Wheat Dalia kichadi for babies/கோதுமை உப்புமா
Table of Contents
hide
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ருசியான, நிறைவான, திடமான, ஊட்டச்சத்துகள் நிரம்பிய பாலன்ஸ்டு உணவு, அதாவது சமச்சீர் சத்துகள் கொண்ட கம்ப்ளீட் மீல் இந்த வீட் தாலியா கிச்சடி. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்குகூட மிகவும் நல்லது. சுவையும் அதிகம்; சத்தும் அதிகம்.
8 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வீட் தாலியா கிச்சடி கொடுக்க ஏற்றது. காலை அல்லது மதிய உணவாகத் தரலாம். இரவு தர விருப்பப்பட்டால் 8 மணிக்குள் கொடுக்க வேண்டும்.
வீட் தாலியா கிச்சடி
- உடைத்த வீட் தாலியா – ¾ கப்
- சிறு பயறு – ¼ கப்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- பெருங்காயம் – ஒரு சிட்டிகை
- பூண்டு, சிறிய துண்டு இஞ்சி, லவங்கம் சேர்த்து அரைத்தது – தலா 1
- பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1
- மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
- கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு அறிந்தது – ½ கப்
- நெய் – சிறிதளவு
செய்முறை
- வீட் தாலியா, சிறு பயறை நன்றாகக் கழுவி, 15 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.
- பிரஷர் குக்கரில், நெய்ச் சேர்க்கவும்.
- சீரகம், பெருங்காயம் சேர்த்துப் பொரிக்கவிடவும்.
- பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி, பூண்டு, லவங்க விழுதைச் சேர்த்து வதக்கவும்.
- காய்கறிகளைச் சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்க வேண்டும்.
- பிறகு ஊறவைத்த வீட் தாலியா, சிறு பயறு சேர்த்துக் கிளறவும்.
- கிளறியதும் நான்கு கப் தண்ணீர் சேர்க்கவும்.
- பிரஷர் குக்கரை மூடி 4 விசில் வரை வேகவிட்டு நிறுத்தவும்.
- ஸ்டீம் வெளியானதும் நன்கு கிளறி, குழந்தைக்கு வெதுவெதுப்பான சூட்டில் கொடுக்கலாம்.
பலன்கள்
- செரிமானத்தைச் சீர்ப்படுத்தும்.
- புரதச்சத்து நிறைந்தது.
- இதில் கலோரிகள் குறைவுதான்.
- எனர்ஜியைக் கொடுக்கும்.
- விட்டமின் பி1, பி2 நிறைந்துள்ளன.
- மாங்கனீஸ், நார்ச்சத்து ஆகியவை நிறைவாக உள்ளதால் உடல் எடை சீராகப் பராமரிக்கப்படும்.
- செரிமானக் குழாய், உணவுக் குழாய் ஆகியவை ஆரோக்கியமடையும்.
- குழந்தைகளுக்கு ஏற்படும் பசியின்மை பிரச்னைத் தீரும்.
- பெரியவர்கள், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த உள்ளவர்கள்கூட இதைச் செய்து சாப்பிடலாம்.
Leave a Reply