்நாள் முழுமைக்கும் போதுமான சத்துகள் கிடைப்பதுடன் நோய்களை தவிர்த்து விட்டு ஆரோக்கியமான வாழ்வை எதிர்கொள்ளும் சூழல் ஏற்படும்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply