Watermelon Mint Juice: தர்பூசணி பழம் என்றும், தண்ணீர் பழம் என்றும் அழைக்கப்படும் வாட்டர் மெலன் கோடை காலங்களில் மிகவும் பிரபலம். பொதுவாக சிலருக்கு சில பழங்கள் பிடிக்காது என்ற ஒரு பட்டியல் இருக்கும். ஆனால், எல்லோருக்கும் பிடித்த ஒரு பழம் என்றால் அது தண்ணீர் பழம் என்றே சொல்லலாம். பெரியவர்கள் மட்டுமல்ல நம் குட்டீஸ்களும் விரும்பி சுவைக்கும் பழம் என்றால் அது தண்ணீர் பழம் தான்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கு பிடித்த நிறம்,வாசனை மற்றும் சுவையுடன் இருப்பதே அதற்கு காரணமாகும். பழங்களைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கு அப்படியே சாப்பிட கொடுப்பதுதான் சிறந்தது. ஆனால், குறிப்பிட்ட சீசனில் மட்டும் கிடைக்கும் தண்ணீர் பழத்தினை குழந்தைகளுக்கு என்றாவது ஒரு நாள் இப்படி வாட்டர் மெலன் சர்பத்தாக செய்து கொடுத்துப் பாருங்கள். வழக்கமாக உண்பதை விட சற்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
Watermelon Mint Juice:
இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் தர்பூசணி பழத்தில் அடங்கியுள்ள சத்துக்களை பார்க்கலாம்:
- தர்பூசணி பழத்தில் 92 சதவீதம் தண்ணீர் சேர்த்து மட்டுமே இருப்பதால் குழந்தைகளின் உடலில் தண்ணீர் சேர்த்து குறையாமல் பார்த்துக் கொள்கின்றது.
- வைட்டமின் சி அதிகம் இருப்பதால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- இதில் இருக்கும் வைட்டமின் ஏ குழந்தைகளின் பார்வை திறனை அதிகரிக்க செய்கின்றது.
- தண்ணீர் பழத்தில் இருக்கும் சத்துக்கள் குழந்தைகளின் தோலுக்கு மினுமினுப்பை அளிக்கக்கூடியது.
- இதில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகம் இருப்பதால் செல்கள் சிதைவடையாமல் பார்த்துக் கொள்கின்றது.
- இதில் இருக்கும் அமினோ அமிலங்கள் ரத்த ஓட்டத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்திற்கு துணை புரிகின்றது.
- இதில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால், தசைகளின் சீரான இயக்கத்திற்கு உதவுகின்றது.
இதில் இயற்கையிலேயே நிறைந்திருக்கும் இனிப்பு சுவையானது குழந்தைகளுக்கு விளையாட தேவையான எனர்ஜியை கொடுக்கின்றது.
Watermelon Mint Juice:
- நறுக்கிய தர்பூசணி- 2 கப்
- நாட்டு சக்கரை- இரண்டு டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை சாறு-1 டேபிள்ஸ்பூன்
- உப்பு ஒரு சிட்டிகை
- நறுக்கிய புதினா இலைகள் ஒரு டேபிள் ஸ்பூன்
- தண்ணீர்
செய்முறை
- மிக்ஸி ஜாரில் தர்பூசணி, சக்கரை, லெமன் ஜூஸ் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
- நன்றாக அரைக்கவும்.
- ஒரு டம்ளரில் நறுக்கிய புதினா இலைகளை எடுத்துக் கொள்ளவும்.
- ஏற்கனவே அரைத்து வைத்திருந்த தர்பூசணி ஜூசை ஊற்றி நன்றாக கலக்கவும்
- பிரஷான வாட்டர் மேலன் சர்பத் ரெடி.
குறிப்பு: குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது புதினா இலைகளையும் மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து கொடுக்கலாம்.
Watermelon Mint Juice:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
குழந்தைகளுக்கு தண்ணீர் பழத்தினை கொடுக்கலாமா?
6 மாதத்திற்கு மேல் தர்பூசணி பழத்தினை நன்கு அரைத்து கொடுக்கலாம். எட்டு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு விதைகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தட்டில் சாப்பிட கொடுக்கலாம்.
தர்பூசணி பழம் ஆரோக்கியமானதா?
உடலில் தண்ணீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்வதுடன் அல்லாமல், உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்களை தரக்கூடியது.
இதனுடன் ஐஸ் சேர்க்கலாமா?
கோடைக்காலத்தில் நீங்கள் குடிக்கின்றீர்கள் என்றால் ஐஸ் சேர்த்து குடித்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு ஐஸ் சேர்க்காமல் கொடுப்பதுதான் சிறந்தது.
தண்ணீர்பழ சர்பத்
Ingredients
- நறுக்கிய தர்பூசணி- 2 கப்
- நாட்டு சக்கரை- இரண்டு டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை சாறு-1 டேபிள்ஸ்பூன்
- உப்பு ஒரு சிட்டிகை
- நறுக்கிய புதினா இலைகள் ஒரு டேபிள் ஸ்பூன்
- தண்ணீர்
Notes
நன்றாக அழைக்கவும்.
ஒரு டம்ளரில் நறுக்கிய புதினா இலைகளை எடுத்துக் கொள்ளவும்.
ஏற்கனவே அரைத்து வைத்திருந்த தர்பூசணி ஜூசை ஊற்றி நன்றாக கலக்கவும்
பிரஷான வாட்டர் மேலன் சர்பத் ரெடி.
Leave a Reply