ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
11 maada kulandai unavugal:
11வது மாத குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம். எந்தெந்த உணவுகள் எந்தக் காலத்தில் தரவேண்டும். எப்படி தரவேண்டும் என்ற பிரத்யேக லிஸ்ட் இதோ… உங்கள் குழந்தையின் உடல்நலத்தை பராமரிக்க சூப்பர், டேஸ்டி, ஹெல்த்தி உணவு அட்டவணையைப் பாருங்கள்.
குழந்தையின் அட்டகாசம் உச்சகட்டமாக இருக்கும் காலம் இது. 11வது மாதம். அதுபோல குழந்தைகளும் நிறைய திட உணவுகளைச் சாப்பிட்டும் பழகி இருப்பார்கள். சுவையை நன்கு உணர்ந்திருப்பார்கள். கசப்பு, இனிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப தான் உண்ணும் உணவுகளை அடையாளம் கண்டிருப்பார்கள். இந்த 11வது மாதத்திலிருந்து நீங்கள் வெரைட்டியான பல உணவுகளைக் கொடுக்க தொடங்கினாலும் அவற்றை சுவைக்க குழந்தைகளும் தயாராகி இருப்பார்கள்.
இதுவரை ப்யூரி போன்ற கஞ்சி, கூழ் வகை நிறைய கொடுத்திருப்பீர்கள். தற்போது கெட்டியான, திடமான உணவுகளைக் கொடுக்கலாம். ஃபிங்கர் ஃபுட்ஸ், கைகளால் மசித்து தரக்கூடிய உணவுகளைக் கொடுத்தாலும் குழந்தைகளுக்கு பிடிக்கும். அதுபோல் குழந்தையின் உடலும் ஏற்றுக்கொள்ளும். இந்தப் பருவத்தில் உங்களது 11-வது மாத குழந்தைகளுக்கு சுவையான, ஹெல்த்தியான பல உணவுகளை அறிமுகப்படுத்துங்கள்.
மருத்துவ குணங்கள் நிறைந்த மசாலாக்களை நீங்கள் உங்களது செல்ல குழந்தைகளுக்கு இந்தக் காலத்தில் தரலாம்.
எந்தெந்த மசாலாக்களை குழந்தைக்கு தரலாம்?
மஞ்சள், சீரகம், மிளகு போன்ற பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த உணவுகளைக் குழந்தைகளுக்கு இந்தப் பருவத்தில் கொடுக்கலாம்.
அதுபோல ஆர்கானிக் கேக் போன்றவையும் குழந்தைக்கு நல்லதுதான். கோதுமையால் செய்த பாஸ்தா, ஹெல்த்தியான கேக் வகைகள் போன்றவற்றையும் தரலாம்.
பான்கேக், தோசை, இட்லி என விதவிதமாக கொடுத்து அசத்துங்கள்.
இதனுடன் தாய்ப்பால் கொடுத்து வருவதும் முக்கியம். தாய்ப்பால் கொடுப்பதை முடிந்த அளவுக்கு ஒரு வயது முடியும் வரை தொடர்வது நல்லது.
வாரம் 1
நாள் | காலை உணவு | காலை ஸ்நாக்ஸ் | மதிய உணவு | மாலை ஸ்நாக்ஸ் | இரவு உணவு |
திங்கள் | ராகி ஷீரா | வாழைப்பழ மில்க்ஷேக் | ப்ளெயின் கிச்சடி | பிரெட் ஸ்டிக்ஸ் | பார்லி கஞ்சி |
செவ்வாய் | ஹோம்மேட் செர்லாக் | பெப்பர் முட்டை/ ஆப்பிள் ஃப்ரை |
ஃப்ரைட் ரைஸ் | தக்காளி ஜூஸ் | வேகவைத்த தோசை |
புதன் | வீட் பான்கேக் | பேக்டு உருளை | சாம்பார் சாதம் | தானியங்கள் ஸ்நாக்ஸ் பார் |
மிக்ஸ்டு ரொட்டி |
வியாழன் | ஸ்ப்ரவுட்ஸ் பான்கேக் | வாழைப்பழ ஃபிங்கர்ஸ் | நெய் சாதம் | ஆப்பிள் மில்க்ஷேக் | ரவா கஞ்சி |
வெள்ளி | ராகி தோசை | சிக்கன்/வெஜ் சூப் | காய்கறி கிச்சடி | ஆரஞ்சு சுளைகள் | சாகோ கீர் |
சனி | மினி இட்லி | வாழைப்பழ யோகர்ட் | ராஜ்மா சாதம் | பிரெட் ஸ்டிக்ஸ் | ஓட்ஸ் கஞ்சி |
ஞாயிறு | ப்ளெயின் பான்கேக் | சீஸ் | லவ்கி கிச்சடி | ராகி லட்டு | பிரெட் உப்புமா |
வாரம் 2
நாள் | காலை உணவு | காலை ஸ்நாக்ஸ் | மதிய உணவு | மாலை ஸ்நாக்ஸ் | இரவு உணவு |
திங்கள் | ராகி கஞ்சி | பேக்டு கேரட் ஸ்டிக்ஸ் | ஃப்ரைட் ரைஸ் | பனீர் கியூப்ஸ் | வேகவைத்த தோசை |
செவ்வாய் | வீட் பான்கேக் | தர்பூசணி ஜூஸ் | சேமியா புலாவ் | பூசணி சூஜி ஃபிங்கர் | ஓட்ஸ் கீர் |
புதன் | ரவா உப்புமா | வெஜ் சூப் | தக்காளி கிச்சடி | பழங்கள் ஸ்மூத்தி | அரிசி தானிய வகை உணவு |
வியாழன் | ஓட்ஸ் பான்கேக் | முட்டை பொடிமாஸ்/ பேக்டு ஃப்ரூட் |
ஜீரா புலாவ் | ஆர்பி ஃபிங்கர்ஸ் | சூஜி கீர் |
வெள்ளி | மூங் தால் சீலா | பேக்டு ஸ்வீட் பொட்டேட்டோ | பாலக் கிச்சடி | ஸ்ப்ரிங் ரோல்ஸ் | வீட்தாலியா கஞ்சி |
சனி | ஹோம்மேட் செர்லாக் | ரோஸ்டட் ஆப்பிள் சிப்ஸ் | இனிப்பு கேரட் சாதம் | மிக்ஸ்ட் காய்கறி பான்கேக் | பேசன் பரோட்டா |
ஞாயிறு | மிக்ஸட் கிரெயின் செர்லாக் | பொட்டெட்டோ ஃப்ரிட்டர்ஸ் | காய்கறி கிச்சடி | பப்பாளி கியூப்ஸ் | வீட் கிச்சடி |
வாரம் 3
நாள் | காலை உணவு | காலை ஸ்நாக்ஸ் | மதிய உணவு | மாலை ஸ்நாக்ஸ் | இரவு உணவு |
திங்கள் | வேகவைத்த தோசை | வெஜ் சூப் | ப்ளெயின் கிச்சடி | ஆப்பிள் ஃபிங்கர்ஸ் | ஹோம்மேட் செர்லாக் |
செவ்வாய் | சூஜி கீர் | வேகவைத்த மஞ்சள் குரு/ வெஜ் ஃபிங்கர் |
லென்டில் ரைஸ் | ஆலு போஹா டிக்கி | சீஸ் பரோட்டா |
புதன் | இட்லி | பீட்ரூட் ரோல்ஸ் | கேரட் கிச்சடி | கேரட் மில்க்ஷேக் | வீட் பாதாம் கஞ்சி |
வியாழன் | ப்ளெயின் பான்கேக் | பிரெட் ஸ்டிக்ஸ் | பீட்ரூட் சாதம் | சப்போட்டா மில்க்ஷேக் | ஆலு பரோட்டா |
வெள்ளி | சூஜி டோஸ்ட் | பூசணி ரவா ஸ்டிக்ஸ் | சுவை சேர்த்த பொங்கல் | வாழைப்பழ டிஸ்க் | ராஜ்மா சாண்ட்விச் |
சனி | ஸ்மைலி இட்லி | யோகர்ட் | ஃப்ரைட் ரைஸ் | ஷாஹி துக்டா | பொங்கல் |
ஞாயிறு | வாழைப்பழ பான்கேக் | வேகவைத்த மஞ்சள் குரு/ வெஜ் ஃபிங்கர் |
தக்காளி கிச்சடி | ஸ்வீட் பொட்டெட்டோ ஃபிங்கர் | பிரவுன் ரைஸ் தானிய வகை உணவு |
வாரம் 4
நாள் | காலை உணவு | காலை ஸ்நாக்ஸ் | மதிய உணவு | மாலை ஸ்நாக்ஸ் | இரவு உணவு |
திங்கள் | ஓட்ஸ்/ரவா இட்லி | ஃப்ரூட் மில்க்ஷேக் | தயிர் கிச்சடி | ப்யர் சிப்ஸ் | வெஜ் பராத்தா |
செவ்வாய் | ஆலு மட்டர் பரோட்டா | சிக்கன்/வெஜ் சூப் | ப்ளெயின் பொங்கல் | கேரட் பால்ஸ் | ஆப்பிள் ஓட்ஸ் கஞ்சி |
புதன் | வாழைப்பழ பான்கேக் | மிக்ஸட் வெஜ் ஃபிங்கர்ஸ் | மசாலா கிச்சடி | சுஜி பனீர் கட்லெட் | சாபுதானா கஞ்சி |
வியாழன் | மிக்ஸட் வெஜ் தோசை | ஃப்ரைட் ஆப்பிள் ரிங்ஸ் | பூசணி கிச்சடி | கார்ன் பீஸ் பட்டிஸ் | வீட் ஷீரா |
வெள்ளி | ராகி ஷீரா | பேக்டு பீட் ஸ்டிக்ஸ் | வெஜ் பொங்கல் | வாழைப்பழ பாப்ஸ் | சுஜி கஞ்சி |
சனி | ஆலு பரோட்டா | ஸ்பினாக் சூப் | மசூர் தால் கிச்சடி | வெஜிடெபிள் மச்சூரியன் | ஹோம்மேட் செர்லாக் |
ஞாயிறு | பஜ்ரா கஞ்சி/ சீலா | பேக்டு ஃப்ரூட் | கேரட் கிச்சடி | சீஸ் ரோல் | அரிசி தானிய வகை உணவு |
11 மாத குழந்தைக்கான ஃப்ரீ மீல் பிளானரை இங்கு டவுன்லோட் செய்யுங்கள்.
அதிகமாக படித்த, செய்த ரெசிப்பிகளை இங்கு காணலாம்
குழந்தைகளுக்கான ஈஸி கஞ்சி ரெசிப்பி
உலர்தானிய பவுடர் ரெசிப்பி (உடல் எடை அதிகரிக்கும் உணவு)
இந்த போஸ்ட் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், இதுபோல நிறைய சூப்பரான போஸ்ட் உங்களுக்கு தேவைப்பட்டால் ஃபேஸ்புக், டிவிட்டர், பின் இன்ட்ரஸ்ட் மற்றும் கூகுள் ப்ளஸில் எங்களைப் பின் தொடருங்கள்.
Leave a Reply