Vegetable Finger foods for Babies:
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கான வெஜிடெபிள் ஃபிங்கர் ஃபுட்ஸ்
ஃபிங்கர் ஃபுட்ஸ் சாப்பிட குழந்தைகள் தயாரா என முதலில் தெரிந்துகொள்ளுங்கள். பொதுவாக 7-9 மாத குழந்தைகளுக்கு ஃபிங்கர் ஃபுட்ஸ் கொடுக்கலாம்.
- குழந்தை தானாக உட்கார்ந்தால் ஃபிங்கர் ஃபுட்ஸ் சாப்பிட குழந்தை தயார்.
- தன் நாக்கால் குழந்தை உணவை வெளியே தள்ளாமல் இருக்கும் பருவம்
- தன் விரல்களால் பிடிப்பு போல பிடிக்கும் அறிகுறி தென்பட்டாலும் குழந்தை ஃபிங்கர் ஃபுட்ஸ் சாப்பிட தயார்.
- நீங்கள் கை அசைத்தால் கையை நோக்கி தன் கண்களைச் செலுத்தி அதைப் பிடிக்க முயற்சி செய்வார்கள்.
- குழந்தைக்கு பற்கள் இல்லை என்றாலும் தன் ஈறுகளால் பழத்தை கூழாக்கும் தன்மை குழந்தைகளுக்கு தெரியும்.
இந்த அறிகுறிகள் எல்லாம் தென்பட்டால் குழந்தைகள் ஃபிங்கர் ஃபுட்ஸ் சாப்பிட தயார் என அர்த்தம்.
ஃபிங்கர் ஃபுட்ஸ் அளவுமுறை…
- குழந்தையின் கை முஷ்டி அளவுக்கு ஃப்ரூட் ஃபிங்கர் ஃபுட்ஸை சாப்பிட கொடுக்கலாம்.
- வாழைப்பழம் போன்ற வழுக்கி கொண்டே செல்லும் பழங்களை அரிசி மாவு அல்லது கோதுமை மாவில் பிரட்டி சுட்டு எடுத்து சாப்பிட கொடுக்கலாம்.
- குழந்தைகளின் வாயில் உள்ள ஈறில் மசியும் அளவுக்கு ஃபிங்கர் ஃபுட்டை மிதமாக வேக வைக்க வேண்டும்.
எதெல்லாம் ஃபிங்கர் ஃபுட்டாக கொடுக்கலாம்?
காய்கறி, பழங்கள், சிக்கன், சீஸ், ப்ரெட் ஆகியவற்றைத் தரலாம்.
கைகளால் வழுக்கி நழுவும் வாழைப்பழத்தை பிரெட் தூளில் பிரட்டிக் கொடுக்கலாம்.
ஃபிங்கர் ஃபுட்ஸை ஓரளவுக்கு வேகவைத்தும் தரலாம். குழந்தைகளுக்கு உறுதியான ஈறுகள் இருப்பதால், ஓரளவுக்கு உணவை அரைத்து சாப்பிடுவார்கள்.
குழந்தைகளுக்கான வெஜிடெபிள் ஃபிங்கர் ஃபுட்ஸ்
கேரட் ஃபிங்கர் ஃபுட்
குழந்தைக்கு தரும் முதல் உணவுகளில் கேரட்டும் ஒன்று. இந்த கேரட் உணவு குழந்தைகளுக்கு கொஞ்சம் ஸ்பெஷல்தான். இதை தனியாகவும் சமைத்துத் தர முடியும். மற்ற காய்கறிகளோடு சேர்த்தும் கொடுக்க முடியும்.
ஸ்டீம்டு கேரட் ஸ்டிக்ஸ்
கேரட்டை கழுவி, தோல் நீக்கி, அதை சற்று தடிமனான அளவில் அறிந்து கொள்ளுங்கள். அதை அப்படியே ஸ்டீம் குக் செய்யுங்கள். சூடு ஆறியதும் லேசாக மிளகுத் தூள் தூவி குழந்தைக்கு கொடுக்கலாம்.
பேக்டு கேரட் ஸ்டிக்ஸ்
கேரட்டை கழுவி, தோல் நீக்கி, அதை சற்று தடிமனான அளவில் அறிந்து கொள்ளுங்கள். அதில் சில துளிகள் தேங்காய் எண்ணெயோ கடலெண்ணெயோ விட்டுக் கொள்ளுங்கள். மிளகுத்தூள், சீரகப் பொடி, பட்டைத் தூள், உலர்ந்த இஞ்சி பொடி போன்ற ஏதாவது ஒரு சீசனிங் பொடியை மேலே தூவி 20 நிமிடங்கள் வரை ஓவனில் பேக் செய்யுங்கள்.
கேரட் தோசை
தோசை மாவில் கேரட் ஜூஸ் அல்லது கேரட் கூழைக் கலந்து சிறு சிறு வட்டமாக தவாவில் ஊற்றுங்கள். அதைச் சுற்றி நெய்த் தடவி மூடிப் போட்டு ஆவியில் வேகவிடுங்கள். இதை உங்கள் குழந்தைக்கு கொடுக்கலாம்.
கேரட் இட்லி
இட்லி மாவில் கேரட் ஜூஸ் அல்லது கேரட் கூழைக் கலந்து, இட்லி தட்டில் ஊற்ற வேண்டும். இட்லி வெந்ததும் அதை சிறு சிறு சதுரங்களாக கட் செய்து குழந்தைக்கு தரலாம்.
வீட் கேரட் பான்கேக்
கோதுமை மாவைக் கரைத்து அதில் துருவிய கேரட் சேர்த்து, சிறு சிறு வட்டங்களாக சுட வேண்டும். அதில் நெய் ஊற்றி இருபுறமும் சுட்டெடுக்கவும்.
கேரட் பட்டீஸ்
துருவிய கேரட்டை கடலைமாவு மற்றும் அரிசி மாவு கலந்து, மிளகுத் தூள் அல்லது சீரகத் தூள் கலந்து கொள்ளவும். தண்ணீர் ஊற்றி திடமான மாவுப் பதத்தில் கலக்கவும். கலந்து வைத்த மாவு மிகவும் தண்ணீராகவும் மிகவும் திடமாகவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பீட்ரூட் ஃபிங்கர் ஃபுட்
கேரட்டை எந்த முறையில் எல்லாம் சேர்த்துக் கொண்டு மேலே சின்ன சின்ன ஃபிங்கர் ஃபுட்ஸ் செய்வதைப் பற்றி பார்த்தோமோ அதைப்போல் கேரட்டுக்கு பதிலாக பீட்ரூட்டை சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஸ்டீம்டு பீட்ரூட் ஸ்டிக்ஸ்
பீட்ரூட்டை அறிந்து கொண்டு அதை வேகவிடுங்கள். மிளகுத்தூள் தூவி ஆறியதும் தரலாம்.
பேக்டு பீட்ரூட் ஸ்டிக்ஸ்
பீட்ரூட்டை கழுவி, தோல் நீக்கி, அதை சற்று தடிமனான அளவில் அறிந்து கொள்ளுங்கள். அதில் சில துளிகள் தேங்காய் எண்ணெயோ கடலெண்ணெயோ விட்டுக் கொள்ளுங்கள். மிளகுத்தூள், சீரகப் பொடி, பட்டைத் தூள், உலர்ந்த இஞ்சி பொடி போன்ற ஏதாவது ஒரு சீசனிங் பொடியை மேலே தூவி 20 நிமிடங்கள் வரை ஓவனில் பேக் செய்யுங்கள்.
உருளை ஃபிங்கர் ஃபுட்
பேக்டு உருளை வெட்ஜஸ்
உருளையைக் கழுவி, தோல் நீக்கி, அதை சற்று தடிமனான அளவில் அறிந்து கொள்ளுங்கள். அதில் சில துளிகள் தேங்காய் எண்ணெயோ கடலெண்ணெயோ விட்டுக் கொள்ளுங்கள். மிளகுத்தூள், சீரகப் பொடி, பட்டைத் தூள், உலர்ந்த இஞ்சி பொடி போன்ற ஏதாவது ஒரு சீசனிங் பொடியை மேலே தூவி 20 நிமிடங்கள் வரை ஓவனில் பேக் செய்யுங்கள்.
பேக்டு ஃப்ரென்ச் ஃப்ரைஸ்
உருளையை நன்கு கழுவி தோல் நீக்கி, மெலிதான ஸ்டிக்காக அறிந்து கொள்ளுங்கள்.
475 F அளவுக்கு ஓவனை ஃப்ரீ ஹீட் செய்யுங்கள். அறிந்து வைத்த உருளைத் துண்டுகள் மேல் எண்ணெயை ஊற்றி, அதில் மிளகுத் தூள் தூவி, 15 நிமிடங்களுக்கு இருபுறமும் ஒவனில் பேக் செய்யுங்கள்.
உருளை ஃப்ரிட்டர்ஸ்
நன்கு கழுவி உருளையைத் தோல் நீக்கி, அதை வேக வைத்து மசிக்கவும். வாணலில் எண்ணெயைச் சூடாக்கி அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அதில் சிறிது சோள மாவு, மிளகுத் தூள் அல்லது சீரகத் தூள் கலந்து நன்கு வதக்கவும். இப்போது மசித்த உருளையைச் சேர்த்து வேண்டும் வடிவத்தில் சிறிதாக திரட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
பூசணி ஃபிங்கர் ஃபுட்
பூசணியைத் தோல் உரித்து, அதில் உள்ள சதைப்பகுதியின் மேல் உள்ள கொழகொழப் பகுதியை அகற்றவும். இப்போது மெலிதான துண்டுகளாக பூசணியை அறியவும். அதில் சில துளிகள் எண்ணெய் விட்டு சீரக தூள் தடவி 20-40 நிமிடங்களுக்கு கோல்டன் பிரவுனாக பேக் செய்யவும்.
பூசணி சுஜி ஃபிங்கர்ஸ்
- பூசணி கூழ் – 1/2 கப்
- வெண்ணெய் – 1 டீஸ்பூன்
- ரவா – 1 கப்
- துருவிய சீஸ் – 1 கப்
செய்முறை
- வெண்ணெயை வாணலில் ஊற்றி உருக்கிக் கொள்ளவும்.
- அதில் பூசணி கூழைப் போட்டுக் கொள்ளவும்.
- பூசணி வெந்ததும் அதில் ரவாவை கொட்டி கிளறவும்.
- ரவாவை நன்கு கிளறி வேகவிடவும்.
- அடுப்பை அணைத்து இந்த பூசணி கலவையை ஆற விடவும்.
- பேக்கிங் பாத்திரத்தில், துருவிய சீஸைப் போட்டு அதில் கலந்து வைத்த கலவையை ஊற்றவும்.
- 180 டிகிரி அளவுக்கு ஒவனை ப்ரீ ஹீட் செய்யுங்கள். 20-25 நிமிடங்கள் வரை பேக் செய்யுங்கள்.
- மிக்ஸ்சரை கூல் செய்து, ஃபிங்கர்ஸாக கட் செய்யவும்.
பூசணி பால்ஸ்
தோசை மாவில் பூசணி கூழைக் கலந்து வைக்கவும். பணியாரத் தட்டில் இந்த மாவை ஊற்றி குட்டி குட்டி பணியாரங்களாக சுட்டெடுக்கவும்.
கார்ன் பீஸ் பட்டிஸ்
ஒரு கப் அளவுக்கு பட்டாணி மற்றும் மக்காசோளத்தை நன்கு வேக வைத்துக் கொள்ளவும். உருளையை மசிப்பது போல இதையும் மசித்துக் கொள்ளவும். மசித்ததில், தேவையான தோசை மாவைக் கலந்து, அதில் முட்டையை சேர்க்கவும் (விருப்பப்பட்டால்), பொடியாக நறுக்கிய வெங்காயம் (விருப்பப்பட்டால்), மிளகுத் தூள் கலந்து நன்கு கலக்கவும். சூடான தவாவில் சின்னச் சின்ன பான் கேக்காக ஊற்றி இருபுறமும் வேகவிட்டு சுட்டெடுக்கவும்.
பேக்டு முள்ளங்கி ஃபிங்கர்ஸ்
தண்ணீரால் முள்ளங்கியைக் கழுவி, தோல் நீக்கி அதைத் தடிமனான ஸ்டிக்காக அறிந்து கொள்ளவும். சில துளிகள் எண்ணெய் விட்டு அதில் சீரகத் தூள் சேர்த்து 20 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். மீண்டும் முள்ளங்கி ஃபிங்கர்ஸை திருப்பிப் போட்டு பேக் செய்யவும்.
பஜ்ஜி
சாதாரணமாகவே நம் எல்லோரது வீட்டிலும் செய்ய கூடிய பஜ்ஜிதான். அதில் நீங்கள் கேரட், உருளை, வெங்காயம், சர்க்கரைவள்ளி கிழங்கு, முள்ளங்கி, வாழைக்காய் போன்ற காய்கறிகளை சேர்த்து பஜ்ஜி சுடலாம்.
மிக்ஸட் வெஜ் ஃபிங்கர்ஸ்
பிடித்தமான காய்கறிகளை அறிந்து கொள்ளவும். ஓரு பவுலில் சிறிதளவு மஞ்சள் தூள், மிளகுத் தூள், சோள மாவு, தண்ணீர் அல்லது முட்டை சேர்த்து கலக்கவும். அறிந்து வைத்த காய்கறிகளை கலந்து வைத்த மாவில் நனைத்து, பிரெட் தூளில் பிரட்டி எடுத்துப் பொரித்து எடுக்கவும்.
குறிப்பு:
*ஓவென் இல்லாதவர்கள், தவாவில் இருபுறமும் சுட்டு எடுக்கலாம்.
*உப்பு அல்லது சர்க்கரை இந்த இரண்டையுமே மேற்சொன்ன ரெசிபிகளில் சேர்க்கவில்லை.
குழந்தைகளுக்கான 25 + ஃப்ரூட் ஃபிங்கர் ரெசிபி பற்றி இங்கு படிக்கலாம்
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply