10 Month Baby Food Chart in Tamil:
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
கடந்த மாதம் வரை உங்கள் குழந்தைக்காக நான் கொடுத்த உணவு அட்டவணை உங்களுக்கு உபயோகமான ஒன்றாக இருந்திருக்கும் என நம்புகிறேன். உங்கள் குழந்தைக்கு இன்னும் 2 மாதங்கள் தான் உணவு அட்டவணையை நான் தயாரிக்க வேண்டி இருக்கும். அதன்பிறகு உங்கள் குழந்தைக்கு நீங்கள் பல்வேறு விதமான உணவுகளை கொடுக்கலாம். இதன் மூலம் வலைத்தளம் பல்வேறு புதுவிதமான ரெசிபிகளை உள்ளடக்கி இருக்கும். மேலும் இலவசமாக கிடைக்கும் மை லிட்டில் மொப்பெட் வலைதளத்தின் இ புக் பல்வேறு சிறப்பான உணவு வகைகளை கொண்டு வடிவமைக்கப்படும்.
குழந்தைகள் வளர வளர உணவின் மீதான ஆர்வம் குறைந்த கொண்டு தான் இருக்கும். கடந்த மாதங்களில் சாப்பிட்ட அளவிற்கு என் குழந்தை இப்போது சாப்பிடுவதில்லை என பல அம்மாக்கள் சொல்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நிறைய குழந்தைகள் பசி ஏற்படாமல் உணவின் மீது வெறுப்பு தான் அதிகரித்து இருக்கிறது என அவர்கள் சொல்வது எனக்கும் தெரியும். பசியின்மையை குறைப்பதற்கு பதிலாக குழந்தைகளுக்கு உணவின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். சாப்பிடும் போது குழந்தைகளுக்கு விளையாட்டு மூலம் பல விஷயங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டே உணவையும் அவர்களுக்கு கொடுத்து வாருங்கள்…
குழந்தைகள் முறையாக சாப்பிடுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
“குழந்தைகளின் உணவில் வித்தியாசம் காட்ட வேண்டும், உணவை வெவ்வேறு விதங்களில் சமைத்து கொடுப்பதன் மூலம் அவர்கள் சாப்பிடும் ஆர்வத்தை அதிகரிக்க முடியும்”
10 மாத குழந்தைகளுக்காக கொடுக்கப்பட்டுள்ள இந்த உணவு அட்டவணையானது உங்களின் தேவைகளை நிரப்பும் என நம்புகிறேன். மேலும் உங்களுக்கு எளிதாக இருக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
- காலிப்ளவர்
- முட்டை
- மீன்
- இறைச்சி
- பெர்ரி பழ வகைகள்
- கத்திரிக்காய்
- காளான்
உங்களுக்கு உபயோகப்படும் வகையில் சில தகவல்கள் :
* குழந்தைகளுக்கு கொடுக்கும் எல்லா உணவுகளையும் கூழாக்கி கொடுப்பதை நிறுத்தி விடுங்கள்.
* இந்த கால கட்டத்தில் குழந்தைகள் தங்கள் கைகளால் உணவை எடுத்து சாப்பிட பழக்கப்படுத்துங்கள். அதேநேரம் உங்கள் குழந்தை உணவை கீழே சிந்தி இரைத்துக் கொண்டு இருக்கும். அதை சுத்தம் செய்வதற்கு நீங்கள் தயாராக இருங்கள்.
* ஒரு நாளைக்கு 3 வேளை உணவும், 2 வேளை ஸ்நாக்ஸ் என கொடுத்து வாருங்கள். ஆனால் இதனை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று இல்லை. உங்கள் குழந்தையின் பசி மற்றும் நேரம் ஆகியவற்றை அறிந்து கொண்டு அதற்கேற்ற மாதிரி உணவை அவர்களுக்கு கொடுத்து வாருங்கள்.
* குழந்தைகளின் ஒரு வயது வரை அவர்களுக்கு தாய்ப்பால் கொடுங்கள்.
* குழந்தைகள் சாப்பிட்டு முடித்த பிறகு அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுங்கள். உணவு சாப்பிடும் போது இடையில் கூட தண்ணீர் கொடுக்கவும்.
முதல் வாரம் :
நாள் | காலை | காலை நேர ஸ்நாக்ஸ் | மதிய உணவு | மாலை நேர ஸ்நாக்ஸ் |
திங்கள் | கேழ்வரகு கஞ்சி | பேக் செய்யப்பட்ட கேரட் ஸ்டிக் | சாதம் பனீர் துண்டுகள் | வேக வைத்த தோசை |
செவ்வாய் | கோதுமை பான் கேக் | வறுக்கப்பட்ட ஆப்பிள் துண்டுகள் | மசாலா பொங்கல் | பரங்கிக்காய் ரவையால் செய்த ஸ்நாக்ஸ் |
புதன் | ரவை உப்புமா | காய்கறி சூப் | தக்காளி சாதம் | பழ ஸ்மூத்தி |
வியாழன் | ஓட்ஸ் பான் கேக் | முட்டை அல்லது பேக் செய்யப்பட்ட பழம் | நெய் சாதம் | சேனைக் கிழங்கு வறுவல் |
வெள்ளி | பாசிப் பருப்பு ரொட்டி | பேக் செய்யப்பட்ட சர்க்கரை வள்ளிக் கிழங்கு | பாலக் சாதம் | திராட்சை ஜூஸ் |
சனி | வீட்டில் தயாரித்த சத்து மாவு கஞ்சி | வறுத்த ஆப்பிள் சிப்ஸ் | சர்க்கரை பொங்கல் | காய்கறிகளால் செய்த பான் கேக் |
ஞாயிறு | பல தானியங்கள் சேர்த்த ரொட்டி | உருளைக்கிழங்கு ப்ரிட்டர்ஸ் | காய்கறி சாதம் | பப்பாளி பழ துண்டுகள் |
இரண்டாவது வாரம் :
நாள் | காலை | காலை நேர ஸ்நாக்ஸ் | மதிய உணவு | மாலை நேர ஸ்நாக்ஸ் | இரவு உணவு |
திங்கள் | ஓட்ஸ் அல்லது ரவை இட்லி | கேரட் பீட்ரூட் சூப் | தயிர் சாதம் | பேரிக்காய் துண்டுகள் | காய்கறி பரோட்டா |
செவ்வாய் | வீட்டில் தயாரித்த சத்துமாவு | சிக்கன் அல்லது காய்கறி சூப் | சாதாரண பொங்கல் | கேரட் பால்ஸ் | ஆப்பிள் ஓட்ஸ் கஞ்சி |
புதன் | வாழைப்பழ பான் கேக் | நறுக்கிய காய்கறி துண்டுகள் | மசாலா சாதம் | பழ ஜூஸ் | ஜவ்வரிசி கஞ்சி |
வியாழன் | காய்கறி தோசை | வறுத்த ஆப்பிள் துண்டுகள் | பரங்கிக்காய் சாதம் | சோளம் பச்சைப்பட்டாணி துண்டுகள் | கோதுமை ஷீரா |
வெள்ளி | கேழ்வரகு ஷீரா | பேக் செய்யப்பட்ட பீட்ரூட் துண்டுகள் | காய்கறி பொங்கல் | வாழைப்பழ துண்டுகள் | ரவை கஞ்சி |
சனி | ஓட்ஸ் கீர் | கீரை சூப் | மைசூர் பருப்பு சாதம் | கோதுமை ப்ரெட் துண்டுகள் | வீட்டில் தயாரித்த சத்துமாவு கஞ்சி |
ஞாயிறு | கம்பு கஞ்சி அல்லது தோசை | பேக் செய்யப்பட்ட பழம் | கேரட் சாதம் | சீஸ் | அரிசி கஞ்சி |
மூன்றாவது வாரம் :
நாள் | காலை | காலை நேர ஸ்நாக்ஸ் | மதிய உணவு | மாலை நேர ஸ்நாக்ஸ் | இரவு உணவு |
திங்கள் | கேழ்வரகு தோசை | காய்கறி ஸ்நாக்ஸ் | சுரைக்காய் சாதம் | தக்காளி அல்லது கீரை சூப் | ரவை கீர் |
செவ்வாய் | ஆப்பிள் பான்கேக் | வேகவைத்த சிக்கன் அல்லது கிவி பழ துண்டுகள் | சர்க்கரை பொங்கல் | தவாவில் வறுக்கப்பட்ட காய்கறிகள் | கோதுமை கஞ்சி |
புதன் | பொரி கஞ்சி | வறுக்கப்பட்ட சீஸ் துண்டுகள் | சாதம் | கேரட் ஜூஸ் | வீட்டில் தயாரித்த சத்துமாவு |
வியாழன் | ஆப்பிள் கஞ்சி | பேக் செய்யப்பட்ட ப்ரெஞ்ச் ப்ரைஸ் | நெய் சாதம் | நறுக்கிய பழ துண்டுகள் | வேக வைத்த தோசை |
வெள்ளி | பொரி கஞ்சி | கேரட் துண்டுகள் | காய்கறி சாதம் | பழ ஸ்மூத்தி | வீட்டில் தயாரித்த அரிசி கஞ்சி |
சனி | காய்கறி ஓட்ஸ் பான் கேக் | ப்ளேவர்டு யோகர்ட் | சிக்கன் சாதம் அல்லது சாதாரண சாதம் | காய்கறி சூப் | பொங்கல் |
ஞாயிறு | பிரைடு இட்லி | பேக் செய்யப்பட்ட பேரிக்காய் | ப்ளேவர்டு பொங்கல் | பிரெட் துண்டுகள் | ஊறவைக்கப்பட்ட சப்பாத்தி |
நான்காவது வாரம்:
நாள் | காலை | காலை நேர ஸ்நாக்ஸ் | மதிய உணவு | மாலை நேர ஸ்நாக்ஸ் | இரவு உணவு |
திங்கள் | ஜவ்வரிசி கஞ்சி | சிக்கன் அல்லது கீரை சூப் | சுரைக்காய் சாதம் | ஆப்பிள் துண்டுகள் | சம்பா கோதுமை கஞ்சி |
செவ்வாய் | காய்கறி உப்புமா | வேகவைத்த மீன் அல்லது கேரட் துண்டுகள் | சீரக சாதம் | நறுக்கிய பழ துண்டுகள் | பழங்கள் மற்றும் ஓட்ஸ் கஞ்சி |
புதன் | கோதுமை பான் கேக் | சீஸ் | காய்கறி சாதம் | வடை | ரவை கஞ்சி |
வியாழன் | ஓட்ஸ் இட்லி மற்றும் தயிர் | பேக் செய்யப்பட்ட சர்க்கரை வள்ளி கிழங்கு துண்டுகள் | சர்க்கரை பொங்கல் | ஆப்பிள் துண்டுகள் | வீட்டில் தயாரிக்கப்பட்ட சத்து மாவு கஞ்சி |
வெள்ளி | வெள்ளை சோள கஞ்சி | பழ ஸ்மூத்தி | மைசூர் பருப்பு சாதம் | வேக வைத்த காய்கறி துண்டுகள் | அரிசி கஞ்சி |
சனி | தானியங்களால் ஆன பான் கேக் | பாலக் கீரை சூப் | கேழ்வரகு கஞ்சி | பட்டர் ப்ரூட் | சாதம் |
ஞாயிறு | சோள கஞ்சி | வேக வைத்த முட்டை | மசாலா சாதம் | காய்கறி துண்டுகள் | ஜவ்வரிசி கஞ்சி |
உங்கள் குழந்தை பத்தாவது மாதத்தில் சரியாக சாப்பிட வில்லை என்ற கவலையா? உங்கள் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள். உங்களுக்கு உதவும் வகையில் நாங்கள் பல்வேறு தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
எங்களின் பல்வேறு ரெசிபிகளை நீங்கள் முயற்சி செய்து பார்த்து விட்டீர்களா?
உலர் தானிய பொடி ரெசிபி (உடல் எடை அதிகரிக்கும் உணவு)
இவை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் எனில் எங்களில் இலவச இ புக்கை பெறலாம். குழந்தைகளுக்கு தேவையான அனைத்து உணவுகளையும் ஒன்றாக சேர்த்து 50 உணவுகளாக உங்களுக்கு தந்திருக்கிறோம்.
இலவசமாக இ புக் தேவை எனில் எங்களை ஸப்ஸ்க்ரைப் செய்யுங்கள்.
மீதம் உள்ள மாதங்களுக்கு குழந்தைகளுக்கான உணவு அட்டவணை தேவை எனில் இங்கே கிளிக் செய்யவும்.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க..
Leave a Reply